Friday, 15 April 2016

EQUITY TRADER கள் கவனத்திற்கு ...


EQUITY  இல் POSITIONAL எடுத்து வைத்து TRADE  செய்யும் நண்பர்களுக்காக இந்த பதிவு .. இரண்டு நாள்களுக்கு முன் எனது மொபைல் க்கு  மும்பையில் இருந்து பேசுவதாக சொல்லி ஒரு நபர் பேசினார்.அவர் நமது தமிழில் தட்டு தடுமாறி பேசினார்.அவர் பேசிய விஷயம் இது தான்.

 
உங்கள் MARKET UPDATES மிகவும் நன்றாக இருக்கிறது உங்களை FOLLOW செய்பவர்கள் நிறைய இருகின்றனர்.உங்கள் WEBSITE நன்றாக உள்ளது.என்று பாராட்டினார் ..அவரை பற்றி கேட்டேன்.

அவர் BSE MARKET இல் 'D' GROUP SHARE களை OPERATE செய்வதாகவும்,சில COMPANY கள் மிக குறைந்த VOLUME (20-50 SHARES )மட்டுமே தினசரி  TRADE ஆகும்.அந்த SHARE கள் EXCHANGE இல் இருந்து DE LIST ஆவதை  தடுக்க இவர்களே வாங்கி  விற்று VOLUME காட்டுவதாகவும், இப்படி காட்டினால் அந்த COMPANY SHARE கள் DELIST ஆகாமல் தடுக்க முடியும்,மேலும் நல்ல VOLUME TRADE ஆனால் BSE மட்டுமில்லாமல் NSE சந்தையில் அந்த SHARE பட்டியலிடப்பட முடியும் என்பதால் அந்த COMPANY PROMOTER களே இது போன்று பணம் கொடுத்து எங்களை OPERATE செய்ய சொல்வார்கள் என்றும் கூறினார்..

அடுத்ததாக அவர் சொன்னது தான் மிரள வைத்தது..
இங்கே உங்கள் VIEW க்கு நிறைய FOLLOWER இருகின்றனர். நீங்கள் ADVISORY COMPANY (WWW.ZFORMULA.IN ) வேறு வைத்து உள்ளீர்கள்.உங்களுக்கென்று CLIENT களும் இருப்பார்கள்.

நாங்கள் சில STOCK களை (8-15 ரூபாய் விலையில் ) உங்களுக்கு சொல்லுவோம்.அதை வாங்க சொல்லி நீங்கள் உங்கள் FB இல் UPDATE செய்யவேண்டும் மற்றும் உங்கள் WEBSITE இல் உங்கள் CLIENT கள் அனைவரிடமும் சொல்ல வேண்டும்..இவ்வாறு நீங்கள் சொல்லுவதன் மூலம் அந்த SHARE நிறைய பேர் வாங்குவார்கள்.அந்த ஷேர் இல் நன்கு VOLUME நடக்கும்

இவ்வாறு நாங்கள் சொல்லும் தேதியில் நீங்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டு,உங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் அந்த தேதியில்  அந்த SHARE வாங்க சொல்ல வேண்டும்.10 ரூபாய் விலையில் உள்ள ஸ்டாக் என்பதால் அதை எப்படியும் ஒரு நபர் 1000 வாங்கினால் கூட 10000 ரூபாய் தான் முதலீடு எனவே எவரும் பெரிதாக நினைக்க மாட்டார்கள் ...

இப்படி ஒரு உங்களை பின்பற்றும் ஒரு 100 பேர் 1000 QUANTITY வாங்கினால் கூட 100000 SHARE VOLUME மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் ஆகிவிடும்.இவ்வாறு அன்று அந்த ஷேர் அன்றைக்கு எவ்வளவு ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறதோ அதில் 8% உங்களுக்கு கமிஷன் தருவதாகவும் .(அதாவது அன்று 10 இலட்சம் ரூபாய் வியாபாரம் நடந்திருந்தால் எனக்கு 80000 ரூபாய் அன்று மாலையே தருவதாகவும்,) எனவும் பேரம் பேசினார்.


இதை வாங்கும் நபர்களுக்கு நிலை  என்னாகும் என்று கேட்டேன்.அந்த ஷேர் வாங்கியவர்களுக்கு திரும்ப ஒரு வாய்ப்பு வரும்,அடுத்த  15-30 நாட்களில் அந்த ஷேர் 10 ரூபாயில் இருந்து 11-12 ரூபாய் வரைவரும் அன்றைக்கு அவர்களை விற்று விட சொல்லுங்கள் என்றார்,..

அது எப்படி இந்த SHARE 20-50 எண்ணிக்கை மட்டும் வியாபாரம் ஆகிறது என்று சொன்னிர்கள் 12 ரூபாய்க்கு வரும் போது,எப்படி 1 இலட்சம் SHARE விற்க முடியும் என்று கேட்டேன்

இந்த கேள்விக்கு அவரின் பதில் அப்படி 12 ரூபாய்க்கு TRADE ஆகும்  அந்த தேதியில் உங்களை போல வேறு ஒரு ADVISORY கம்பெனி, இல்லை என்றால் ஏதாவது BROKING நிறுவனத்தின் MANAGER கள் ,DEALER கள் என எங்களிடம் கமிஷன் வாங்கும் நபர்கள் இந்த SHARE வாங்க சொல்லி அவர்களது CLIENTS க்கு பரிந்துரை செய்வார்கள், அதனால் அன்று 1 இலட்சம் QUANTITY வரை வியாபாரம் நடக்கும்..அப்போது நீங்கள் உங்கள் CLIENTS விற்க சொல்லுங்கள்,இவர்கள் வெளியே வந்து விடுவார்கள், என்று விளக்கம் வேறு சொன்னார்..

 
நான் பெரும்பாலும் EQUITYஇல் TRADE செய்வதில்லை..EQUITY TRADING செய்பவர்களை ஏமாற்ற இப்படி ஒரு கும்பல் உள்ளது என்பதை இந்த நிகழ்வுக்கு பின் புரிந்து கொண்டேன்.

எந்த வித அடிப்படையும் இல்லாத COMPANY (இயங்குகிறதா ?இல்லையா ? என்பதே தெரியாது.) SHARE களை விலை ஏற்றி உங்கள் தலையில் கட்ட ஒரு பெரிய கும்பல் இங்கே திட்டம் போட்டு செயல் படுகிறது..

இவர்கள் தரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்த ஷேர் விலை ஏறும் வாங்கி கொள்ளுங்கள் என்று உங்களிடம் சொல்ல இங்கே பல ADVISORY COMPANY கள், BROKING நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என பலர் இந்த NETWORK இல் உள்ளனர்..

 
எனவே பங்கு சந்தையில் முதலீடாக SHARE வாங்கும் நபர்கள் உங்கள் சுய முடிவின் படி,சந்தையில் TRADE ஆகும்,அதிக VOLUME நடக்கும்  A குரூப் ஷேர்களில் மட்டும் உங்கள் முதலீட்டை தொடருங்கள்.அவர் சொன்னார், இவர் சொன்னார்,என்று தெரியாத COMPANY களில் முதலீடு செய்ய வேண்டாம்..

மற்ற முதலீட்டாளர்களும்  இது போல் ஏமாந்து விடாமல் இருக்க அவர்களிடமும்  இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்..
தோழமையுடன்,
 ZFORMULA RAVIKUMAR.
ZFORMULA PRIVATE LIMITED .


Friday, 19 February 2016

முகம் தெரியாத நண்பர்கள்

முகம் தெரியாத நண்பர்கள் நன்றாக இருக்கட்டும் என்று  விளக்கம் அளித்தற்கு நன்றி என்று முந்தைய பதிவில் ஒரு நண்பர் பதிவு செய்திருந்தார்..
.
நீங்கள் எப்போதாவது  BIKE  இல் SIDE STAND எடுக்காமல் சென்று பாருங்கள் சகோதரா ..
SIR ,STAND எடுக்க வில்லை STAND எடுக்கவில்லை என்று உங்களை ஒரு 10 பேராவது எச்சரிப்பார்கள்.
நீங்கள் கீழே விழுந்து விட கூடாது என்று எத்தனை பேர் எச்சரிகின்றனர் அவர்களில் நிறைய பேருக்கு உங்களை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்களுக்கு நீங்கள் யாரென்று தெரியாது,ஆனால் அவர்களின் ஒரே கவலை சகமனிதன் ஒருவன் கீழே விழுந்து காயம் ஏற்படுத்தி கொள்ள கூடாதே என்ற அக்கறை மட்டும் தான் இருக்கும்..
அது போல் தான்  முந்தைய  பதிவும்..
அந்த பதிவு எழுதியது எதையும் தெரிந்து கொள்ளாமல் இங்கே பணத்தை இழந்து கொண்டிருக்கும் சக மனிதன் மீதான ஒரு அக்கறை மட்டுமே.

இங்கே சந்தை முழுவதும் ஏற்கனவே தீர்மானம் செய்யபட்டபடி தான்  நகரும்,
FII -DII என்ற இரண்டு பணக்கார வர்க்கத்திற்கு நடுவே நடக்கும் வர்த்தகத்தை இதை புரிந்து கொள்ளாமல்,எங்கோ கடுமையான உடல் வருத்தி வேலை செய்து சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை இங்கே கொண்டு வந்து இழந்து வருகின்றனர்.

நிறைய நண்பர்கள் எதுவுமே கற்று கொள்ள முயற்சி செய்யவில்லை...
சிலர் கற்று கொள்ள முயற்சி செய்கின்றனர்..ஆனால்
அவர்களும் அந்த INDICATOR இந்த TECHNICAL (MACD ,RSI,)என்று ஆராய்ச்சி செய்தே நேரத்தையும் பணத்தையும் வீணடித்து கொண்டு இருகின்றனர்..
(நானும் ஒரு காலத்தில் இதெல்லாம் ஆராய்ந்து தோற்று கொண்டு இருந்தவன் தான்.)

சந்தையில் அதற்காக TECHNICAL கற்று கொள்ள வேண்டாம் என்று சொல்ல வில்லை..முதலில் அடிப்படையை கற்று கொள்ளுங்கள் எல்லா INDICATOR களுக்கும் அடிப்படை CANDLE இது மட்டும் கற்று கொள்ளுங்கள் அதன் பின் மற்ற விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்..

INDICATORS,FOLLOW செய்வதை விட CANDLES பின்பற்றுங்கள்..
அதன் பின் CANDLES  வரைபவர்களை  பின்பற்றுங்கள் ..
BIG PLAYERS.. இவர்களால் தான் எல்லா  CANDLE களும் வரைய படுகின்றன..
2 நாளுக்கு (18.02.2016) முன்பு கூட ஒரு OPTION இல் BIG PLAYER களால் வரையப்பட்ட ஒரு CANDLE CHART, SCREEN SHOT எடுத்து வைத்துள்ளேன்.. முடிந்தால் விரைவில் அதை UPDATE  செய்கிறேன்.. )

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு TRADING செய்ய வந்தால் முதலில் உங்கள முதலீடை காப்பாற்றி கொள்ளலாம்..அதன் பின் இலாபம் சம்பாதிக்கலாம்.
இதை மட்டும் தான் நான் சொல்ல வருவது..

சில முறை ஆட்டோவில் செல்லும் போது கவனித்து இருக்கிறேன். RTO ரெய்டில் மாட்டி விட்டு FINE கட்டிவிட்டு போகும் ஆட்டோ காரர்கள் ..இந்த பக்கம் RTO ரெய்டு நடக்கிறது..போகாதே போகாதே என்று எதிரே வரும் எல்லா ஆட்டோ காரர்களிடம் சொல்லிக்கொண்டே போவார்கள்..அது தெரிந்தவன் தெரியாதவன் என எல்லோரிடமும் சொல்லுவார்கள்..
நாம தான் மாட்டி FINE கட்டி விட்டோம் அடுத்தவனும் மாட்டி கொள்ள கொள்ள வேண்டாமே வேறு பாதையில் அவன் சென்று விட்டால் தப்பித்து கொள்வானே என்று..

அது போலத் தான்..இந்த பக்கம் போனால் பிரச்னை இருக்கிறது..திருத்தி கொண்டு போங்கள் அல்லது வேறு பாதையில் சென்றுவிடுங்கள் என்ற சொல்லும் சக மனிதன் மீதான ஒரு சிறு அக்கறை மட்டுமே  இது...

இந்த பதிவுகளின் நோக்கம் இந்த பதிவின் மூலம் உங்களின் பணத்தில் ஒரு ஒரு ரூபாயாவது சந்தை இழப்பில் இருந்து காப்பாற்றபட்டு விடாதா என்ற ஆதங்கமே..
தோழமையுடன்.
ZFORMULA RAVIKUMAR

Wednesday, 17 February 2016

சந்தையை முடிவு செய்ய நீங்கள் யார்??



பங்கு சந்தையில் வணிகம் செய்யும் நண்பர்களுக்கு,
அதிக பணி  சுமை காரணமாக அதிகம் சந்தை பற்றி தமிழில் முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..
இந்த பதிவின் முக்கிய காரணம்,
கடந்த ஒரு வாரத்தில் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு  பேசிய நண்பர்கள்....
உங்களை போன்ற சில FB நண்பர்கள் அவர்கள் ..
அந்த நண்பர்களின் கடந்த வார மொத்த இழப்பு சுமார் 9 இலட்சத்திற்கும் மேல்..

இவ்வளவிற்கும் இந்த சந்தைக்கு அவர்கள் புதியவர்களா என்றால் அப்படி ஏதும் இல்லை..அவர்கள் அனைவரும் 1--2 ஆண்டுகளாக பங்கு சந்தையில் வணிகம் செய்து வருபர்கள் தாம்..
அப்படி இருந்து எப்படி இவ்வளவு இழப்பு.???

ஒருவர் சொல்லுகிறார் சந்தை நன்றாக இறங்கி விட்டது..எனது TECHNICAL  படி சந்தை இந்த இடத்தில் சந்தை திரும்பி விடும் ,இனி  ஏறிவிடும் என்று நினைத்தேன் அதனால் CALL OPTION வாங்கினேன் என்று

இன்னொரு நண்பர்  சொல்லுகிறார் TATASTEEL RESULT மோசமாக இருந்தது அதனால் SHORT  போனேன்..ஆனால் ஏறிவிட்டது என்று..

இன்னொரு நண்பர் சொல்லுகிறார்..இறங்க இறங்க AVERAGE செய்து வாங்கினேன் எல்லாம் ஒரு கட்டதில் (6950 கீழ் )AUTO SQUARE UP ஆகிவிட்டது என்று..

இங்கே இவர்கள் சொல்லும் அனைத்தும் முழுக்க முழுக்க தானாகவே யுகம் செய்து செய்த வணிகம்..
அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது...
இழப்பு அவர்களது முழு முதலீட்டு தொகையும்...
இது என்னிடம் பேசிய நண்பர்களின் கதை..
இது போல இன்னும் வெளியே சொல்ல முடியாமல் கடந்த வாரம் பணத்தை இழந்தவர்கள் எத்தனை பேர்..???

திரும்பவும் சொல்லுகிறேன்..
இந்த சந்தை முழுவதும் திட்டமிடப்பட்ட சந்தை ..
கடந்த வியாழன் அன்று NIFTY - 265 புள்ளிகள் இறங்கியது..
அதற்கு இங்கே TV இல்  நிறைய காரணங்கள் சொன்னார்கள்..
என்னிடம் கேட்டால் வியாழ கிழமை இறக்கம் புதன் அன்றே முடிவு செய்ய பட்டது  ஓன்று.
அதை புதன் அன்றே நான் UPDATE செய்தேன் நாளை "BLACK THURSDAY " என்று.

இப்படி திட்டமிட்டு நடக்கும் சந்தையில்  உங்கள் TECHNICAL கள் ,உங்கள் இன்டிகேடேர்கள் எல்லாம் சந்தைக்கு உதவுவது ஒரு 30% மட்டும் தான் ..
இதை தாண்டி இங்கே பல விஷயங்கள் இங்கே நடக்கின்றன...

முழுக்க முழுக்க இந்த சந்தை பணம் வைத்து விளையாடும் பணக்காரர்களால் மட்டுமே இயக்கபடுகின்றது..
ஒரு நாளில் 9.15 முதல் 3.30 க்குள் (345 நிமிடத்தில்) 1.50 இலட்சம் கோடிக்கு மேல் வணிகம் நடக்கிறது.
தோரயமாக இங்கே ஒருநிமிட வியாபாரம் 400 கோடி ரூபாய்,ஒரு நொடிக்கு வியாபாரம் 6.60 கோடி ரூபாய் நடக்கிறது..

இந்த இடத்தில் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் வந்து பணத்தை இழந்து கொண்டிருக்கும் நண்பர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது...

திரும்பவும் சொல்லுகிறேன்..உங்கள் அக்கௌண்டில் 20000-50000 வைத்து கொண்டு உங்களது முந்தைய இலட்சகணக்கிலான இழப்பை  எல்லாம் RECOVER செய்ய நினைத்திர்கள் என்றால் அதை விட பெரிய முட்டாள் தனம் ஏதும் இல்லை..
இந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் திறமைக்கு(?) ஏற்ப கரைந்து காணாமல் போகும்..
அதற்காக பணம் நிறைய கொண்டு வர வேண்டுமா என்றால்  அதுவும் இல்லை..
இதுவரை இழந்ததை நினைத்து கொண்டே வியாபாரத்திற்கு வராமல்,
இன்று தான் புதியதாக வருவது போல  கற்று கொள்ளுங்கள்..கற்று கொள்ளும் வரை பணத்தை சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்..
கற்று கொண்ட பின் கற்று கொண்டது சரிதானா என்று உறுதி படுத்தி கொள்ள கொஞ்சம் TRADE செய்து பாருங்கள் ..அதில் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை எதனால் இந்த இழப்பு வந்தது என்று யோசியுங்கள் தவறை திருத்துங்கள்..
அதன் பின் நம்பிக்கை வந்தவுடன்
அந்த பணத்தை(20000-50000) கொண்டு TRADE செய்ய ஆரம்பித்தால் உங்கள் இழப்பை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து விடலாம்.

இந்த சந்தையில் சம்பாதிக்க வேண்டும்  என்றால்  அதற்கு சந்தையை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்..

TATASTEEL 2500 கோடி நஷ்ட கணக்கு காண்பித்தான், அதனால் அந்த SHARE இறங்கும் என்று SHORT போவீர்கள் ..
நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்,அது பெரிய இழப்பு என்று .???
இப்போதைய பொருளாதார சூழலில் சந்தை TATASTEEL க்கு  எதிர்பார்த்தது 6000 கோடி இழப்பு ஆனால் இங்கு 2500 கோடி தான் இழப்பு எனவே COMPANY நன்றாக உள்ளது என்று இந்த SHARE விலையை ஏற்றுவார்கள்..

இதுவே அடுத்த 3 மாதங்களுக்கு பின் அதே TATASTEEL 4000 கோடி இலாபம் சம்பாதிக்கும் அப்போது (2500 கோடி நஷ்டத்தில் இருக்கும் போதே  ஏறிய ஷேர் இது இப்போது 4000 கோடி இலாபம் என்றால் மேலே போகும் என்று  )வாங்குவீர்கள் ஆனால் அன்று அந்த பங்கு இறங்கும் காரணம் என்னவென்றால் இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு சந்தை எதிர்பார்த்த இலாபம் 8000 கோடி ஆனால்  இது 4000 கோடி இலாபம் கொடுத்துள்ளது எனவே இது மோசமான SHARE என்று காரணம் வரும்...

இது போல இங்கே எல்லாமே திட்டம் போட்டு தான்  நடகின்றது..
இது எனது ZFORMULA NIFTY VIEW தினசரி தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும்.சந்தையின் ஒவ்வொரு அசைவும் காரணம் இல்லாமல் நடைபெறவில்லை..
அதை புரிந்து கொண்டு TRADE செய்பவர்கள் மட்டுமே இலாபம் சம்பாதிக்கவும் முதலீட்டை காப்பாற்றி கொள்ளவும்  முடியும்.

இப்போது LIVE TECHNICAL CHART கள் சில வெப்சைட்களில் இலவசமாகவே கிடைகின்றன..சில நிறுவனங்கள் மாதம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர் ..
.
இதை வாங்கி  வைத்து கொண்டு CANDLE CHART OPEN  செய்து வைத்து கொண்டு ஒரு 6 மாதங்கள் அதை WATCH செய்து பாருங்கள் ..சந்தை உங்களுக்கு முழுமையாக புரியும்..
இங்கே TECHNICAL என்பது ஒரு வரைபடம் போல தான்..
நீங்கள் எந்த இன்டிகேடேர்கள் பற்றியும் கற்று கொள்ள வேண்டாம்..
அதனுடன் எந்த கோடும் வரைந்து நீங்கள் பார்க்க வேண்டாம்...

நீங்கள் இங்கே படிக்க வேண்டியது CANDLES,CANDLES ,CANDLES  மட்டும் தான் ..
CANDLES படியுங்கள் இதை தாண்டிய விஷயம் இங்கே ஏதும் இல்லை...
CANDLES பெயரை மனப்பாடம் செய்து ஒன்றும் ஆகபோவதில்லை..
என்னிடம் கேட்டால் எனக்கு  இரண்டு CANDLE களின் பெயர்கள் கூட எனக்கு சரியாக தெரியாது..
ஆனால் எந்த CANDLE எப்படி உருவானால் அடுத்து என்ன நடக்க போகிறது,அடுத்து எந்த CANDLE வர போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்..
அதை கற்று கொள்ளுங்கள்  முதலில் நீங்கள் சந்தையில் 30% தோற்பது தவிர்க்க படும்..அதன் பின் சந்தையை இயக்குபர்கள் ( OPERATORS ) பற்றி அறிந்து கொள்ளலாம்....

இழப்பதை நிறுத்த முயற்சி செய்யுங்கள் ..அதன் பின் சம்பாதித்து கொள்ளலாம்...

இலாபத்தை இழந்தால் சம்பாதித்து கொள்ளலாம்..
முதலீட்டை இழந்தால்..???
இங்கே போக போவது முதலீடு மட்டும் அல்ல சந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் மொத்த நம்பிக்கையும் தான் .
எனவே இழப்பை தடுக்க கற்று கொள்ளுங்கள்...
இலாபம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம்...

மற்ற தொழிலில் இழப்பு ஏற்பட்டால் நமக்கு இந்த தொழில் தெரியவில்லை என்று வேறு தொழிலுக்கு சென்று விடுவார்கள்.
ஆனால் இந்த தொழிலில் மட்டும் தான் எவ்வளவு இழப்பு வந்தாலும்,விட்டு விலகி செல்லாமல் ,முழுமையாக கற்று கொள்ளாமலும்,திரும்ப திரும்ப கொண்டு வந்து இழந்து கொண்டிருக்கிறார்கள்..

முயற்சி  ஏதும் இல்லாமல் தொழில் செய்ய நினைத்தால் அது இழப்பை மட்டுமே தரும்..

எதையும் கற்று கொள்ளாமல்,கற்று கொள்ள முயற்சி செய்யாமல் இருக்கும் நண்பர்களுக்கு எனது ஒரே ஒரு அறிவுரை

உங்கள் TRADING  ACCOUNT  இல் இருக்கும் பணத்திற்கு ஏதேனும் நீண்ட காலத்திற்கு POSITIONAL ஆக நல்ல STOCK வாங்கி வைத்து விட்டு வேறு நீங்கள் தொழிலுக்கு சென்று விடுங்கள்..

அல்லது அந்த பணத்தை எடுத்து உங்கள் குடும்பத்தினருக்கு செலவழியுங்கள்..

நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் அதை இந்த சந்தையில் யாரோ ஒரு பணக்காரன் அனுபவிப்பதற்கு பதில்,
 உங்கள் குடும்பதினராவது ஆனந்தமாக அனுபவிக்கட்டும்...

தோழமையுடன்
ZFORMULA RAVIKUMAR

Tuesday, 17 November 2015

Nifty Future Fancy Numbers..



Hai Friends,
As A Diwali Gift And Going to Tell About Here Simple Trading Secrets..Use This Tricks And Share To Your Friends...

FANCY NUMBER TRICKS ...
That is In Nifty 20-80 (+-7 Points) is a big Support And Resistance..
Wherever Nifty Goes (2500,6000,12300,7800,8300)
(2520,2580,6020,6080,12320,12380,7820,7880,8320,8380))(8313-8320-8327------8373-8380--8387)
Last Two Numbers (20-80)Give a Big Support and resistance So Trade Carefully...@ this Place..





In Tamil...

வணக்கம் எனது பங்குசந்தையில் TRADING செய்து வரும் FB நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு சின்ன TRADING METHOD கற்று தர போகிறேன்..
FANCY NUMBER TRICKS ...
NIFTY FUTURE 
இல் TRADE செய்யும் அனைவருக்கும் இந்த TRICK உதவும்..
உங்கள் நண்பர்களும் பயன் பெற இதை அவர்களுக்கு SHARE செய்யவும்...
NIFTY FUTURE 
 பொறுத்த வரை 20-80 (+ OR - 7 POINTS ) என்ற இரண்டு 
LEVEL கள் பெரிய SUPPORT செய்யும்...

NIFTY FUTURE 2500 
இல் TRADE ஆனாலும் 6100 இல் TRADE ஆனாலும் 10500 இல் TRADE ஆனாலும் .. 7500 இல் TRADE ஆனாலும்...சரி 20-80 அதாவது ..2520,2580,6120,6180,10520,10580,7520,7580 இந்த 2 (கடைசி இரண்டு NUMBER களும் மிக பெரிய SUPPORT மற்றும் RESISTANCE ஆக  செயல்படும்..இதற்கு நீங்கள் எந்த CHART ஐயும் பார்க்க வேண்டியதில்லை...NIFTY மேலே செல்லும் போது EXAMPLE 8280 ,8320(+-7 POINTS ) வரும் போது கொஞ்சம் மேலே போக தடுமாறும்...அது போல கிழே வரும் போதும்   EXAMPLE 8180.8120(+-7 POINTS )அருகே வரும் போது அதற்கு கீழே இறங்க கொஞ்சம் தயங்கும்...இந்த இரண்டு LEVEL களும் பெரிய SUPPORTRESISTANCE ஆக செயல்படும் ....இந்த இடங்களில் கொஞ்சம்  கவனமாக இருந்தால் உங்கள் இலாபம் இன்னும் அதிகபடலாம் ..
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு
தோழமையுடன்
Zformula Ravi

களும் மிக பெரிய SUPPORT மற்றும் RESISTANCE ஆக செயல்படும்..இதற்கு நீங்கள் எந்த CHART ஐயும் பார்க்க வேண்டியதில்லை...NIFTY மேலே செல்லும் போது EXAMPLE 8280 ,8320(+-7 POINTS ) வரும் போது கொஞ்சம் மேலே போக தடுமாறும்...அது போல கிழே வரும் போதும் EXAMPLE 8180.8120(+-7 POINTS )அருகே வரும் போது அதற்கு கீழே இறங்க கொஞ்சம் தயங்கும்...இந்த இரண்டு LEVEL களும் பெரிய SUPPORT RESISTANCE ஆக செயல்படும் ....இந்த இடங்களில் கொஞ்சம் கவனமாக இருந்தால் உங்கள் இலாபம் இன்னும் அதிகபடலாம் ..
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு

தோழமையுடன்
Zformula Ravi