Friday, 24 July 2015

பங்கு சந்தை பயிற்சி வகுப்பு தேவையா ???

இந்த பதிவு பொதுவாக TRADER களிடையே  விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக எழுதப்படும் பதிவு ..இங்கு பயிற்சி வகுப்பு எடுப்பவர்களை பற்றி மிக விரிவாக எழுதினால் அது எனக்கு சாதகமாக நான் எழுதுவதாகவே இருக்கும் ..ஏனென்றால் நான் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன்..
எனவே என்னால் முடிந்த அளவு நடுநிலையோடு எழுதி  இருக்கிறேன்  ..ஒருவேளை இது TRAINER கள் சார்பாக இருந்தால் என்னை மன்னிக்கவும்..
உங்களின் மேலான கருத்துகளை கண்டிப்பாக பதிவிடவும்...

ஒரு மளிகை கடை வைக்கவேண்டும் என்றால் கூட ஒரு  வருடம் எங்காவது மளிகை கடையில் வேலை பார்த்தால் மட்டும் தான் கடை நடத்த முடியும்..
அது போல
பயிற்சி என்பது எதுவும் தெரியாமல் ஒரு தொழிலை ஆரம்பிப்பதை விட கொஞ்சம் தெரிந்து கொண்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கலாமே என்று நினைபவர்களுக்கு பயிற்சி உதவும்.. ஆனால் இங்கே பங்கு சந்தையில் (மற்றும் FB )இல் 100 க்கு 200 பயிற்சியாளர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பது தான் அடிப்படை பிரச்சனை ..ஒவ்வொரு பயிற்சி வகுப்பிற்கும் சென்று பணத்தை இழந்து ஏமாந்து மனம் நொந்து போனவர்கள் தான் அதிகம் ..

நானும் முன்பு 2007 இல்  3000 ரூபாய் ,900 ரூபாய் செலுத்தி 2 பயிற்சி வகுப்பிற்கு சென்றவன் தான்..அன்று நான் கற்று கொண்ட விஷயம் சிறியது என்றால் கூட இன்று அது எனக்கு பயன்படுகிறது..

பயிற்சி வகுப்பிற்கு சென்று பணத்தை வீணாக்குவதை விட சிலர் அனுபவத்தில் கற்று கொள்ளலாம் என்று சொல்லுவார்கள்..(நானும் கூட இந்த வகையை  சேர்ந்தவன் தான் )..

அனுபவம் மிக பெரிய ஆசான் . உண்மையான வார்த்தைகள் ..
ஆனாலும் அதிலும் சிக்கல்கள் உள்ளது ..

சென்ற வாரம் ஒரு சில நண்பர்களுக்கு  பயிற்சி அளிக்கும் போது  எனக்கு தோன்றியது  ஒன்றே ஓன்று தான் ..

இதே போல் இந்த பங்கு சந்தையின் பள்ளங்களை (இங்கு பள்ளங்கள் தான் அதிகம் ) அன்று யாரோ எனக்கு கற்று தந்திருந்தால்,அன்றே நான் சிறிய இழப்பின் போதே இந்த சந்தையை விட்டு  விலகி ஓடி இருப்பேன்.

அல்லது இந்த பங்கு சந்தை வெற்றி நுணுக்கங்களை,எவரேனும் எனக்கு அன்றே கற்று தந்திருந்தால் இவ்வளவு வருடங்களை இழந்து அதன் பின் புரிந்து கொண்ட சந்தையை அன்றே புரிந்து கொண்டிருப்பேன்..எனது இழப்பினை சிறிதாக்கி கொண்டிருப்பேன் ..

அன்று எனக்கு அந்த பயிற்சி அனுபவம் கிடைக்கவில்லை...

அடுத்ததாக
நல்ல பயிற்சியாளர்கள்  எப்படி இருப்பார்கள் ????

முதலில் எவரும் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ...எல்லோரும் ஏமாற்றுபவர்களாக இருக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது..

எல்லோரும் ஒவ்வொரு FORMULA பின்பற்றுவார்கள் ஒவ்வொரு வகையிலான TRADE முறையை செயல்படுத்துவார்கள் ,,ஒவ்வொரு முறையை கற்று தருவார்கள் ..ஒவ்வொருவருக்கும் ஏதேனும் திறமை இருக்கலாம்..அதை கற்று தருவார்கள்..யாரிடம் இருந்து எது கிடைக்கும் என்று தெரியாது..

நல்லதை தேர்ந்தெடுக்க எனக்கு தெரிந்த ஒரே ஒரு வழி ..நீங்கள் யாரிடம் பயிற்சி பெற விரும்புகிரிர்களோ ? அவரை தொடர்பு கொண்டு பேசும் போது அவரிடம் பயிற்சி பெற்ற அவரது மாணவர்கள் சிலரது எண்களை கேளுங்கள் ...
அந்த எண்கள் மூலம் அவரது மாணவர்களை  தொடர்பு கொண்டு பேசுங்கள் ..

(பயிற்சி கொடுப்பவர் அவரது அலுவலக உதவியாளர்கள்,அவரது நண்பர்கள்  எண்களை கொடுத்து பயிற்சியாளர் பற்றி நல்ல விதமாக சொல்லி ஏமாற்ற வாய்ப்பு உள்ளது) எனவே முடிந்தால் அந்த மாணவர்களிடம் நேரில் சென்று பேசுங்கள் ..பயிற்சிகொடுத்தவர் பற்றி அவரிடம் பயின்ற மாணவர் சொல்லட்டும் அவரிடம் பயின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று அதன் பின் பயிற்சிக்கு செல்லுங்கள் ..இது ஓன்று தான் வழி ..

இன்னும் ஒரு வழி ..அங்கெ பயிற்சிக்கு போய் அவர்கள் சொல்லுவதை முழுமையாக உள்வாங்கி அதில் உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்து கொண்டு தேவை இல்லாததை விட்டு விடுவது .

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்..இங்கே அதிகபட்சம் இருப்பது போலிகள் தான்..எது நல்லது எது கெட்டது என்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் ..தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள்..தவறுதலாக தேர்ந்தெடுத்து விட்டு அதன் பின் புலம்புவதில் பலன் இல்லை ...

இவை எல்லாவற்றையும் விட மிக எளிய வழி ஓன்று இருக்கிறது..
இந்த பங்கு  சந்தையில் ஜெயிக்க' ..மிக அருமையான வழி அது ..

ஒரு 3 மாதம்  முதல் 6 மாதம் வரை எந்த TRADE உம்  செய்யாமல்,TERMINAL,ஒன்றும் ,CHART ஓன்று வாங்கி  கொண்டு (CANDLE மட்டும்)பாருங்கள் ..
தினசரி காலை 9.15 முதல் 3.30 வரை ஒரு 4 SHARES  மட்டும் எடுத்து கொண்டு அதனுடன் NIFTY ,BANKNIFTY FUTURE எடுத்து வைத்து கொண்டு (OPTION தேவை என்பவர்கள் தேவையான STRIKE PRICE வைத்து கொண்டு )ஒரு 3 மாதங்கள் கவனியுங்கள் ..
அதன் பின் உங்கள் தகுதிக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பணத்தை மாதம் ஒரு 10000 ரூபாயாவது ACCOUNT இல் போட்டு நீங்கள் கடந்த 3 மாதம் நீங்கள் செய்ய நினைத்த TRADE ஐ  அடுத்த 3 மாதம் TRADE செய்து பாருங்கள் ..இழப்பு வந்தாலும் பரவாயில்லை ..கண்டிப்பாக PAPER TRADE செய்ய கூடாது ..

ஒவ்வொரு தவறுக்கும் பணத்தை இழந்தால் அடுத்த அந்த தவறு செய்ய மாட்டோம்,,,இது தான் வெற்றியின் சூட்சுமம் ..எனது வெற்றியும் சாத்திய பட்டது இப்படிதான் ..நான் கற்று கொண்டது இப்படி தான் ...

இதன் பின் நீங்கள் எந்த பயிற்சியாளரையும் தேடவேண்டாம்..

இவை தான் பயிற்சியாளர்கள்  பற்றிய எனது கருத்து ..
இந்த பதிவில் தவறுகள் இருப்பின் கண்டிப்பாக சுட்டிகாட்டவும் .....

நிறைய  நண்பர்கள் என்னுடைய CHAT BOX இல் வந்து ஒவ்வொரு TIPS PROVIDER ,பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள் பேர் சொல்லி இவர் நல்லவரா ?இவர் கெட்டவரா ?என்று கேட்கின்றனர் ..

..இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது ..(நானும் கூட )..ஏனென்றால் நான் எனது பயிற்சி வகுப்புகள்  திட்டமிடுவது மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் தான்..அதன் பின் எவரேனும் தொடர்பு கொண்டால் அவர்களை அடுத்த மாதம் EXPIRY முடிந்த வுடன் FB இல் UPDATE போடுவேன் அப்போது வாருங்கள் என்று சொல்லிவிடுவேன் ..ஏனென்றால் மாதத்தின் முதல் 10 நாட்களில் OPTION இல் பெரிய அளவு TRADE செய்ய முடியாது ..அந்த நேரத்தில் வகுப்புகள் நடத்துகிறேன் ..10-30 தேதி வரை எனக்கு TRADE தான் முக்கியம் ..வகுப்பு எடுப்பதில் கிடைக்கும் பணத்தை  விட இங்கே TRADING இல் அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற சுயநலம் தான் ...இப்படி தான் இப்படிதான் எல்லோரும் இருப்பார்கள்..எனவே தயவுசெய்து இது போல் வந்து கேட்டு உங்கள் நேரத்தை இங்கே வீணாக்க வேண்டாம்..

இன்னும் சில நண்பர்கள் இவர் என்னை இப்படி ஏமாற்றினார் ,, ,இந்த TIPS PROVIDER உங்களை(ZFORMULA RAVI ) பற்றி குறை சொன்னார் என்று எனது COMMENT BOX இல் வந்து UPDATE செய்கின்றனர் ..,இன்னும் சிலர் என்னிடம் போன் செய்து இந்த பயிற்சியாளர் உங்களை பற்றி இப்படி அசிங்கமாக பேசினார் என்று வருத்த படுகின்றனர்...

தயவு செய்து என்னிடம் வந்தோ ,எனது COMMENT BOX இலோ பிறரை பற்றி குறை கூறுவதை தவிர்க்கவும்..இந்த பதிவுகள் நிறைய நண்பர்களை சென்றடைய வேண்டும் .இந்த கட்டுரை நிறைய நண்பர்களுக்கு விழிப்புணர்வை தரவேண்டும்..அவ்வளவு தான் ..பிறரை குறைகூற இது இடம் இல்லை..தயவு செய்து விட்டு விடவும் ..

 TIPS கொடுக்கும் ,TRAINING CLASS எடுக்கும் அன்பு சகோதரர்களுக்கு ,ஒரு சின்ன வேண்டுகோள் ,ஒரு சிலர்   எனது பெயர் குறிப்பிடாமல்,பெயர் குறிப்பிட்டு இங்கே என்னை பற்றி தவறாக COMMENT செய்வது,விமர்ச்சனம் செய்வது  எனக்கும் தெரியும் நான் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை ..நான் பதிலும் சொல்வதில்லை .

இங்கே TRADER களை ஏமாற்ற எனென்ன மாதிரி நீங்கள் முயற்சிகள் செய்து வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும்..

நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை..உங்களுக்கும் இந்த சந்தையில் ஏதாவது திறமை இருக்கும்,ஏதாவதுவழிகள் தெரிந்திருக்கும் இந்த சந்தையில் சம்பாதிக்க .. ..உங்களின் அந்த திறமையை நான் மதிக்கிறேன்.அதனால் தான் நான் பெயர் குறிப்பிட்டு யாரையும் குறை சொல்வதில்லை  ..

குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்று சொல்வார்கள் ...இங்கே பங்கு சந்தையில் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று எழுதினால்,உங்களிடம் இருந்து ஏன் எதிர்ப்பு வருகிறது..???  அதற்கு உங்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தால்,,நீங்களே உங்களிடம் தவறு உள்ளது  என்பதை ஒப்பு கொள்வதாக தான் தோன்றுகிறது...

.நான் உங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதிற்கு முக்கிய  காரணம் " மார்க்கெட் இருக்கிறது " உங்களுக்கு பதில் சொல்ல..உங்கள் திறமை பொய்யென்று நிருபிக்க ..இங்கே மார்க்கெட் உள்ளது..

பங்குசந்தை  சொல்லும் இங்கே
யார் நல்லவர் என்று ??
யார் கெட்டவர் என்று ??
யார் திறமையானவர் என்று ?
யார் திறமையற்றவர் என்று..?

தோழமையுடன்
ZFORMULA RAVI

உங்களின் மேலான கருத்துகளையும், பகிர்வையும் வரவேற்கிறேன் ...

No comments:

Post a Comment