Wednesday, 17 February 2016

சந்தையை முடிவு செய்ய நீங்கள் யார்??



பங்கு சந்தையில் வணிகம் செய்யும் நண்பர்களுக்கு,
அதிக பணி  சுமை காரணமாக அதிகம் சந்தை பற்றி தமிழில் முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..
இந்த பதிவின் முக்கிய காரணம்,
கடந்த ஒரு வாரத்தில் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு  பேசிய நண்பர்கள்....
உங்களை போன்ற சில FB நண்பர்கள் அவர்கள் ..
அந்த நண்பர்களின் கடந்த வார மொத்த இழப்பு சுமார் 9 இலட்சத்திற்கும் மேல்..

இவ்வளவிற்கும் இந்த சந்தைக்கு அவர்கள் புதியவர்களா என்றால் அப்படி ஏதும் இல்லை..அவர்கள் அனைவரும் 1--2 ஆண்டுகளாக பங்கு சந்தையில் வணிகம் செய்து வருபர்கள் தாம்..
அப்படி இருந்து எப்படி இவ்வளவு இழப்பு.???

ஒருவர் சொல்லுகிறார் சந்தை நன்றாக இறங்கி விட்டது..எனது TECHNICAL  படி சந்தை இந்த இடத்தில் சந்தை திரும்பி விடும் ,இனி  ஏறிவிடும் என்று நினைத்தேன் அதனால் CALL OPTION வாங்கினேன் என்று

இன்னொரு நண்பர்  சொல்லுகிறார் TATASTEEL RESULT மோசமாக இருந்தது அதனால் SHORT  போனேன்..ஆனால் ஏறிவிட்டது என்று..

இன்னொரு நண்பர் சொல்லுகிறார்..இறங்க இறங்க AVERAGE செய்து வாங்கினேன் எல்லாம் ஒரு கட்டதில் (6950 கீழ் )AUTO SQUARE UP ஆகிவிட்டது என்று..

இங்கே இவர்கள் சொல்லும் அனைத்தும் முழுக்க முழுக்க தானாகவே யுகம் செய்து செய்த வணிகம்..
அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது...
இழப்பு அவர்களது முழு முதலீட்டு தொகையும்...
இது என்னிடம் பேசிய நண்பர்களின் கதை..
இது போல இன்னும் வெளியே சொல்ல முடியாமல் கடந்த வாரம் பணத்தை இழந்தவர்கள் எத்தனை பேர்..???

திரும்பவும் சொல்லுகிறேன்..
இந்த சந்தை முழுவதும் திட்டமிடப்பட்ட சந்தை ..
கடந்த வியாழன் அன்று NIFTY - 265 புள்ளிகள் இறங்கியது..
அதற்கு இங்கே TV இல்  நிறைய காரணங்கள் சொன்னார்கள்..
என்னிடம் கேட்டால் வியாழ கிழமை இறக்கம் புதன் அன்றே முடிவு செய்ய பட்டது  ஓன்று.
அதை புதன் அன்றே நான் UPDATE செய்தேன் நாளை "BLACK THURSDAY " என்று.

இப்படி திட்டமிட்டு நடக்கும் சந்தையில்  உங்கள் TECHNICAL கள் ,உங்கள் இன்டிகேடேர்கள் எல்லாம் சந்தைக்கு உதவுவது ஒரு 30% மட்டும் தான் ..
இதை தாண்டி இங்கே பல விஷயங்கள் இங்கே நடக்கின்றன...

முழுக்க முழுக்க இந்த சந்தை பணம் வைத்து விளையாடும் பணக்காரர்களால் மட்டுமே இயக்கபடுகின்றது..
ஒரு நாளில் 9.15 முதல் 3.30 க்குள் (345 நிமிடத்தில்) 1.50 இலட்சம் கோடிக்கு மேல் வணிகம் நடக்கிறது.
தோரயமாக இங்கே ஒருநிமிட வியாபாரம் 400 கோடி ரூபாய்,ஒரு நொடிக்கு வியாபாரம் 6.60 கோடி ரூபாய் நடக்கிறது..

இந்த இடத்தில் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் வந்து பணத்தை இழந்து கொண்டிருக்கும் நண்பர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது...

திரும்பவும் சொல்லுகிறேன்..உங்கள் அக்கௌண்டில் 20000-50000 வைத்து கொண்டு உங்களது முந்தைய இலட்சகணக்கிலான இழப்பை  எல்லாம் RECOVER செய்ய நினைத்திர்கள் என்றால் அதை விட பெரிய முட்டாள் தனம் ஏதும் இல்லை..
இந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் திறமைக்கு(?) ஏற்ப கரைந்து காணாமல் போகும்..
அதற்காக பணம் நிறைய கொண்டு வர வேண்டுமா என்றால்  அதுவும் இல்லை..
இதுவரை இழந்ததை நினைத்து கொண்டே வியாபாரத்திற்கு வராமல்,
இன்று தான் புதியதாக வருவது போல  கற்று கொள்ளுங்கள்..கற்று கொள்ளும் வரை பணத்தை சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்..
கற்று கொண்ட பின் கற்று கொண்டது சரிதானா என்று உறுதி படுத்தி கொள்ள கொஞ்சம் TRADE செய்து பாருங்கள் ..அதில் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை எதனால் இந்த இழப்பு வந்தது என்று யோசியுங்கள் தவறை திருத்துங்கள்..
அதன் பின் நம்பிக்கை வந்தவுடன்
அந்த பணத்தை(20000-50000) கொண்டு TRADE செய்ய ஆரம்பித்தால் உங்கள் இழப்பை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து விடலாம்.

இந்த சந்தையில் சம்பாதிக்க வேண்டும்  என்றால்  அதற்கு சந்தையை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்..

TATASTEEL 2500 கோடி நஷ்ட கணக்கு காண்பித்தான், அதனால் அந்த SHARE இறங்கும் என்று SHORT போவீர்கள் ..
நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்,அது பெரிய இழப்பு என்று .???
இப்போதைய பொருளாதார சூழலில் சந்தை TATASTEEL க்கு  எதிர்பார்த்தது 6000 கோடி இழப்பு ஆனால் இங்கு 2500 கோடி தான் இழப்பு எனவே COMPANY நன்றாக உள்ளது என்று இந்த SHARE விலையை ஏற்றுவார்கள்..

இதுவே அடுத்த 3 மாதங்களுக்கு பின் அதே TATASTEEL 4000 கோடி இலாபம் சம்பாதிக்கும் அப்போது (2500 கோடி நஷ்டத்தில் இருக்கும் போதே  ஏறிய ஷேர் இது இப்போது 4000 கோடி இலாபம் என்றால் மேலே போகும் என்று  )வாங்குவீர்கள் ஆனால் அன்று அந்த பங்கு இறங்கும் காரணம் என்னவென்றால் இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு சந்தை எதிர்பார்த்த இலாபம் 8000 கோடி ஆனால்  இது 4000 கோடி இலாபம் கொடுத்துள்ளது எனவே இது மோசமான SHARE என்று காரணம் வரும்...

இது போல இங்கே எல்லாமே திட்டம் போட்டு தான்  நடகின்றது..
இது எனது ZFORMULA NIFTY VIEW தினசரி தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும்.சந்தையின் ஒவ்வொரு அசைவும் காரணம் இல்லாமல் நடைபெறவில்லை..
அதை புரிந்து கொண்டு TRADE செய்பவர்கள் மட்டுமே இலாபம் சம்பாதிக்கவும் முதலீட்டை காப்பாற்றி கொள்ளவும்  முடியும்.

இப்போது LIVE TECHNICAL CHART கள் சில வெப்சைட்களில் இலவசமாகவே கிடைகின்றன..சில நிறுவனங்கள் மாதம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர் ..
.
இதை வாங்கி  வைத்து கொண்டு CANDLE CHART OPEN  செய்து வைத்து கொண்டு ஒரு 6 மாதங்கள் அதை WATCH செய்து பாருங்கள் ..சந்தை உங்களுக்கு முழுமையாக புரியும்..
இங்கே TECHNICAL என்பது ஒரு வரைபடம் போல தான்..
நீங்கள் எந்த இன்டிகேடேர்கள் பற்றியும் கற்று கொள்ள வேண்டாம்..
அதனுடன் எந்த கோடும் வரைந்து நீங்கள் பார்க்க வேண்டாம்...

நீங்கள் இங்கே படிக்க வேண்டியது CANDLES,CANDLES ,CANDLES  மட்டும் தான் ..
CANDLES படியுங்கள் இதை தாண்டிய விஷயம் இங்கே ஏதும் இல்லை...
CANDLES பெயரை மனப்பாடம் செய்து ஒன்றும் ஆகபோவதில்லை..
என்னிடம் கேட்டால் எனக்கு  இரண்டு CANDLE களின் பெயர்கள் கூட எனக்கு சரியாக தெரியாது..
ஆனால் எந்த CANDLE எப்படி உருவானால் அடுத்து என்ன நடக்க போகிறது,அடுத்து எந்த CANDLE வர போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்..
அதை கற்று கொள்ளுங்கள்  முதலில் நீங்கள் சந்தையில் 30% தோற்பது தவிர்க்க படும்..அதன் பின் சந்தையை இயக்குபர்கள் ( OPERATORS ) பற்றி அறிந்து கொள்ளலாம்....

இழப்பதை நிறுத்த முயற்சி செய்யுங்கள் ..அதன் பின் சம்பாதித்து கொள்ளலாம்...

இலாபத்தை இழந்தால் சம்பாதித்து கொள்ளலாம்..
முதலீட்டை இழந்தால்..???
இங்கே போக போவது முதலீடு மட்டும் அல்ல சந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் மொத்த நம்பிக்கையும் தான் .
எனவே இழப்பை தடுக்க கற்று கொள்ளுங்கள்...
இலாபம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம்...

மற்ற தொழிலில் இழப்பு ஏற்பட்டால் நமக்கு இந்த தொழில் தெரியவில்லை என்று வேறு தொழிலுக்கு சென்று விடுவார்கள்.
ஆனால் இந்த தொழிலில் மட்டும் தான் எவ்வளவு இழப்பு வந்தாலும்,விட்டு விலகி செல்லாமல் ,முழுமையாக கற்று கொள்ளாமலும்,திரும்ப திரும்ப கொண்டு வந்து இழந்து கொண்டிருக்கிறார்கள்..

முயற்சி  ஏதும் இல்லாமல் தொழில் செய்ய நினைத்தால் அது இழப்பை மட்டுமே தரும்..

எதையும் கற்று கொள்ளாமல்,கற்று கொள்ள முயற்சி செய்யாமல் இருக்கும் நண்பர்களுக்கு எனது ஒரே ஒரு அறிவுரை

உங்கள் TRADING  ACCOUNT  இல் இருக்கும் பணத்திற்கு ஏதேனும் நீண்ட காலத்திற்கு POSITIONAL ஆக நல்ல STOCK வாங்கி வைத்து விட்டு வேறு நீங்கள் தொழிலுக்கு சென்று விடுங்கள்..

அல்லது அந்த பணத்தை எடுத்து உங்கள் குடும்பத்தினருக்கு செலவழியுங்கள்..

நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் அதை இந்த சந்தையில் யாரோ ஒரு பணக்காரன் அனுபவிப்பதற்கு பதில்,
 உங்கள் குடும்பதினராவது ஆனந்தமாக அனுபவிக்கட்டும்...

தோழமையுடன்
ZFORMULA RAVIKUMAR