Thursday 26 March 2015

Share Trading Rules 4 (1)

இன்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு stock trading rule  (4) update செய்திருந்தேன் ..அதன் படி LT TRADING சரியாக நடந்தது..ஆனால் IDEA ஏன் அப்படி நடக்க வில்லை என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்...

சரியான கேள்வி
நான் CHARTS CHECK செய்யும் போது இதற்கான விடை கிடைத்தது..

கவனிக்க இங்கு நேற்றைய LT 5 MINS CHART மற்றும் IDEA 5 MINS CHART இணைத்துள்ளேன். கவனித்து பாருங்கள்.

நேற்று மாலை 2.30-3.15 மணிக்குள் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் போது LT NIFTY யுடன் இணைந்து அதுவும்  கிழே இறங்கி உள்ளது.. ஆனால் NEGATIVE (-)ஆகவில்லை.+ இலேயே முடிந்துள்ளது..

ஆனால் IDEA வின் CHART பாருங்கள்..MARKET இறங்கும் நேரத்தில் இது ஏறியுள்ளது.176-182(3% ஏறுகிறது.)எனில் இது ஏதோ NEWS படி ஏறுகிறது...அதே ஏற்றம் இன்று காலை தொடங்கியவுடன் 3%UP ஆக OPEN ஆகிறது.

இரண்டிற்கும் வித்தியாசம்..LT மார்கெட்டின் போக்கில் உள்ளது..மார்க்கெட் இறங்கினால் இறங்குகிறது..ஆனால் பெரிய இறக்கத்திற்கு தயராக இல்லை..அதனால் MARKET ஏறும் போது அது வேகமாக ஏறுகிறது..

ஆனால் IDEA மார்க்கெட்டின் போக்கிலேயே இல்லை அது தகவல்களின் (NEWS BASED ) படி TRADE ஆகிறது..அந்த தகவல்களின் பலம் எவ்வளவோ அவ்வளவு மட்டும் ஏறியது..(3+3=6%) அதன் பின் PROFIT BOOKING காரணமாக இறங்கி உள்ளது...

உண்மையை சொல்ல வேண்டுமானால் IDEA இந்த விதிகளுக்குள்ளேயே வரவில்லை..ஏனெனில் முந்தைய  பதிவிலேயே நான் குறிப்பிட்டுள்ளேன்....

கவனிக்க (அது போல LT SHARE காலையில் வந்த குறைந்தபட்ச விலையான 1613.45 ஐ க்கு கூட வரமுடியாமல் கடைசி நேரத்தில் 1624 வரை வந்து உடனடியாக திரும்பி 1643 இல் சென்று முடிந்துள்ளது .. )..............இந்த வரிகளை நீங்கள் கவனித்திருந்தால் தெரியும்...

நன்றி நண்பரே..உங்களது கேள்வி மற்றவருக்கும் பயன் தந்துள்ளது..நானும் கற்று கொள்ள உதவி உள்ளது....

                                                                                  LT


IDEA 



No comments:

Post a Comment