Friday, 17 July 2015

யார் தான்  நல்ல TIPS PROVIDER ..???

 உங்கள் டிப்ஸ் PROVIDER எப்படி பட்டவர்  என்று இரண்டு வாரங்களுக்கு முன் எழுதி இருந்தேன்..அதன் பின் நிறைய நண்பர்கள் அது பற்றி என்னிடம் CHAT இல் பேசினர்  ..இதுவும் போக இன்னும் சில நண்பர்கள் TIPS PROVIDER பற்றி,TRAINING CLASS எடுப்பவர்கள் பற்றி கடுமையாக திட்டி தரக்குறைவாக எழுதி விவாதித்து வருகின்றனர் ... அந்த விவாதத்தில் அவர்கள் முன் வைக்கும் ஒரு சில விஷயங்கள் திரும்பவும் தவரான பாதையை நோக்கி TRADER களை வழிநடத்துவது போல் எனக்கு தோன்றுகிறது...எனவே அது பற்றிய ஒரு பதிவு தான் இது ..

 TIPS PROVIDER  பார்த்து இவர்கள் கேட்கும் கேள்வி நீங்கள் உண்மையான TIPS PROVIDER என்றால் உங்கள் ஒரு மாத TRADE BOOK காட்டுங்கள் ??,ஏன் உங்கள் TIPS  க்கு நீங்கள் TRADE செய்ய மாட்டீர்களா ??நீங்கள் கொடுக்கும் TIPS க்கு மற்றவர்கள் தான்  TRADE செய்ய வேண்டுமா ???
இந்த கேள்விகள் நியாயமான கேள்விகள் போல் தோன்றலாம்..நீங்களும் இதே கேள்வியை TIPS PROVIDER களை பார்த்து கேட்க நினைத்திருக்கலாம்  ???
உங்களின் இந்த கேள்விக்கெல்லாம் இங்கே பதில் தரலாம் என்று நினைக்கிறன் ..இந்த பதில் எனது TRADING அனுபவத்தில்,மற்றும் முன்பு TIPS கொடுக்கும் போது கிடைத்த அனுபவத்தை வைத்து எழுதி உள்ளேன் இது எனது கருத்து மட்டுமே ..

TIPS PROVIDER ஐ பார்த்து ஒரு மாத TRADE BOOK கேட்கிறார்கள்..
ஒரு  TIPS PROVIDER ஒரு மாத TRADE BOOK காண்பித்தால் அவர் நல்லவரா ???
உதாரணமாக ..(உதாரணத்திற்கு மட்டும்..)
இங்கே நான் (ZFORMULA RAVI )TIPS கொடுப்பவனாக இருக்கிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் ...நான் ஒரு மாத TRADE BOOK (இலாபத்தோடு )இங்கே UPDATE செய்து விட்டால் நான் நல்ல TIPS PROVIDER  ஆகிவிடுவேனா ??..உடனே எல்லோரும் என்னிடம் சேர்ந்து TIPS வாங்க ஆரம்பித்து விடுவீர்கள் சரி..

அப்படியே நான் இங்கே காண்பித்த அந்த மாதம் நன்றாக இருந்த என்னுடைய (TRADE BOOK ) காரணமாக என்னிடம் நீங்கள் பணம் கட்டி சேருகிறீர்கள் ..அடுத்த மாதம்  நான்  கொடுத்த  TIPS நிறைய FAIL ஆகி உங்கள் முதலீடு மொத்தமும்  இழந்து விடுகிறீர்கள் ..  அப்போதும் இவர் போன மாதம் நன்றாக TRADE செய்திருக்கிறார்  ..இந்த மாதம் தான்  இப்படி தவறாக போய்விட்டது..என்று எதுவும் சொல்லாமல் இவர் நல்ல TIPS PROVIDER என்று அப்போதும் சொல்லுவீர்களா ????
மாட்டீர்கள் தானே ???அப்புறம் ஏன் TRADE BOOK காட்டுகிறவர் நல்லவர் என்பது போல நினைகிறீர்கள் ..
உங்களுக்கு TRADE BOOK மூலம் தான்  ஒருவர்  நல்லவரா?கெட்டவரா ? என்பது தெரிய வேண்டுமா ?

எனது நண்பர் ஒருவர் சென்னையில் மிக பெரிய SUBROKER அவருக்கு கீழ் சுமார் 800 CLIENTS TRADE செய்து வருகின்றனர் அவரது CLIENT களில் சுமார் 3 கோடிக்கு மேல் ACCOUNT இல் பணம் வைத்து TRADE செய்பவர்கள் சுமார் 16 பேர் இருகின்றனர் ..அவர்களது ACCOUNT இல் பெரும்பாலும் இழப்பே வராது .. நான் அந்த நண்பரிடம் சொன்னால் தினமும் மாலை 3.35 க்கு யாருடைய ACCOUNT இலாபத்தில் இருக்கிறதோ அந்த TRADE BOOK  ஒரு நான்கு அல்லது ஐந்து தினசரி அனுப்பி வைப்பார் ..அதை ID ஐ மட்டும் மறைத்து விட்டு இங்கே UPDATE செய்து காண்பித்தால் போதுமா ??? நான் நல்ல TIPS PROVIDER ஆகவோ ,நல்ல TRAINING CLASS  TEACHER ஆகி விடுவேனா ???
பின் எப்படி TRADE BOOK ஐ நீங்கள் அளவு கோலாக வைக்கிறீர்கள் ??

8000-10000 கோடி ரூபாய்களை நிர்வாகம் செய்யும் MUTUAL FUND திட்டங்களே முந்தைய(10 ஆண்டு கால 15 ஆண்டு கால) இலாபம்.. வரும் காலத்தில் கிடைக்கும் என்பது உறுதி கிடையாது என்று அறிவிப்பு கொடுத்து தான் இங்கே அவர்களது MUTUAL FUND  UNIT களை விற்பனை செய்கின்றனர் ,,,விளம்பரம் செய்கின்றன..  நீங்கள் கடைசி ஒரு மாத TRADE BOOK  வைத்து உங்கள் TIPS PROVIDER ஐ தேர்வு செய்ய நினைக்கிறீர்கள் ..எவ்வளவு பெரிய முட்டாள் தனமான முடிவு இது ????

கொஞ்சம் யோசித்து பாருங்கள்..

உங்கள் TIPS க்கு நீங்கள் TRADE செய்ய மாட்டீர்களா ??/ ஒரு TIPS PROVIDER ஐ பார்த்து நீங்கள் கேட்கும் பெரிய  முட்டாள் தனமான கேள்வியே இது தான் ..
ஒருவன் TRADE செய்கிறான் என்றால் அவன் ஒரு நல்ல TIPS PROVIDER ஆக இருக்க முடியாது..எப்படி என்று நீங்கள் கேட்கலாம் ..

ஒரு சின்ன உதாரணம் இங்கே ..நான் பயிற்சி வகுப்புகள் எடுத்த உடன் முதல் BATCH இல் பயின்றவர்களுக்கு ஒரு FB CHATING இல் ஒரு GROUP (ZFORMULA STUDENTS ) என்று அமைத்து கொடுத்தேன்..அவர்கள் இந்த FORMULA எப்படிசந்தை தினசரி எப்படி செயல் படும் என்பதை கலந்துரையாடி NIFTY MOVEMENT பற்றி விவாதிட்டுமே என்று.... ஆனால் அங்கு 2ஆம் நாள் எங்களது ZFORMULA படி மார்க்கெட் மேலே போகவேண்டும்..ஆனால் அங்கெ இருந்த 7 நண்பர்களும் நமது ZFORMULA VIEW படி MARKET மேலே போக போகிறது என்று சொல்ல ஒரு சகோதரர் மட்டும் இல்லை CHARTஇல் CANDLE  WEAK ஆக உள்ளது ...மார்க்கெட் கீழே வரும் என்று சொல்ல மற்ற நண்பர்கள் ZFORMULA வை நம்பவா ?இல்லை அந்த நண்பர் சொன்னபடி CHART ஐ நம்பவா என்று குழம்பி போய் அன்று TRADE ஏதும் செய்யவில்லை .முடிவில் எங்களது ZFORMULA படி MARKET மேலே சென்றது..

மாலை MARKET WEAK ஆக இருக்கும் என்று சொன்ன அந்த நண்பரிடம் PHONE செய்து கேட்கும் போது தான் தெரிந்தது அவர் 2 நாளுக்கு முன்பே 80000 ரூபாய்க்கு NIFTY PUT OPTION வாங்கி  வைத்து இருக்கின்றார் ..அதனால் இங்கே அவர் பார்க்கும் எல்லா VIEW வுமே இங்கே மார்க்கெட் இறங்க போகிறது என்பதை தான் காட்டும் ..ஏனென்றால் அங்கே அவரது பணம் 80000 ரூபாய் PUT OPTION இல் முடங்கி போய் உள்ளது ..இங்கே மார்க்கெட் இறங்கினால் மட்டுமே அவரது முதலீடு திரும்ப கிடைக்கும் இந்த இடத்தில் அவரது மனம் எப்படியாவது மார்க்கெட் இறங்கவேண்டும் என்று தான் வேண்டும்..தேடுவது எல்லாம் எந்த VIEW வந்தால் மார்க்கெட் இறங்கும் என்பதாக தான் இருக்கும்..

இங்கே ஒருவேளை அவர் எந்த POSITION உம் (அந்த PUT OPTION )இல்லாமல் இருந்தால் அவர் அன்று எங்களது ZFORMULA VIEW படி மார்க்கெட் ஏறும் என்பதை அவரும் சொல்லி இருப்பார்..

இதே போல உங்கள் நல்ல (TRADE செய்யும் )TIPS PROVIDER ஒரு 50000 ரூபாய்க்கு PUT OPTION வாங்கி வைத்து இருந்தால்..அவர் எப்படி உங்களுக்கு மார்க்கெட் ஏறும் போது CALL OPTION வாங்க சொல்லுவார் ?? அவர் கவனம் எப்படி அவர் வைத்துள்ள PUT OPTION விலை ஏறும் என்பதை யோசிக்குமா ? அல்லது உங்களுக்கு TIPS கொடுத்து உங்களை இலாபம் சம்பாதிக்க வைக்க வேண்டும் என்பதை யோசிக்குமா ????அவர் எப்படி நடுநிலையோடு TIPS கொடுக்க முடியும்???

அடுத்த உதாரணம்
இன்று மார்க்கெட் +20 புள்ளிகள் + இல் இருக்கிறது அது +140 புள்ளிகள் போகும் சூழ்நிலை இருக்கும் போது உங்கள் TIPS PROVIDER  TIPS கொடுத்து தவருதலாக NIFTY FUTURE விற்க  சொல்லிவிட்டார் ..அவரும் ஒரு 1000 QUANTITY விற்று விட்டார் ...மார்க்கெட் +60 புள்ளிகள் போகும் போது, அவர் கொடுத்த SL TRIGGER ஆகிவிட்டது  ..அவரிடம் டிப்ஸ் வாங்கிய உங்களுக்கும் இழப்பு அவருக்கும் இழப்பு..   சரி இந்த சுழலில் அவர் இழந்த 40000 ரூபாய் எப்படி அவரை அடுத்த டிப்ஸ் ஐ நிம்மதியாக கொடுக்க வைக்கும்???
உங்கள் TRADING இல் ஒரு தவறு நடந்து ஒரு இழப்பு வந்து விட்டால் ,அன்றைக்கு அடுத்தடுத்து எல்லாமே இழப்பாக முடியும்..நீங்களே இதை உணர்ந்திருப்பீர்கள்  ..
ஒரு இழப்பில் இருக்கும் ஒருவர் எப்படி முழு திறமையோடு அந்த இழப்பை மறந்து MARKET பற்றி கணிக்க முடியும்???

நீங்கள் கவனித்து இருக்கலாம் ..BROKER OFFICE இல் யாரோ ஒரு TRADER சும்மா வந்து உட்கார்ந்து இருப்பார் ..TRADE செய்ய மாட்டார் (பணம் இருக்காது)
ஆனால் அவர் சொன்ன STOCK எல்லாம் ஏறும் ??அவர் சொன்ன STOCKS எல்லாம் இறங்கும் ..அதுவே அவர் பணம் போட்டு TRADE செய்யும் போது அங்கெ அவர் தோற்று போவார் ..ஏனென்றால் நேற்று அவர் சொல்லும் போது அவரிடம் எந்த பணமும் இல்லை ..எந்த POSITION உம இல்லை அதனால் அவர் நடுநிலையுடன் இருந்தார்..அவர் சொன்னது நடந்தது..இன்று அவர் TRADER ஆக மாறும் போது இங்கே அவரது ACOUNT இல் உள்ள பணம் இழந்துவிட கூடாது என்று பதட்டத்தில் தவறு செய்கிறது ..

இன்னும் சொல்ல போனால்

பங்கு சந்தையை நிர்வாகம் செய்யும் SEBI யின் உத்தரவு படி ஒருவர் SUBBROKER ஆக ஒரு நிறுவனத்தில் சேரும் போது ,அந்த நிறுவனத்தில் அவர் பெயரில் TRADING ACCOUNT தொடங்க முடியாது ..NCFM பயிற்சி முடித்து DELEAR ஆக ஒருவர் பணியில் சேரும் போது அவருக்கு அந்த நிறுவனத்தில் TRADING ACCOUNT இருக்க கூடாது..இதுவெல்லாம் எதற்கு தெரியுமா ?? அவர்களுக்கு ACCOUNT இருந்தால் அங்கே  அவர்கள் TRADE செய்வார்கள்..அவர்கள் கவனம் அவர்களின் POSITION மீது மட்டும் தான் இருக்கும் ..மேலும் அவர்களின் TRADING சிந்தனையை அங்கே  TRADE செய்ய போகும் CLIENT மீது திணிக்க வாய்ப்புள்ளது..இதனால் இங்கே CLIENT  பாதிக்க பட கூடாது என்பதற்காக தான் ..

பெரிய BROKING நிறுவனங்களில் எனது நண்பர்கள் சிலர் பணி செய்கின்றனர் ..(ANALYST ஆகவும் DELEAR ஆகவும் )இங்கே அவர்களது பணி செய்யும் அறைக்குள் அவர்களின் செல்போன் க்கு அனுமதி கிடையாது..ஏனென்றால் இவர்கள் வேறு எங்காவது ACCOUNT வைத்து இருந்து PHONE மூலம் ORDER போட்டு TRADE செய்தால் அவர்களது கவனம் சிந்தனை அவர்கள் அங்கு அவர்களது சொந்த அக்கௌண்டில்  வாங்கிய அவர்களது SHARE இன் மீது தான் இருக்கும் ..இங்கே CLIENT மீதான இவர்கள் கவனம் குறையும் என்பதற்காக தான்...

இப்படி  TRADE செய்து கொண்டே TIPS கொடுக்கும்  போது இவ்வளவு பிரச்னை இருக்கும் போது எப்படி நீங்கள் TIPS  கொடுக்கும் நபர் TRADE செய்ய வேண்டும் நினைக்கிறீர்கள் ???

உண்மையில் ஒருவன் TIPS கொடுக்கிறான் என்றால் அவனால் TRADE செய்ய முடியாது ..ஒருவன் TRADER ஆக இருக்கிறான் என்றால் அவனால் நல்ல விதமாக TIPS கொடுக்க முடியவே முடியாது..இது தான் உண்மை..

இதெல்லாம் விட்டு விட்டு ஒருவன் TRADE BOOK காட்டினால் அவன் நல்லவன் என்றும் ..அவன் TIPS க்கு அவனே TRADE செய்பவனெல்லாம் நல்லவன் என்று நினைக்காதீர்கள் ..

இங்கே பிரச்சனை என்னவென்றால் நல்லவன் ஒரு மடங்கு என்றால் போலிகள் 1000 மடங்கு இருகின்றனர் அது தான் பிரச்சனை ..உங்களின் குழப்பத்திற்கு காரணமும் இதுதான்... இங்கே நீங்கள் பார்ப்பது எல்லாம் போலி என்பதால் நல்லது எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போனதன் விளைவு தான் இது..

இவ்வளவு பிரச்சனைகளை சொல்லிவிட்டு இங்கே தீர்வினை சொல்லாமல் விட்டால் இந்த கட்டுரை போலி TIPS PROVIDER க்கு சாதகமாக எழுதப்பட்டது போல் ஆகிவிடும் எனவே நல்ல TIPS PROVIDER யார் என்று  என்னிடம் கேட்டால்..எனது கருத்தின் படி...(கவனிக்க : இது எனது கருத்து மட்டும் தான் )

எவன் ஒருவன் தனது TRADE BOOK அல்லது CONTRACT NOTE UPDATE செய்கிறானோ அவன் உங்களை ஏமாற்ற தயாராகிவிட்டான் என்று அர்த்தம்..

எவன் ஒருவன் NIFTY ,STOCKS,FUTURES,OPTIONS,CRUDEOIL,GOLD,SILVER (ALL MCX,CURRENCY ,CURRENCY FOREX   )என எல்லாவற்றிலும் நான்  TIPS கொடுக்கிறேன் என்று சொல்கிறானோ..அவன் சொல்லுவது முழு பொய் ....யாராலும் எல்லா MARKET இலும் சிறப்பாக செயல்பட முடியாது ..

மார்க்கெட் ஆரம்பிக்கும் முன்பே LEVEL தருகிறேன் EXCEL SHEET இல் தருகிறேன் என்றால் அவர்களிடம்  உங்கள் பணத்தை இழக்க வேண்டாம்..மார்க்கெட் நடக்கும் போது டிப்ஸ் பெறுவது தான் உங்கள் பணத்திற்கு ஓரளவு உத்திரவாதம் ..

உண்மையான TIPS PROVIDER ஐ கண்டு பிடிக்க ஒரு எளிய வழி

உங்களிடம் TIPS தருகிறேன் 2 நாள் FREE TRIAL வாங்கி பாருங்கள் என்று சொல்லுபவரிடம் நீங்கள் கேளுங்கள் ப்ரீ TRIAL கொடுங்கள் என்று..

ஆனால் நீங்கள் ஒரு 3 STOCKS பெயரை சொல்லி அவர்கள் கொடுக்கும் FREE TRIAL  இந்த 3 STOCK இல் மட்டும் கொடுக்க சொல்லுங்கள் ..இல்லை அவர்கள் ஏதாவது ஒரு 3 STOCK (அவர்கள் இதற்கும் முன் நன்கு பயிற்சி பெற்ற STOCK ஆக இருக்கலாம் ) சொல்ல சொல்லி இந்த 3 STOCK MOVEMENT பற்றி சொல்ல சொல்லுங்கள் ,,,MOVEMENT என்றால் LEVELS அல்ல ..

இந்த 3 STOCK க்கும் LIVE MARKET இல் TRADE ஆகி கொண்டு இருக்கும் போது BUYING PRICE ,SELLING PRICE ,SL இந்த மூன்றும் அனுப்ப வேண்டும் 2 நாள் FREE TRIAL இல் இந்த 3 STOCKS இல் மட்டும் ஒரு 4 TIPS அவர் கொடுத்து 3 PASS ஆகி ஓன்று FAIL ஆனால் அவர் தான் சிறந்த TIPS PROVIDER ..
இந்த நபரை நம்பி நீங்கள் TIPS வாங்கலாம் ..

இது தான் நல்ல TIPS PROVIDER பற்றி எனது கருத்து..

TIPS PROVIDERS பற்றி பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள் பற்றி  எனது  மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன் ..இவை எனது கருத்துகள் தான் இது ...இதை நீங்கள் கட்டாயம் ஏற்று கொள்ள வேண்டியது இல்லை...இந்த கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் இந்த பதிவை பகிரவும் ..

தோழமையுடன்
ZFORMULA RAVI