Friday 24 April 2015

OPTION TRADING விதிகள் (7வது விதி )

நம்மில் பலர் OPTION TRADING இல் பல வழிமுறைகளை கையாண்டு OPTION ஐ வாங்கி  அது இறங்கும்வரை வைத்திருந்து இழப்பை சந்தித்து வருகின்றனர்...
ஒரு சிலர் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் நிபிட்டி 8500 இல் இருந்தால் 9000 CALL .மற்றும் 8000 PUT என இரண்டு பக்கமும் வாங்கி இழப்பை சந்திக்கின்றனர்

ஆனால் OPTION TRADING இல் எனக்கு தெரிந்த நண்பர் குழு ஓன்று தினசரி OPTION இல் SHORT மட்டும் செய்து மாதத்தில் 15 நாட்களுக்கு குறையாமல் இலாபம் சம்பாதித்து வருகின்றனர்.. இவர்களின் மொத்த RISK இன் அளவு முதலீட்டில் 10%மட்டுமே...அவர்களின் OPTION TRADING முறையை இங்கு விளக்குகிறேன்..ஒரு 20 நாட்கள் பேப்பர் TRADE செய்து விட்டு முயற்சித்து பார்க்கவும்..

தினசரி OPTION பிரிமியம் கரைவது உங்களுக்கு தெரியும்..இந்த நண்பர் குழுவுக்கு தேவை இந்த கரையும் பிரிமியம் மட்டும் தான் ..

உதாரணமாக ஒரு இலட்சம் ரூபாய் உள்ள ஓர் அக்கௌன்ட் கணக்கீடாக கொள்ளுவோம் ... இவர்கள் செய்வது என்னவென்றால் ஒரு இலட்சம் ரூபாய்க்கு 2000 QUANITITY NIFTY OPTION SHORT TRADING செய்யும் அளவிற்கு ACCOUNT தயாராக இருக்கும்..

இவர்கள் செய்வது என்னவென்றால்

மார்க்கெட் ஆரம்பித்தவுடன் NIFTY FUTURE 8750 இல் (+30) TRADE ஆவதாக வைத்து கொள்வோம்.
இந்த நேரம்
8700 CALL விலை 80ரூபாய் அளவில் இருக்கும் ..
8800 PUT விலையும் 80 ரூபாய் அளவில் இருக்கும் ..

இந்த நேரத்தில் இந்த இரண்டு OPTION களையும் 8700 CALL 1000QUANTITY....மற்றும் 8800 PUT 1000 QUANTITY..SHORT செய்து விடுவார்கள் ...

மார்க்கெட் மேலே போனால் இவர்கள் SHORT போன CALL OPTION விலை ஏறும் இவர்களுக்கு இழப்பு வரும்..ஆனால் இவர்கள் SHORT போன PUT OPTION விலை இறங்கும் இதில் இலாபம் வரும்..இவ்வாறு மேலே கீழே நடக்கும் போது  இவர்களது முதலீடு கொஞ்சமும் குறையாமல் இருக்கும்...

இப்படியே இருந்தால் இவர்களுக்கு எப்போது இலாபம் வரும் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம் ??

இலாபம் வரும் எப்படி  வரும் என்றால் ???..கணக்கிட்டு பாருங்கள் ...

8750 இல் உள்ள NIFTY FUTURE 8780 க்கு போய் இருந்தால்

இவர்கள் SHORT  போன 8700 CALL 80 இல் இருந்து 95 வரை சென்று இருக்கும் ..
இவர்களது இழப்பு இந்த TRADE இல் (80-95) 15*1000=-15000...

அதே போல் SHORT போன இவர்களது 8800 PUT 80 இல் இருந்து 60 வரை வந்து இருக்கும் ... இதில் இலாபம் (80-60) 20*1000=20000...

இதுவே

8750 இல் உள்ள NIFTY FUTURE 8720 க்கு போய் இருந்தால்

இவர்கள் SHORT  போன 8800 PUT 80 இல் இருந்து 95 வரை சென்று இருக்கும் ..
இவர்களது இழப்பு இந்த TRADE இல் (80-95) 15*1000=-15000...

அதே போல் SHORT போன இவர்களது 8700 CALL 80 இல் இருந்து 60 வரை வந்து இருக்கும் ... இதில் இலாபம் (80-60) 20*1000=20000...

மொத்த இலாபம் =20000-15000=5000 (BROKERAGE TAX -1200) =நிகர இலாபம் 3800 ரூபாய்..

இது எப்படி நடக்கிறது ?? எல்லாம் ஒரே ஒரு காரணம் தான் ??PREIMIUM MELTING ...மார்க்கெட் ஒரு 30புள்ளிகள் ஏறினால் CALL 15 ரூபாய் ஏறும் PUT 20 ரூபாய் இறங்கும்..
எவ்வாறெனில் மார்க்கெட்டில் CALL PUT எதுவாக இருந்தாலும்,,,அது ஏறும் வேகம் குறைவாகவும் (100%) இறந்கும்வேகம் அதிகமாகவும் ..(150%)இருக்கும் ..
இந்த ஏற்ற இறக்கம் தான் இவர்களின் இலாபம் ..

இது கணக்கீடு மட்டும் தான் இவர்கள் ஒரு இலட்ச ரூபாய் முதலீட்டிற்கு 4 புள்ளிகள்  கிடைத்தால்  கூட தங்கள் POSITION ஐ COVER செய்து விடுவார்கள்...நிகர இலாபம் 2800..சராசரியாக மாதத்தில் 15-17 நாட்கள் இவர்களுக்கு இந்த வருமானம் கிடைத்து வருகிறது.,,மார்க்கெட் சில சமயம் ஒரே பக்கத்தில் MOVE ஆகும் சமயங்களில் மட்டும் இவர்களுக்கு இழப்பு வருகிறது...(இப்போது ஒரு SIDE MARKET பற்றிய எமது பயிற்சி அவர்களுக்கு அளிக்கபட்டு வருவதால் இனி அந்த 3-5 நாட்கள் கூட இழப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை )

உங்களுக்கே தெரியும் மாதம் 20 TRADING நாட்களில் NIFTY  +-60புள்ளிகளுக்குலேயே  மட்டும் TRADE ஆகிறது ..100 புள்ளிகளுக்கு மேல் போவது ஒரு 3-5 நாட்கள் மட்டும் தான்

மார்க்கெட் எந்த பக்கம் போனாலும் இவர்களுக்கு கவலையில்லை இலாபம் ஒரு  85%  நிச்சயம்.. மார்க்கெட் எந்த பக்கமும் போகாமல் அப்படியே இருந்தாலும் இவர்களுக்கு இலாபம் 100%உறுதி (PREIMIUM MELTING )

இந்த முறையை ஒரு மாதம் பேப்பர் TRADE செய்யவும் அதன் பின் TRADING இல் முயற்சி செய்து பார்க்கவும்...

இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் ....நம்புங்கள் ..

நம்மாலும் முடியும்....

No comments:

Post a Comment