Thursday, 26 March 2015

SHARE  TRADING RULES ...(4)
SHARE இல் வணிகம் செய்ய விதிகள்...(4)

IN ENGLISH 

( I DON'T KNOW FLUENT ENGLISH.If ANY MISTAKES ....SORRY FRIENDS..)...



Some time  index in 2% 3 % negative(-) that time that some index share not moving down side at that time..these time we are do not take short position in that stock ..try long only..(example) 20.03.2015 Thursday Nifty Down 188(2.21)points..but Lt,Bharthi airtel,Not moving down side ..that shares moving (Lt+0.63%,Bharthi Airtel Moving +1.27%),,,This time we r dont take short in this share try long u get profit..this type of trade is 90% success possible...

IN TAMIL 

    CHARTS,TECHNICAL ஏதும் இல்லாமல் இயல்பாய் INTRA DAY TRADING செய்ய மிக எளிமையான சில வழிமுறைகள் உள்ளன..அவைகளில் இரண்டாவது (முந்தைய வழிமுறைகள் (http://zformula.blogspot.in/)உள்ளன.....

  INDEX  நன்கு இறங்கும் போது அந்த இன்டெக்ஸ் இல் உள்ள ஏதேனும் ஒரு STOCK  சரியாக இறங்காமல்  இருக்கும் ... INDEX இறங்கும் போது ...அந்த IDEX இல் உள்ள எல்லா  STOCK களும் இறங்கும் போது இந்த STOCK மட்டும் இறங்கவில்லை எனில்...இந்த STOCK  ஐ விற்க யாரும் விரும்பவில்லை..  அதற்கு நமக்கு தெரியாமல் எதாவது காரணங்கள் இருக்கலாம்...இந்த வகை STOCKS  களில் நாம் கண்டிப்பாக SHORT சைடு TRADING  செய்ய கூடாது..

LONG SIDE  TRADING செய்து பார்க்கலாம்...ஏன் LONG SIDE முயற்சி செய்து பார்க்கலாம் என்றால்.. INDEX ஏறியது எப்படியும் இறங்க தான் வேண்டும்...இந்த குறிப்பிட்ட STOCK ஐ  விவரம் தெரியாமல் விற்றவர்கள்(SHORT போனவர்கள் ).. INDEX  ஏறும் போது இனி STOCK இறங்காது  என்ற முடிவிற்கு வந்து அந்த STOCK ஐ வங்க  முயற்சி செய்யும் போது இன்னும் வேகமாக ஏறும் ...ஏற போகும் STOCK இல் நீங்கள் LONG SIDE  இருந்தால் உங்களுக்கு இலாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கும்...

இந்த மாதிரியான வணிகம் ஒரு 80% வெற்றியை தரும்..20% மட்டும் தோற்க வாய்ப்புள்ளது...தோற்பதற்கான காரணங்களை அடுத்த முறை எழுதுகிறேன்..

நமக்கு எதையும் உதாரணத்துடன் சொன்னால் மிக எளிதாக புரியும்...

26.03.2015 நேற்று வியாழகிழமை EXPIRY வணிகத்தின் போது ..NIFTY 188.65(2.21%)  புள்ளிகள் சரிந்துள்ளது ...ஆனால் அந்த NIFTY இல் உள்ள LT ,BHARTHI AIRTEL  SHARES (0.63%,1.27%)  விலை உயர்ந்துள்ளது...NIFTY 188 புள்ளிகள் மிக பெரிய சரிவை சந்தித்தாலும் NIFTY இல் உள்ள இந்த SHARES NEGATIVE ஆக முடியவில்லை POSITIVE ஆக முடிந்துள்ளது..

அது போல LT SHARE காலையில் வந்த குறைந்தபட்ச விலையான 1613.45 ஐ க்கு கூட வரமுடியாமல் கடைசி நேரத்தில் 1624 வரை வந்து உடனடியாக திரும்பி 1643 இல் சென்று முடிந்துள்ளது .. எனவே இந்த STOCK  SHORT போவதற்கு ஏற்றதல்ல..நாளை (27.03.2015) ஒரு வேளை மார்க்கெட் - இல் OPEN ஆனால்,OPEN ஆன உடனேயே.. இந்த STOCK  இல் LONG  போகலாம்..ஏற்கனவே நேற்று வந்த மாலை வந்த LOW (CHART இல் சரி பார்த்து  கொள்ளவும்)1624 RANGE ஐ SL ஆக வைத்து கொண்டு வாங்கலாம் ...கொஞ்ச நேரத்தில் இந்த STOCK  POSSITIVE (+)க்கிற்கு வந்து விடும்...
OPTION TRADE செய்பவர்கள் 1700 CALL 34.45 இல் முடிந்துள்ளது இதை வாங்கி TRADE செய்து பாருங்கள்...

ஒரு வேளை மார்க்கெட்போசிடிவே "(+)ஆக OPEN ஆனால் இந்த STOCK மிக வேகமாகஏறும் ENTRY கிடைப்பது கடினம் ..கொஞ்சம் நேரம் கழித்து LONG SIDE மட்டும் வணிகம் செய்து பார்க்கலாம்....
SHORT மட்டும் போகவே கூடாது...INDEX 188 புள்ளிகள் இறங்கும் போது  இறங்காத  இந்த STOCK மார்க்கெட் ஏறும் போது இறங்கவா போகிறது....?????

நாளை PAPER TRADE  செய்து பாருங்கள்..இந்த TRADING  ஒரு 80% மிக சரியாக இருக்கும்.....

நாளை CHECK  செய்து பாருங்கள்..சரியாக நடந்தால் இந்த பதிவை SHARE  செய்யுங்கள்...

இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் நம்புங்கள் ..

நம்மாலும் முடியும்....

Tuesday, 17 March 2015

GBN (GREAT BABU NUMBERS)


சில நாட்களுக்கு முன் நண்பர் பாலாஜி சுந்தரபாபு அனுப்பிய,அவர்களின் தந்தையார் உருவாக்கிய GBN (GREAT BABU NUMBERS )பற்றி ஆங்கிலத்தில் எழுதி இருந்தேன்,,அது பற்றிய ஒரு தமிழ் தொகுப்பு...


ஒரு சில அடிப்படை எண்கள்  உள்ளன..இந்த எண்களில் உலகம் முழுவதும் பொதுவான ஒரு தன்மைகள் உள்ளன..(உதாரணமாக உலகில் எந்தநாட்டின்  குழந்தைகளிடம் கேட்டாலும் PINK (பிங்க்) வண்ணம் தான் பிடிக்கும் என்று அதிகபட்ச குழந்தைகள் பதில் சொல்லும் இது குழந்தைகளின்  மனதின் இயல்பு.இது போல .) உலகின் TRADER கள் மத்தியில் உள்ள மிக முக்கியமான  எண்கள் பற்றிய ஒரு தொகுப்பு இது .இந்த எண்களை பயன்படுத்த CHARTS எதுவும் தேவையில்லை..எண்கள் எப்படி SUPPORT ,RESISTANCE ஆக பயன்படுகின்றன என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது..

அடிப்படை எண்கள்

10---30---45---55---70---90

இதை நூறுகளாக மாற்றினால் 

110, 130, 145, 155, 170, 190

இதையே முழு எண்களாக மாற்றினால்..


100, 300, 450, 550, 700, 900


இன்னும் சொன்னால்,


100,300,450,550,700,900, 1100,1300,1450,1550,1700,1900 2100,2300,2450,2550,2700,2900.....


இவைகளே நீண்ட கால TARGET களாக எல்லா வகை தொழிலுக்கும் முக்கிய எண்களாக இருக்கும்.


NIFTY, BANKNIFTY,SILVER,GOLD,CRUDE என எல்லாவற்றிற்கும் SUPPORT ,RESISTANCE இந்த வரிசையில் அமையும்...

1000,3000,4500,5500,7000,9000,11000,13000,14500,15500

For Intraday GBN RULE 1

உதாரணமாக
ஒரு STOCK 308 இல் TRADE ஆகி கொண்டிருந்தால் இந்த STOCK ற்கு SUPPORT 300 இலும் RESISTANCE 310 இலும் இருக்கும்.

அதுவே 

ஒரு STOCK விலை 222 ஆக இருந்தால் இதன் SUPPORT 210 ஆகவும் RESISTANCE 230 ஆகவும் இருக்கும்.

அதுவே

ஒரு அதுவே STOCK விலை 448 ஆக இருந்தால் இதன் SUPPORT 445 ஆகவும் RESISTANCE 455 ஆகவும் இருக்கும்.

GBN RULE 2


ஒரு STOCK 532 ஆக இருக்கும் போது RESISTANCE 545..ஆனால் இந்த STOCK அன்றைக்கு நேரடியாக 545 க்கு போகாது. 4--7 இந்த இரண்டு எண்களும் மிக பெரிய support மற்றும்532 எப்படியெனில்

532 இல் உள்ள STOCK 534..(LAST END 4) மிக சின்ன resistance அதன் பின் 537(LAST END 7)அடுத்த சின்ன resistance அதன் பின் 544(LAST END 4) அதன் பின் தான் 545 மிக பெரிய RESISTANCE..
அதே போல் இந்த STOCK இறங்கி வரும் போது அதே 544,537,534 முக்கிய SUPPORT ஆக இருக்கும்.

GBN RULE 3


முழு எண்களளுக்கு (100,200,300,400,500................) +2 அல்லது -2 மிக முக்கிய support and resistance ஆக இருக்கும்.

உதாரணமாக
200 இந்த எண்ணுக்கு (200+2=)202 resistanceஆகவும் ,இறங்கி வரும்போது (200-2=)198 support ஆகவும் இருக்கும்.

இவைகளை கவனித்து திரும்ப திரும்ப பயன்படுத்தி பார்த்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...


IMPORTANCE OF 55 & 70


55 மற்றும் 70 மிக முக்கியமான எண்கள் ..எப்போது 70 என்னும் எண்ணை தாண்டி STOCK இன் விலை செல்கிறதோ அப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்கிறது.. பெரும்பாலும் இந்த நிலையை தாண்டுவது கடினம்,,அப்போது அந்த STOCK 70 ஐ தாண்டி செல்லும் முன் கிழிறங்கி வந்தாலும் 55 மிக பெரிய SUPPORT ஆக இருக்கும்.

உதாரணமாக
270 இலிருந்து செல்லும் STOCK 370 வந்து சேரும் போது 370 ஐ தாண்டி வேகமாக செல்ல முடியாது 370 இலிருந்து 355 க்கு வந்து 370-355 நிலையிலேயே correction வந்து அதன் பின் தான் 370 ஐ தாண்டி அடுத்த கட்ட நகர்வுக்கு போகும்...

இவை அனைத்து திரும்ப திரும்ப பயிற்சி எடுப்பதன் மூலமே உங்களால் முழுமையாக புரிந்து TRADE செய்ய முடியும்...

இது முழுக்க முழுக்க நமது FACEBOOK நண்பர் பாலாஜி சுந்தரபாபு அவர்களின் தந்தையார் உருவாக்கிய தொகுப்பு இது TRADER களுக்கு பயன்பட வேண்டும் என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார்..
நான் அதை அப்படியே ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டேன் ..நமது தமிழ் நண்பர்களும் பயன்பெற வேண்டும் என்று தமிழில் மாற்றம் செய்து கொடுத்துள்ளேன்.  நீங்கள் நன்கு ஆய்வு செய்து பயிற்சி செய்து விட்டு அதன் பின் TRADING செய்யவும்..
நன்றி -நண்பர் பாலாஜி சுந்தரபாபு


Wednesday, 11 March 2015

My Fb Friend Balaji Sundarababu Given This stragery..Please read care fully Its very useful to you..

GREAT BABU NUMBERS - GBN TRADING METHOD ========================================= Thanks a lot to Balaji Sundarababu for sharing this system with us. This system is created by his father Babu. Hence the name of the system is "GBN" - Great Babu Numbers. This system can identify Supp/Resistances based on numbers only. So there is no need to view charts. Yet the method is very simple to use. Mr. Balaji uses this profitably since a long time & is proficient with its use. So lets see how this MAGIC NUMBER method works. Take following numbers as BASE for system 10----30--- 45---- 55---70---- 90 Now we have to write this in hundreds . Like this - 110, 130, 145, 155, 170, 190 Similarly in round numbers - 100, 300, 450, 550, 700, 900 Long term target - 100,300,450,550,700,900, 1100,1300,1450,1550,1700,1900 2100,2300,2450,2550,2700,2900..... For Nifty or Banknifty or Silver or any other big numbers 1000,3000,4500,5500,7000,9000,11000,13000,14500,15500.. WHY CONSIDER THESE NUMBERS ?? The answer this is the cycling of number (number rotation) prevailing in all the world markets. For Intraday Example, take a stock which is trading 308. Now support of the stock 300 and resistance 310. Like a stock price 222 Support 210 Resistance 230 For 448 support 445 resistance 455 And the second condition:--- Example : If a stock trading at 532 then its resistance 545. But in intra-day the stock will not go straight to 545. Then Take two numbers - 4 and 7 Wherever 4 and 7 comes it would be small support or resistance numbers Let us see an example 532 is the stock price. Then next small resistance 534 here 4 is small resistance then 537 then 544 and only big resistance 545. If the stock goes below then 544, 537,534 acts like support. So wherever u see 4 and 7 is the last digit of the number it will surely acts like support and resistance. Now 3rd and the last condition: Wherever round numbers come like 100,200,300,400,500................ Then +2. Or -2 with the numbers act like support and resistance. See if we take 200 . A stock price when crosses above 200 then 200+2= 202 resistance like below 200 then 200-2= 198. IMPORTANCE OF 55 & 70 ====================== The number 55 and 70 very important numbers. When the number 70 allows to cross it and price closes above it, the stock enters in the next cycle of big target. Mostly it won't allow and all the stock mostly correct at this place 55 or 70. Same thing in breakdown, 55 won't allow the stock to break down and the second cycle of correction will mostly stop. Example;;; Every cycle starts crossing 70. If a stock rallies from 270 then 370 won't allow the stock to take a another round so a good correction comes there . So if the stock is weak & falling then it cannot break 355. So correction will occurs 355 to 370 zone. THE END That's it please read it again and again This is so so soooo simple but only practice will make you perfect!!!"""" Go and refer 50 and more stocks where they took support and resistance yesterday and today or previous day..... This is without chart trading. For best result Use 3 or 4 stocks only and note the open high low close of the stock everyday. So u know where the stock is going...
Balaji Sundarababu A closed price of a stock. Will must give one high and one low. When market open at the same time it cannot give right support or resistance . First it may touch the one side support or resistance of our level after that we can take a decision on the stock
Balaji Sundarababu Actually there is no stop loss for swing trader . For intra day trader put stop loss below the support level according to the stocks. Stock will touch the support level so keep stop loss keep it below the support and above the resistance. Swing trader entre when main resistance level break and keep silent . Ant let the stock free. Then u can sell.

Sunday, 8 March 2015

SHARE  TRADING RULES ...(3)
SHARE இல் வணிகம் செய்ய விதிகள்...(3)

IN ENGLISH
( I DON'T KNOW FLUENT ENGLISH. If ANY MISTAKES ....SORRY FRIENDS..)

TRY TO TRADE YOUR OWN MONEY..(DON'T TRADE FRIENDS (MONEY) ACCOUNTS ,CLIENTS (MONEY) ACCOUNTS )..AND ALSO TRY TO TRADE WITH SURPLUS MONEY...


IN TAMIL


உங்களுடைய சொந்த பணத்தில் TRADE செய்ய முயற்சி செய்யுங்கள்.. அது உங்களின் உபரி பணமாக இருந்தால் இன்னும் நல்லது ...அது போல கடன் வாங்கியோ,நண்பர்களின் பணத்திலோ...நண்பர்களின் ACCOUNT இல் TRADE செய்யாதிர்கள்..

பங்கு சந்தை வணிகம் என்பது வெறும் வணிகம் மட்டும் இல்லை அது உளவியல் சம்பந்தபட்ட தொழிலும் கூட .ஆரம்பத்தில் நமது சொந்த பணத்தை கொண்டு TRADING கிற்கு வருகிறோம்..எந்த தொழிலும் ஆரம்பத்தில் இழப்பு வருவது இயல்பு தான். நாம் அந்த  இழப்பை சந்தித்தவுடன் அதோடு நின்று  நமக்கு இந்த தொழிலில் ஏன் இழப்பு வந்தது ?? அதை சரி செய்வது எப்படி என்றெல்லாம் யோசிப்பதில்லை..உடனடியாக அடுத்ததாக கடன்வாங்கி கொண்டு வந்து அதை இழந்து... திரும்பவும் கடன் வாங்கி  அந்த கடனுக்கு வட்டி கட்ட என்று ஒருகட்டத்தில் திரும்பி பார்த்தால் நாம் இழந்திருப்பது பல இலட்சங்கள் இருக்கும்..

இன்னும் ஒரு சிலரோ ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கடனும் வாங்க முடியாமல் தமது நண்பர்களுக்கு TRADE  செய்து தருகிறேன் என்று அவர்கள் ACCOUNT இலும் TRADE செய்து அதிலும் கடனாளி ஆகி நட்பை இழந்து,,பல இலட்சங்களுக்கு கடனாளி ஆகி ஒரு இராத்திரி கூட நிம்மதி யாக தூங்க கூட முடியாமல் தவித்து வருகின்றனர்...

இது  எப்படி உளவியல் ரீதியான தொழில்..????

முதலில் நமது பணத்தில் இழப்பை சந்திக்கும் போது,முதல் தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது,ஏனெனில் அது நமது பணம் அந்த பணத்திற்கு நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை .அதன் பின் கடன் வாங்கி தொழில் செய்யும் போது ஆரம்பிக்கும் உளவியல் ரீதியான பிரச்னை..
இப்போது நமது ACCOUNT இல் உள்ள பணம் இன்னொருவரிடம் கடனாக வாங்கியது..இதை திருப்பி கொடுக்க வேண்டும் ..இந்த பணத்தை இழந்து விட்டால் அதற்கு வட்டி கட்டி ஆகவேண்டும்,..இந்த மனநிலையில் TRADING இல் உட்காரும் போது,நாம் வாங்கிய SHARE ஒரு சின்ன இறக்கத்தை சந்தித்தால் கூட நாம் பயந்து போய் இழப்பில் விற்று விடுவோம் அதன் பின் அந்த ஷேர் விலை ஏறும்..அந்த இழப்பை சரிகட்ட திரும்ப TRADING ..இப்படியாக போகும்..(எது வரை போகும் என்று உங்களுக்கே தெரியும்..ஆமாம் அடுத்ததாக கடன் வாங்கும் வரை போகும்...).

அது போல் தான் நண்பர்களின் ACCOUNT இல் TRADE செய்வது,CLIENT களின் ACCOUNT இல் TRADE செய்வது இதிலும் பல சிக்கல்கள் உள்ளன..இதற்கு என்னையே ஒரு உதாரணமாக சொல்லலாம்.சென்ற ஆண்டு TRADING மற்றும் TIPS கொடுத்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நண்பர் அறிமுகம் ஆனார்.இந்த நண்பருக்கு அன்றைய நிலையில் சந்தையில் இழந்திருந்தது 60 இலட்சங்கள்...TIPS வாங்குவதற்காக என்னிடம் வந்த அவர் மிகவும் நெருங்கிய நண்பராக மாறிவிட்டார்..அவரது இழப்பில் இருந்து மீட்க என்னை அவரது இன்னொரு நண்பரின் ACCOUNT இல் 15 இலட்சம் பணம் இருக்கிறது அதை நீங்கள் TRADE  செய்து எனக்கு பணம் சம்பாதித்து எனக்கு கடனை அடைக்க உதவுங்கள் என்று கேட்டார்...

எனக்கு அதில் உடன்பாடு  இல்லை..என்று தெரிவித்து விட்டேன் ஆனாலும் அவர் விடவில்லை..அந்த ACCOUNT இல் இழப்பு வந்தாலும் பரவாயில்லை..நீங்கள் இழப்பில் பொறுபெடுத்து கொள்ள வேண்டாம் ...இலாபம் வந்தால்  அதில் 30%தருகிறேன் என்றெல்லாம் சொல்லி பார்த்தார் ..அப்படியும் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்..அன்றைய சூழலில் அவருக்கு இருந்த ஒரே எண்ணம் அன்றைய என்னுடைய ACCOUNT இல் அப்போது இருந்த முதலீடு 110000 இந்த பணத்தை வைத்து வாராவாரம் 12000-15000 வரை சம்பாதித்து கொண்டிருந்தேன். 1லட்சத்தை வைத்து 15000 சம்பாதிக்கிறார் 15இலட்சம் கொடுத்தால் வாரம் 2 இலட்சம்  சம்பாதிப்பார் தனது மொத்த கடனையும் சீக்கிரம் அடைத்து விடலாம் என்பது அவரது எண்ணம்..

ஒரு கட்டத்தில் அந்த நண்பருக்கு உதவுவதற்காக நானும் சரி என்று ஒப்புக்கொண்டு ACCOUNT ஐ பொறுப்பெடுத்து கொண்டேன்..இலாபம் வருவதை நீங்களே எடுத்து கொள்ளுங்கள்..இழப்பு வந்தாலும் என்னிடம் கேட்காதிர்கள் என்று  கூறி தான் ஒப்புக்கொண்டேன்.அந்த  ACCOUNT  5இலட்சம் ரூபாயுடன் முதல் 2 நாட்கள் TRADING நன்றாக தான் போனது, 14000 வரை இலாபத்தில் இருந்தது.மூன்றாம்  நாள் TRADING ஒரு சிறு தவறு..ACCOUNT இல் 30000 ஒரே நேரத்தில் இழக்க நேர்ந்தது..ACCOUNT -16000 திற்கு வந்தது அந்த நண்பர் ஏன் சார் பார்த்து பண்ணி இருக்கலாமே என்று கேட்டார்..முதன் முதலில் பயம் வந்தது ..இன்னொருவரின் ACCOUNT அவருக்கு பதில் சொல்ல வேண்டுமே ??என்ற பயம்...???

அந்த -16000ஐ எடுக்க வேண்டி அவசர அவசரமாக TRADING ..மாற்றி மாற்றி SL TRIGGER என அடுத்த அடுத்த நாட்களிலும் தொடர்ந்து இழப்புகள் இழப்பு ஒரு இலட்சம் வரை சென்றது ..அன்றோடு TRADING ஐ நிறுத்தினேன் ACCOUNT ஐ அவரிடமே திரும்ப கொடுத்தேன்..இழப்பு ரூபாயை அவர் திரும்ப கேட்கவில்லை இருப்பினும் இலாபம் வந்தால் அவர் தருவதாக சொன்ன 30% ஐ நான் இழப்பிலும் 30% கணக்கிட்டு திரும்ப கொடுத்தேன் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து....அதன் பின் ஒரு சில நாட்கள் என்னுடைய ACCOUNT இலும் சின்ன சின்ன இழப்புகள் (முந்தைய  இழப்பின் பாதிப்பு மனநிலையில் தொடர்ந்து இருந்து வந்தது...).ஒரு 10 நாட்கள் TRADING ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்து விட்டு அதன் பின் சாதாரண மனநிலைக்கு வந்த பின் எனது ACCOUNT இல் TRADING செய்து எனது இழப்பை ஈடு கட்டினேன்...

ஏன் ?? ஏன் ???? இந்த இழப்பு?? 80-85 மிக சரியாக TRADING செய்து கொண்டு இருந்த நான் ..இன்னொருவரின் ACCOUNT இல் TRADE செய்யும் போது தோற்றது ஏன்??? ஒரே காரணம் பயம்...பயம் மட்டுமே...என்னுடைய ACCOUNT இல் உள்ள பணம் என்னுடைய பணம் ..இந்த பணத்திற்கு நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை ..அதனால் நான் TRADING செய்யும் போது சின்ன (-) இழப்பு வந்தாலும் SL போடாமல் காத்திருந்து இலாபத்தில் வெளியே வருவேன்..அதுவே இன்னொருவரின் ACCOUNT என்றால் அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும் ..அதனால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டி முக்கியமான நேரங்களில் TRADING செய்யாமலும்,இழப்பை சரிகட்ட .,இழப்பை சரிகட்ட என்று தவறாக TRADING செய்து மேலும் இழப்பை மட்டுமே சந்தித்தேன்...

அன்றையிலிருந்து இன்று வரை  TRADE  செய்து கொடுக்க சொல்லிகேட்கும் ...எல்லோருக்கும் ஒரே பதில் தான் "மன்னித்துவிடுங்கள் என்னால் முடியாது..."

கடன் வாங்கி அல்லது  ,பிறருக்கு பதில் சொல்லும் சூழ்நிலையில் இருந்து TRADING செய்து பணம் சம்பாதித்ததாக  ஒருவரை ,ஒரே ஒருவரை கூட பார்க்க முடியாது...

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ,,ஏன் நமது சொந்த பணத்தில் TRADE செய்ய வேண்டும் என்று...???


இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் ....நம்புங்கள் ..

நம்மாலும் முடியும்....



Saturday, 7 March 2015

SHARE  TRADING RULES ...(2)
SHARE இல் வணிகம் செய்ய விதிகள்...(2)

IN ENGLISH
( I DON'T KNOW FLUENT ENGLISH. If ANY MISTAKES ....SORRY FRIENDS..)
...

TRY  TO TRADE MAXIMUM 3-4 SAME SCRIPTS REGULARLY...IF U WATCH DAILY (ANY)SAME 3-4 SCRIPTS(MINIMUM 2 MONTHS)...AFTER 2 MONTH U REALLY SEEN THE MAGIC....WHAT MAGIC ??? THAT STOCKS SPEAK TO U..THE STOCKS SAID "I AM READY TO GO UP".. "I AM READY TO GO DOWN"..."I AM VERY TIRED AM NOT MOVE..AVOID ME."..THESE ALL LINES ARE  ASKED BY SHARES...HOW ???? U WATCH REGULARLY THIS STOCKS.. U KNOW ITS MOVEMENT SO AFTER 2 MONTHS EXPERIENCE U REALLY UNDERSTAND THAT STOCKS STRENGTH...THEN U DECIDE THE TRADE U EARN MONEY...

IN TAMIL


ஒரு குறிப்பிட்ட சில 3-4 SHAREகளில்  மட்டும் வணிகம் செய்யுங்கள்...எதற்காக இப்படி சொல்லுகிறேன் என்றால்..நிறைய நண்பர்களை கவனித்து இருக்கிறேன்.,...எல்லா SHARE  களிலும் TRADING பண்ணுவார்கள்..


எனக்கு தெரிந்த சென்னையை சேர்ந்த ஒரு வசதியான  சகோதரி TRADING செய்வதை கவனித்து இருக்கிறேன்...அவர்கள் TERMINAL இல் மொத்தம் குறைந்தது 40 SCRICPT கள் இருக்கும்..TRADING TERMINAL இல் நீங்கள் கவனித்து இருக்கலாம் எந்த STOCK ஆவது NEW HIGH,NEW LOW காட்டினால் COLOR CHANGE ஆகும் ..அது  ஓன்று தான் இந்த சகோதரிக்கு BUYING,SELLING SIGNAL ..எந்த SHARE NEW HIGH வந்தாலும் அதை வாங்குவார்..எந்த SHARE NEW LOW போனாலும் அதை விற்பார் ...ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது ,தேவையும் இல்லை...40 SHARE களிலும் வியாபாரம் செய்வார்...எனக்கு தெரிந்த வரை (2009-2011 வரை ) சுமார் 22 இலட்சம் வரை இந்த மார்க்கெட்டில் இழந்திருந்தார்....அதன் பின் உள்ள நிலவரங்கள் எனக்கு தெரியவில்லை...

இது போல் தான் நம்மில் பலரும் இருக்கின்றார்கள் ...ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது...எல்ல STOCK களிலும் வணிகம் செய்வார்கள்...BROKER OFFICE சென்று வணிகம் செய்பவர்களின் நிலைமையோ இன்னும் மோசம்...அங்கே இவருக்கு அறிவுரை சொல்ல என்றே நிறைய நண்பர்கள் வருவார்கள்...ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த அளவு தெரிந்த ஷேர் களில் வணிகம் செய்ய சொல்லுவார்கள்...நாமும் கண்ணை மூடிக் கொண்டு வணிகம் செய்து பணத்தை இழந்து வருவோம்..

முக்கியமாக தெரிந்து கொள்ளுங்கள் ...
ஒவ்வொரு SHARE இன் வேகமும் வெவேறு விதமாக இருக்கும்...
உதாரணமாக சொல்லவேண்டுமானால்..

1:   ITC  SHARE மிக  மெதுவான SHARE..(செய்திகள் இல்லாத சமயத்தில் )0.50 பைசா ஏறுவதற்குள் நம்மை தவியாய் தவிக்க வைத்து விடும்..

2:YES BANK அது போல தான் BANK NIFTY  இறங்குகிறதே என்று SHORT போனால்அது ஏறும்..

3:  MCDOWEL SHARE (சாராய கம்பெனி )எப்போதுமே போதையில் இருப்பது போல தான் ..திடிரென்று வேகமாய் ஓடும் (ஏறும், இறங்கும்)ஏன் எதற்கு என்றெல்லாம் அதற்கும் தெரியாது நமக்கும்தெரியாது  ...

4:JSW STEEL அது  போலத்தான் நாம் பார்த்து கொண்டிருக்கும் பொது ஒரு விலையில் இருக்கும் வேறு ஏதோ ஒரு SHARE ஐ பார்த்து விட்டு திரும்ப பார்த்தால் அது ஒரு 10 ரூபாய் வித்தியாசத்தில் இருக்கும்..

இந்த மாதிரி ஒவ்வொரு SHARE க்கும் ஒவ்வொரு வகையான வேகம் உண்டு...இப்படி இருக்கும் போது நாம் நமக்கென உள்ள எதிர்பார்ப்பை எல்லா SHARE களும் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்க முடியாது.. நிறைய நேரங்களில் தோற்று போகும்..அப்படி தோற்பது  என்பது சின்ன விஷயம் இல்லை.நமது முதலீடு மொத்தமும் காணாமல் போய்விடும்..

இதுவே நமக்கென ஏதாவது ஒரு 4 கம்பெனி SHARE களை மட்டும் தேர்ந்து எடுத்து கொண்டு,அதை மட்டும்(ஒரு 2 மாதமாவது )கவனித்துபாருங்கள்..... சும்மா அந்த SHARE ஐ  மட்டும் பார்க்க கூடாது..NIFTY  FUTURE 10 POINT ஏறினால் இந்த ஷேர் எவ்வளவு ரூபாய் ஏறுகிறது ...NIFTY  FUTURE 10 பாயிண்ட் இறங்கினால் இந்த SHARE எவ்வளவு ரூபாய் இறங்குகிறது என்று கவனித்து பார்த்தால்  போதும் அதன் வேகம் உங்களுக்கு மிக எளிதாக புரியும்...அந்த SHARE உங்களிடம் அப்படியே பேசும் ..நான் ஏற போகிறேன்...நான் இறங்க போகிறேன்... நான் அமைதியாக இருக்க போகிறேன்... என்று உங்களிடம் பேசும்..

எனக்கு RELAINCE CAPITAL ஷேர் என்னுடைய COMPANY ... இந்த ஷேர் இப்போது என்ன செய்கிறது..அடுத்து என்ன செய்ய போகிறது ..என்று எனக்கு ஒரு 85% மிக சரியாக சொல்ல முடியும்...NIFTY  10 POINT ஏறினால் RELCAP எத்தனை POINT ஏறவேண்டும்,..NIFTY  வேகமாக 40 POINT ஏறினால் RELCAP  எத்தனை ரூபாய் ஏறவேண்டும் என ஒரு மன கணக்கே என்னிடம் உள்ளது ....அவ்வாறு RELCAP ஏறவில்லை என்றால் எந்த விலையில் SHORT போகலாம்..என மிக எளிதாக என்னால் சொல்ல முடியும்....ஏனென்றால் நான் இந்த ஷேர் 300 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் செல்லும் வரையிலும்...3000 ரூபாயில் இருந்து  300 ரூபாய் வந்து இப்போது 480 ரூபாயில் இப்போது TRADE  ஆகும் வரை ஒரு 7ஆண்டுகளாக இந்த SHARE இல் TRADE  செய்து வருகிறேன்...

இது போல AVUDAIYAPPAN MADASAMY என்றொரு எனது FB நண்பர் ஒருவர் எப்போது CHAT இல் வந்தாலும் அவர் விசாரிப்பது ASHOK LEYLAND SHARE ஐ பற்றி மட்டும்தான் எனக்கு தெரிந்து அவர் TRADE  செய்வது அதில் மட்டும் தான்  என்று நினைக்கிறேன்...இவரிடம் சென்று கேட்டால் ASHOK LEYLAND பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்..இப்படி ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு SHARE  பற்றி  ஓரளவு நன்றாக தெரிந்து இருக்கும் அந்த SHARE இன் அசைவு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்...உங்களிடம் முழுமையாக அந்த SHARE  பேசும்...

அதிகபட்சம் 4 ஷேர் களுக்கு மேல் கவனிக்க,TRADE செய்ய  முயற்சி செய்ய வேண்டாம்... .
நாம் பணம் சம்பாதிக்க தான் இந்த தொழிலுக்கு வந்திருக்கிறோம்...தினசரி மார்க்கெட் ஏற்றமும் இறக்கமும் கொண்டே உள்ளது...எல்லா SHARE களும் இறங்கவோ ,ஏறவோ தான் போகிறது ..இந்த 4 SHARE  களும் ஏறவோ இறங்கவோ தான் போகிறது ..அப்போ நாம் இந்த 4 SHARE களை மட்டும் கவனித்து வந்தால் நமக்கு தேவையான பணம் கிடைக்கும் என்றால்  ஏன் அதை செய்ய கூடாது...??????

இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ,,,10 பிள்ளைகள் உள்ள வீட்டில் ஒவ்வொரு குழந்தையும் எப்போது என்ன செய்யும் ,எந்த குழந்தைக்கு என்ன பிடிக்கும் ,,ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போது அடுத்த குழந்தை என்ன செய்யுமோ என்று அந்த பெற்றோரால் எதையுமே கவனித்து சொல்ல முடியாது ....

அதே போல 2 குழந்தைகள் மட்டும்  உள்ள வீட்டில் அந்த குழந்தைகள் எப்போது என்ன செய்யும் எப்போது சாப்பிடும் எப்போது அழும் எப்போது சிரிக்கும் என்று அந்த குழந்தையின் பெற்றோருக்கு முழுமையாக தெரியும்...
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்..

இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் ....நம்புங்கள் ..

நம்மாலும் முடியும்....



Sunday, 1 March 2015

SHARE  TRADING RULES ...(1)
SHARE இல் வணிகம் செய்ய விதிகள்...(1)

IN ENGLISH 


( I DON'T KNOW FLUENT ENGLISH.If ANY MISTAKES ....SORRY FRIENDS..)...



Some time sector index in 2% 3 % possitive(++) that time that sector share not moving at that time..these time we are do not take long position in that stock ..try short only..(example) 28.02.2015 saturday bank nifty up 616 (3.26%)points..but sbin only move 2.1(0.7%) only,,,This time we r dont take long this share try short u got profit..this type of trade is 80% success possible...

IN TAMIL 

    CHARTS,TECHNICAL ஏதும் இல்லாமல் இயல்பாய் INTRA DAY TRADING செய்ய மிக எளிமையான சில வழிமுறைகள் உள்ளன..அவைகளில் சில..

1..SECTOR  INDEX  நன்கு ஏறும் போது அந்த இன்டெக்ஸ் இல் உள்ள ஏதேனும் ஒரு STOCK  சரியாக ஏறாமல் இருக்கும் ... அந்த SECTOR  ஏறும் போது ...அந்த SECTOR இல் உள்ள எல்லா  STOCK களும் ஏறும் போது இந்த STOCK மட்டும் ஏறவில்லை எனில்...இந்த STOCK  ஐ வாங்க  யாரும் விரும்பவில்லை..  அதற்கு நமக்கு தெரியாமல் எதாவது காரணங்கள் இருக்கலாம்...இந்த வகை STOCKS  களில் நாம் கண்டிப்பாக LONG  சைடு TRADING  செய்ய கூடாது..

SHORT  SIDE  TRADING செய்து பார்க்கலாம்...ஏன் SHORT SIDE முயற்சி செய்து பார்க்கலாம் என்றால்..SECTOR  INDEX ஏறியது எப்படியும் இறங்க தான் வேண்டும்...இந்த குறிப்பிட்ட STOCK ஐ  விவரம் தெரியாமல் வாங்கியவர்கள்.. INDEX  இறங்கும் போது இனி ஏறாது என்ற முடிவிற்கு வந்து அந்த STOCK ஐ விற்க முயற்சி செய்யும் போது இன்னும் வேகமாக இறங்கும்...இறங்கும் STOCK இல் நீங்கள் SHORT SIDE  இருந்தால் உங்களுக்கு இலாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கும்...

இந்த மாதிரியான வணிகம் ஒரு 80% வெற்றியை தரும்..20% மட்டும் தோற்க வாய்ப்புள்ளது...தோற்பதற்கான காரணங்களை அடுத்த முறை எழுதுகிறேன்..

நமக்கு எதையும் உதாரணத்துடன் சொன்னால் மிக எளிதாக புரியும்...

28.02.2015 சனிகிழமை BUDGET வணிகத்தின் போது ..BANK INDEX 616 புள்ளிகள் (3.26%)உயர்ந்துள்ளது...ஆனால் அந்த SECTOR இல் உள்ள SBIN  SHARE வெறும் 2.10 (0.7%) மட்டும் உயர்ந்துள்ளது...BANKNIFTY காலையில் வந்த அதிகபட்ச (318) விலையை தாண்டி 616 புள்ளிகள் அதிகமாக சென்றுள்ளது..

ஆனால் SBIN (STATE BANK OF INDIA ) காலையில் வந்த அதிகபட்ச விலையான 306.40 ஐ தண்ட முடியாமல்..ஏன் அந்த விலைக்கு அருகில் கூட போக முடியாமல் அதிலிருந்து 4.40 ரூபாய் குறைவாகவே முடிந்துள்ளது... எனவே இந்த STOCK  LONG  போவதற்கு ஏற்றதல்ல..நாளை (02.3.2015) ஒரு வேளை மார்க்கெட் + இல் OPEN ஆனால்,OPEN ஆன உடனேயே.. இந்த STOCK  இல் SHORT  போகலாம்..ஏற்கனவே நேற்று வந்த HIGH ஆன 306.40 ஐ SL ஆக வைத்து கொண்டு...கொஞ்ச நேரத்தில் இந்த STOCK  NEGATIVE (-) க்கிற்கு வந்து விடும்...

ஒரு வேளை மார்க்கெட்NEGATIVE (-)ஆக OPEN ஆனால் இந்த STOCK மிக வேகமாக இறங்கும்.. ENTRY கிடைப்பது கடினம் ..கொஞ்சம் நேரம் கழித்து SHORT SIDE வணிகம் செய்து பார்க்கலாம்....
LONG  மட்டும் போகவே கூடாது...INDEX 616 புள்ளிகள் ஏறும் போது  ஏறாத இந்த STOCK மார்க்கெட் இறங்கும் போது ஏறவா போகிறது....?????

நாளை PAPER TRADE  செய்து பாருங்கள்..இந்த TRADING  ஒரு 80% மிக சரியாக இருக்கும்.....

நாளை CHECK  செய்து பாருங்கள்..சரியாக நடந்தால் இந்த பதிவை SHARE  செய்யுங்கள்...

இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் நம்புங்கள் ..

நம்மாலும் முடியும்....


Saturday, 21 February 2015

நண்பர்களுக்கு ,  ஒரு நான்கு  நாட்களுக்கு முன் ஒரு TECHNICAL புத்தகத்தை பற்றி எழுதி இருந்தேன்..

                அனேகமாக நிறைய நண்பர்கள் வாங்கி இருப்பபீர்கள் என்று நினைக்கிறேன்...ஒரு சில நண்பர்கள் அது  MCX TRADING க்கிற்கு பயன்படுமா என்று கேட்டனர்..CHARTS  என்பது உலகம் முழுவதிற்கும் பொதுவான ஒன்றே.அதுவும் CANDLE CHARTS உலகின் எந்த ஒரு சந்தையிலும் வணிகம் செய்ய உதவும்.

  சரி புத்தகத்தை வாங்கியாயிற்று,அதை படிக்க வேண்டும் எப்படி படிக்க ????  இது TECHNICAL  சம்பந்தமான புத்தகம்.இதை வாங்கி படித்து பார்த்த உடனே எல்லாம் புரிந்து விடாது..

இந்த புத்தகத்தை மிக எளிதில் புரிந்து படிக்க மிக எளிய வழி  ஒன்று இருக்கிறது ..அது பற்றி இங்கு கூறுகிறேன் பயன்படுத்தி கொள்ளுங்கள்....

அதில் உள்ள எல்லாற்றையும் நாம் கற்று கொள்வது என்பது கடினம்..நாம் சாதாரண (RETAIL )வணிகர்கள் ...நமக்கு மிக முக்கியமாக படிக்க வேண்டியதையும் எப்படி படிக்க வேண்டும் என்பதையும் இங்கு கூறுகிறேன்..

அந்த புத்தகத்தில் மிக முக்கியமாக முதலில் நன்கு (கண்டிப்பாக )கற்று கொள்ளவேண்டியது CANDLES..இன்றைய சந்தைகளில் CHARTS பயன்படுத்தும் 80%மேற்பட்ட வணிகர்கள் பார்த்து பயன்படுத்துவது CANDLE  CHARTS ஒன்றை தான் .

படிக்கும் முறை  

 CANDLE பற்றி எழுதி உள்ள பக்கங்களை முதலில் ஒரு வாரம் தனியாக எந்த தொந்தரவும் இல்லாத நேரத்தில் புரிந்து படித்து கொள்ளுங்கள்..CANDLE ஒரு CHART இல் எப்படி உருவாகின்றது OPEN,HIGH  LOW,CLOSE ஆகிய விஷயங்கள் தான்,ஒரு CANDLE உருவாவதற்கு காரணம் அதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.


 அதன் பின் அதை REAL CHARTS  இல் APPLY  செய்து பாருங்கள் ..நிறைய நண்பர்கள்  TECHNICAL சார்ட்ஸ் பயன்படுத்துவதில்லை,..நீங்கள் இந்த CANDLE  பற்றி ஓரளவு படித்து தெரிந்து கொண்ட பின் அதை ஏற்கனவே நடந்து முடிந்த CHARTS உடன் ஒப்பிட்டு பார்த்தால் தான்  அதை  முழுமையாக புரிந்து கொள்ள முடியும்...

அதற்காக உடனே CHARTS ஏதும் நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டாம்..
ICHARTS .IN  என்ற ஒரு வெப்சைட் உள்ளது இந்த WEBSITE  இல் முதல் பக்கத்தில் CHARTS என்று ஒரு பகுதி இருக்கும் அதை கிளிக் செய்தால் இன்னொருPAGE  OPEN  ஆகும்..இதில் இந்திய பங்குசந்தையில் வர்த்தகமாகும் எல்லா கம்பெனிகளும் இதுவரை கடந்து வந்த பாதை,ஆரம்பம் முதல் இப்போது வரை உள்ள EOD CHARTS  இலவசமாக கிடைகிறது..

இந்த CHARTS ஐ நீங்கள் எடுத்துவைத்து கொண்டு  (மொபைல் அல்லது கம்ப்யூட்டர் இரண்டிலும் பயன்படுத்தலாம்.)நீங்கள்  வாங்கிய TECHNICAL புத்தகத்தையும் கையில் வைத்து கொண்டு புத்தகத்தில் உள்ள எல்லா CANDLE லும் CHART இல் உள்ள CANDLE லும் ஒரே மாதிரி உள்ளதா என்பதை வைத்து கற்று கொள்ளலாம்.

ஓரளவும் இதை வைத்து ஒரு வாரம்  கற்று கொள்ளுங்கள் அதன் பின்
அடுத்தது நேரடி பயிற்சியையும் நீங்களே முயற்சி செய்யலாம் ...நீங்கள் வழக்கமாக TRADE செய்யும் ,நீங்கள் அதிகம் இழந்த அல்லது நீங்கள் அதிகம் சம்பாதித்த என உங்களுக்கு பிடித்த COMPANY கள் ஐந்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் ..

அந்த கம்பெனிகளின் தற்போதைய  CHARTS  எடுத்து பாருங்கள் ..அதில் கடைசியாக நான்கு நாள் முடிந்த CANDLE களை பாருங்கள்..அதே போன்ற CANDLE இந்த புத்தகத்தில் எந்த பக்கத்தில் இருக்கிறது என்று பாருங்கள் .தினசரி இதை தேடி பாருங்கள் என்றெல்லாம் இந்த CANDLE கள் (புத்தகத்திலும் CHART லும் ஒரே மாதிரியான CANDLE கள் )தோன்றுகிறதோ அந்த STOCK ஐ மறுநாள் கவனித்து பாருங்கள் எந்த CANDLE உருவானால் அடுத்த CANDLE எப்படி உருவாகும் என்று அந்த புத்தகத்தில் எழுதியுள்ள படி நடக்கிறதா என்று பாருங்கள்..கண்டிப்பாக நடக்கும்..இப்படியே கொஞ்ச நாட்கள்  பார்த்து பழகி கொண்டிருந்தால் ,எல்லா CANDLE உங்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும் மார்க்கெட் மேல் நம்பிக்கையும் பிறக்கும்...

அதன் பின் மற்ற INDICATORS ,மற்றவைகளை கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொள்ளலாம்..

 இவ்வாறு பயிற்சி எடுக்கும் போது அவ்வபோது TRADING உம் செய்து பாருங்கள்..இப்படி EOD CHART பார்த்து பார்த்து பழகி அதன் பின் INTRADAY CHART பார்க்க வாருங்கள்..INTRA DAY CHARTS
IN.FINANCE.YAHOO.COM , NSE INDIA .COM WEBSITE களில் இலவசமாகக் கிடைக்கும்.இதையும் பார்த்து பழகி கொள்ளலாம்...
இவைகளை  (TECHNICAL CHARTS ) எல்லாம் நன்கு கற்று கொண்டாலே நீங்கள் 50% இந்த மார்க்கெட்டில் ஜெயித்த மாதிரி..

பழக பழக தான் புரியும், ஒரேநாளில் எந்த மாற்றமும் நடந்து விடாது...இப்படி பழகி நடந்து வந்தவன் தான் நானும் ..இன்று எனக்கு CHART தேவையில்லை.. எந்த COMPANY யின் 3 அல்லது நான்கு நாள்  OPEN,HIGH,LOW,CLOSE  எனக்கு கிடைத்தால் போதும் என்  மனதில் அந்த CANDLEகள்  தானாகவே மனதில் உருவாகிவிடும்..அடுத்த நாள் என்ன மாதிரி CANDLE வரலாம் என்று 60-70%சரியாக சொல்லமுடியும்..

எல்லாம் பயிற்சியினால் மட்டுமே முடியும்...எல்லாமே இலவசமாக கிடைகிறது..நமது முயற்சியும்,தொடர் பயிற்சியும் மட்டும் தான் வேண்டும்...எதுவுமே சுலபமாக   ஒரே  நாளில் கற்று கொள்ள முடியாது...
ஒரு மருத்துவரை எடுத்து கொள்ளுங்கள் 12ஆம் வகுப்பு முடித்த பின்,பல லட்சங்கள் (தற்போது 30-லட்சம் வரை )செலவழித்து பின் நான்கு ஆண்டுகள் மருத்துவ மாணவனாக பயின்று அதன் பின் சில வருடங்கள் பயிற்சி எடுத்து அதன் பின் ஒரு மருத்துவமனை ஒன்றை தொடங்கி ஒரு நோயாளியிடம் அவர் வாங்கும் கட்டணம் ஒரு 100 ரூபாய் மட்டுமே..ஒரு நாள் 100 நோயாளிகளுக்கு அவர் மருத்துவம் பார்த்தால்  கூட அவரது ஒருநாள் வருமானம் 10000 ரூபாய் மட்டுமே...
ஆனால் நாம் என்ன செய்கிறோம்..??? நான்  சொல்ல தேவையில்லை.. உங்களுக்கே தெரியும்... ?????

இனியாவது விட்டு தள்ளுங்கள் முடிந்தது போகட்டும் ..உங்களது இழப்பை நஷ்டமாக எண்ணாமல் நாம் இந்த மிக பெரிய தொழிலை கற்று கொள்ள செலவழித்த பணமாக எண்ணிக்கொண்டு இந்த தொழிலுக்கு புதிதாக வந்ததாக எண்ணிக்கொண்டு கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள்..

நம்புங்கள்...உங்களை நம்புங்கள்..நம்மால் முடியும் என்று நம்புங்கள் ..உங்களால் முடியும்..நீங்கள் இழக்கும் பணம் வேறு எங்கோ போகவில்லை ..உங்களை போன்ற இன்னொருவரிடம் தான் போகிறது..அந்த இன்னொருவர் இந்த சந்தையில் சம்பாதிக்கும் போது போது ஏன் நம்மால் முடியாது...
யாரையும் தேட வேண்டாம்.நம்மால் முடியும்,எல்லாம் எங்கே குறைந்த விலையில் கிடைக்கும் இலவசமாக கிடைக்கும் என்று சொல்லி  விட்டேன்..இனி மாற்றம் உங்களிடம் இருந்து தான் ஆரம்பம் ஆக வேண்டும்...
நீங்களே முயற்சி செய்யுங்கள் ... கற்றுகொள்ளுங்கள்..பயிற்சி எடுங்கள்...பணம் ஈட்டுங்கள்....ஒரு நாள்  பயிற்சியில்  எதனையும் மாற்ற முடியாது..{என்னிடமும் பயிற்சி வகுப்பு பற்றி நிறைய நண்பர்கள் விசாரிக்கின்றனர்.அவர்களுக்கும் சேர்த்து தான்  சொல்லுகிறேன்..}.. நினைவில் கொள்ளுங்கள்...எதுவுமே ஒரே நாளில் மாறிவிடாது..

குறிப்பு:
இந்த பதிவு நீங்களும் TECHNICAL கற்று கொள்ளவேண்டும் என்பதற்காகவே...நீங்களும் பணம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே..உங்களுக்கும் இந்த சந்தை மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகவே..ஒரு நண்பர் கேட்டார் 250 ரூபாய் புத்தகத்தை வைத்து TECHNICAL கற்று கொள்ள முடியுமா..என்று ??? 250 ரூபாய்க்கு கிடைப்பதனால் அதற்கு இந்த உலகம் கொடுக்கும் மதிப்பு இவ்வளவு தான்....நான் எந்த விளக்கமும் தர விரும்பவில்லை..

எனத  பதிவுகள்  உங்கள் மனதில் ஏதேனும் ஒரு நம்பிக்கையை விதைத்திருந்தால் ...
முடிந்தால் இந்த பதிவை SHARE செய்யுங்கள்..நம்மை  போல சந்தையில் இருக்கும் யாரோ ஒரு நண்பருக்கு இந்த பதிவிலிருந்து எதாவது ஒரு வரி ஒரே ஒரு வரி நம்பிக்கையளித்து அவர் கற்று கொள்ள முயற்சி செய்து TRADING இல் வெற்றி பெற்றால்அவரது வெற்றிக்கு நாமும் ஏதோ ஒரு மூலையில் ஒரு புள்ளியாக இருந்திருப்போம்..

Sunday, 15 February 2015

OPTION TRADING  RULES (1-5)

OPTION TRADING செய்வதற்கு என சில விதிமுறைகள் உள்ளன.


(இது  எனக்கு நானே வகுத்து கொண்டது) நான் எனக்கு நேரம் கிடைக்கும்  போது அந்த விதிகளை பதிவு செய்கிறேன்.இது எவருக்காவது உதவுமானால் பயன்படுத்தி கொள்ளுங்கள்...)

1. OPTION TRADING செய்ய சரியான நாட்கள்...?


OPTION TRADING செய்ய சரியான நாட்கள் என்பது ஒவ்வொரு மாதமும் 10-30 ஆம் தேதி வரை மட்டுமே...ஒவ்வொரு மாதமும் முதல் 10 நாட்களில் OPTION TRADING (வாங்கி விற்பவர்கள் )செய்பவர்களில் 90 சதவிகிதம் பேர் பணத்தை இழந்து கொண்டு இருகின்றனர்..மீதமுள்ள 10%பேரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் (MARKET எதாவது ஒருபக்கம் (ONE SIDE ) MOVEMENT இருந்தால் மட்டுமே தங்களுக்கே தெரியாமல் ஜெயிகின்றனர்...


2. எந்த மாத CONTRACT இல் TRADING  செய்யலாம்...?

 OPTION TRADING செய்ய எப்போதும் அந்த அந்த மாத  CONTRACT (CURRENT MONTH ) இல் மட்டுமே TRADE  செய்யுங்கள் ..அடுத்த மாத (NEXT MONTH ) CONTRACT  களில் வியாபாரம் செய்யாதீர்கள் .. இந்த மாத  CONTRACT இல் நீங்கள் எதுவுமே தெரியாமல் வியாபாரம் செய்தால் கூட ஜெயிக்க 50% தோற்க 50% தான் வாய்ப்புள்ளது.. ஆனால் அடுத்த மாத  CONTRACT இல் நீங்கள் தெரிந்தே வியாபாரம் செய்தால் ஜெயிக்க 25% தோற்க 75% சதவிதம் மட்டுமே..
(அடுத்த மாத CONTRACT அதிக PREMIUM த்துடன் வியாபாரம் நடக்கும்..நீங்கள் எதிர்பார்த்த ஏற்றமோ இறக்கமோ  வந்தால் கூட உங்கள் OPTION விலை ஏறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக தான் இருக்கும்.(PREMIUM EATING )...


3 குறைந்த BROKERAGE  இல் வணிகம் செய்ய முயற்சி செய்யுங்கள்
               
                 OPTION TRADE செய்பவர்கள் உங்களது BROKERAGE  இல் மிக கவனமாக    இருங்கள். PER LOT  க்கு இவ்வளவு ரூபாய் என்று வாங்கும் BROKERAGE    நிறுவனங்களிடம் கவனமாக இருங்கள்...

மிக எளிமையான உதாரணம் ..என்னிடம் நேற்று YAHOO ID இல் பரிந்துரை பெற்ற
ஒரு நண்பர் 8700 PUT  OPTION ஐ 100 QUANTITY 32 க்கு வாங்கி 38 இல் விற்றுள்ளார்.
அவருக்கு கிடைத்த இலாபம் 600 ஆனால் அவர் BROKERAGE PER  LOT  ஒன்றுக்கு வாங்க 50 விற்க 50 + TAX  மொத்தம் 115 ரூபாய்..
அப்படியெனில் அவரது BROKERAGE  மட்டுமே 4 LOT ற்கு (100 QUANTITY ) 460 போக கையில் கிடைத்த நிகர இலாபம் 140 ரூபாய் மட்டுமே.

அதுவே குறைந்த BROKERAGE இல் TRADE  செய்திருந்தால் வாங்க ஒரு ORDER க்கு 20, விற்க ஒரு ORDER க்கு 20,+ 15 TAX எல்லாம் சேர்த்து 55 போக 600-55=545 ரூபாய்

பாருங்கள் ஒரு மிக சிறிய வணிகம் (3200+3800=7000 ரூபாய் வணிகத்திற்கு ).. இதே வணிகத்தை நாங்கள் செய்திருந்தால் கொடுக்கும் BROKERAGE  ஐ விட 400 ரூபாய் அதிகம் கொடுத்துள்ளார்.
எனவே குறைந்த BROKERAGE  இல் வணிகம் செய்ய முயற்சி செய்யுங்கள்...
இது பற்றி முன்னரே தனியே ஒரு கட்டுரை எழுதி உள்ளேன்..படிக்காதவர்கள் படித்து பார்க்கவும்.

http://zformula.blogspot.in/2014_11_01_archive.html

குறைந்த BROKERAGE  இல் எந்த கம்பெனி இல் அக்கௌன்ட் OPEN  செய்யலாம் என்று உங்களுக்கு கேள்வி வரலாம் ..?
எனக்கு தெரிந்து ஒரு 3 COMPANY கள் ஓரளவு நல்ல முறையில் அந்த சேவையை வழங்கி வருகின்றன...

1 ZERODHA
2 SAS ONLINE
3 FTCONLINE

இதில் FTCONLINE இல் தான் நாங்கள் ACCOUNT  வைத்துள்ளோம்.எங்களது ID க்கு கீழ் வர விரும்புவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.9600161461..நேரடியாக COMPANY இல் அக்கௌன்ட் OPEN  செய்ய விரும்புவர்கள் அந்தந்த கம்பெனியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்...

4 நஷ்டத்தில் உள்ள OPTION மறுநாளைக்கு எடுத்து செல்லாதீர்கள்
                              ஏதேனும் தவறுதலாக OPTION  வாங்கி  அதன் விலை இறங்கி  விட்டால் அதை கையில் வைத்து கொண்டு தூங்க செல்லாதிர்கள்..உங்களை பொறுத்தவரை அந்த OPTION விலை ஏறும் என்று வாங்கி இருப்பிர்கள்.. ஆனால் அதன் விலை இறங்கி  வருகிறது .அப்போதே நீங்கள் செய்தது தவறான  வணிகம் என்று தெரிகின்றது...அப்புறம் அதை ஏன் கையில் வைத்து கொண்டு தூங்க (தூக்கம் எங்கே வரும்??? படுக்க மட்டும் தான் முடியும் ) போகிறீர்கள்..இலாபத்தை பெற நினைக்கும் நாம் இழப்பு வந்தாலும் ஏற்க தயாராக இருக்கத்தான் வேண்டும்..

நாளை ஏறிவிடும்,நாளை ஏறிவிடும் என்று,ஆரம்ப காலகட்டங்களில் OPTION இல் போடப்பட்ட என்னுடைய எவ்வளவு பணம் வெறும் காற்றாக ... வெறும் CONTRACT  NOTE  காகிதங்களாக போய் இருகின்றன..தெரியுமா???இப்போது CONTRACT  நோட் கூட அனுப்ப மாட்டார்கள்..MAIL BOX இல் MAIL  மட்டும் தான்  வரும்..

இன்று OPTION  இறங்கி விட்டால் நாளை ஏறிவிட  வாய்ப்பு  இருக்கிறதே,நான்  அந்த மாதிரி நிறைய முறை செய்திருக்கிறேனே என்று உங்களில் சிலர் COMMENT போடலாம்..வாய்ப்புகள்  இருக்கிறது,இல்லை என்று சொல்லவில்லை..இன்று இன்றைய TRADING இல் நம்முடைய OPTION நம் கண் முன்னே ஒவ்வொரு ரூபாயாக இறங்கி  வந்திருக்கிறது, நாளை MARKET  ஒரு வேளை அதே TREND இல் OPEN  ஆகிவிட்டால் ??   நமது OPTION இன் நிலை..???????????????

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நூற்றுக்கு 70 சதவிகித OPTION கள்  இறங்க மட்டுமே செய்கின்றன..ஒரு 30 சதவிகித OPTION கள் மட்டும் வேண்டுமானால் திரும்ப நீங்கள் வாங்கிய விலைக்கு வர,அல்லது அதற்கும் மேலே செல்ல வாய்ப்பு  உள்ளது..

நீங்கள் வாங்கிய OPTION அந்த 70%இல் உள்ளதா ?அல்லது அந்த 30% உள்ளதா ?என்று தெரியாமல் நம் போட்ட முதல் கிடைக்குமா ??என்று பல இரவுகளை தூங்காமல் கழித்து விட்டு,

எல்லாம் கரைந்து போன பின் ஓரிரு மாதங்கள் அமைதியாக இருந்து விட்டு பின் கொஞ்சம் பணம் சேர்த்து விட்டு அல்லது கடன் ஏதாவது வாங்கி வந்து விட்டதை எடுக்க வேண்டும் என்று வெறி கொண்டு தவறான வணிகத்தில் ஈடுபடுவதை விட...

முதல் நாளே ஓரளவு இழப்பில் உள்ள அந்த OPTION ஐ விற்று விட்டு கிடைக்கும் அந்த பணத்தில் கொஞ்சம் பொறுமையாக அடுத்த சரியான OPTION ஐ தேர்வு செய்து வணிகம் செய்ய முயற்சிக்கலாமே...

5 உங்கள் OPTION  நல்ல விலைக்கு விற்க நீங்கள் அதன் கூடவே இருக்க வேண்டும்...நினைவில் கொள்ளுங்கள்...


உங்களிடம் மிக முக்கியமாக சொல்லவேண்டிய விதி   இது ..மிக மிக முக்கியமான  விதி ..கவனமாக படிக்கவும்...

ஒரு சில நாட்களில் NIFTY ,BANK NIFTY திசையை மிகசரியாக கணிக்க முடியும்.. அந்த நாட்களில் (ஒரு மாதத்திற்கு  குறைந்தது 2-3 நாட்கள்) நமக்கு அந்த விவரங்கள் காலை 10 மணிக்கு முன்னதாகவே அந்த ENTRY  கிடைக்கும் .. அன்று செய்யும் TRADING இல் செய்யப்படும் மூதலீட்டை அன்றே 2 மடங்காக மாற்ற முடியும்..
இன்று அந்த வாய்ப்பு கிடைத்தது.BANK NIFTY பெரும் சரிவை19385- சந்திக்க போகிறது என்பதை (நேற்றே சில அறிகுறிகள் தெரிந்தன ) இன்று காலை அதை உறுதி செய்த பின்

z4mula (19-02-2015 09:34:09): 19300 call now 355 watch thissssssssssssss again said watch thi ..watch only... today evening its possible 200 below(my view only....
z4mula (19-02-2015 09:35:22): any body have today take long  in bank nifty he make sure loss..avoid banknifty ...@long side..
z4mula (19-02-2015 10:03:42): To day evening All put options given double...ur money...????????? i dont know ...??? But My tips is dont trade call option  today ...TAKE TRADE @ YOUR OWN DESICION...TRADE IS YOURS.. .... today my daughter's school annual day...so after 11.30 am i am not avaliable in the market.......take trade at your own desicion.... dont wait for my call...

இந்த நான்கு விவரங்களையும் காலையிலேயே என்னிடம் CHAT இல் இருந்த நண்பர்களுக்கு கொடுத்துள்ளேன்....
நேற்று 26 ரூபாய்க்கு இன்று காலை 19 ரூபாய்க்கு கிடைத்த 18000 PUT  OPTION மதியம் 2 மணி அளவில் 50 ரூபாய் க்கு சென்றது...

என்னிடம் பயிற்சி பெற்ற நண்பர் இந்த TRADING  ஐ  மிக சரியாக செய்தார் .நேற்று 25 ரூபாய்க்கு வாங்கிய அதே  OPTION  இன்று 20 ரூபாய்க்கு கிடைக்கும் போது அவராகவே இன்றைய மார்க்கெட் நிலவரத்தை கவனித்து,20 ரூபாய்க்கும் வாங்கி 37 ரூபாயில் விற்றுள்ளார்....

ஆனால் எனது மகளின் பள்ளி ஆண்டு விழாவிற்கு செல்ல வேண்டியதிருந்ததால் நான்  11.30 மணிக்கு மேல் மார்க்கெட்டில் இல்லை ..நான்  நேற்று எடுத்த (25)18000 PE இன்று 50 போகும் போது  விற்பனை செய்வதற்கு நான் மார்க்கெட்டில் இல்லை..மதியம் 1.15 மணிக்கு செல்போனில் VIEW  பார்க்கும் போது  TREND  மாறுவதற்கான அறிகுறி தெரிந்தது...இருந்தாலும் முழுமையாக LAPTOP  இல் கவனிப்பது போல கவனிக்க முடியவில்லை..அதனால் காலையில்  பார்த்த HEAVY  SELLING  தொடரும் என்று ஆண்டு விழாவில் கவனம் செலுத்த தொடங்கினேன்..

விளைவு மாலையில் திடிர் ஏற்றம் வர..எனது PUT  OPTION  திரும்பவும் நான்  வாங்கிய விலையை விட(21.25) கீழ்....

உங்கள் கையில் OPTION  ஏதும்  இருந்தால் உங்களது TARGET  எவ்வளவோ அதை விற்கும் ORDER  போட்டு விடுங்கள்.. அல்லது பெரிய இலாபத்தை எதிர்பார்த்தால் நீங்கள் மார்க்கெட்டில் இருக்க முயற்சி செய்யுங்கள்...
உங்கள் OPTION  நல்ல விலைக்கு விற்க நீங்கள் அதன் கூடவே இருக்க வேண்டும்...நினைவில் கொள்ளுங்கள்...

இந்த விதிக்கு எனது இன்றைய TRADING  முறையே போதும் என்று நினைக்கிறன்....


Saturday, 14 February 2015


 TECHNICAL புத்தகம் பற்றி நிறைய பேர் கேட்டிருந்தனர்..ஒரு 5 வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு நண்பர் மூலமாக  இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டு இந்த இந்த புத்தகம் எழுதிய ஆசிரியரை நேரில் சந்தித்து இந்த புத்தகத்தை வாங்கினேன் இந்த புத்தகம் இப்போது விற்பனையில் உள்ளதா என்று தெரியவில்லை அந்த புத்தகத்தில் இருந்த ஆசிரியரின் முகவரியை தொலைபேசி எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன் அந்த புத்தகம் உங்கள் ஊரிலேயே கிடைக்குமா ? என்று விசாரித்து கொள்ளுங்கள்...
.....
     எனது சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டத்தில்  சங்கரன்கோவில் இல்  டாக்டர் ஆக இருக்கும் உயர்திரு. டாக்டர் வெ.மாரியப்பன் M.S.D.O ,அவர்கள் தான்  இந்த புத்தகத்தின் ஆசிரியர் ...TECHNICAL ANALYST பற்றி தமிழில் புத்தகங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தில் அவரே ஓய்வு நேரத்தில் கிட்டதட்ட 4 ஆண்டுகளாக அனைத்து ஆங்கில வெப்சைட் களையும் ஆய்வு செய்து உருவாக்கியதாக அவர் கூறினார்.  நான் இந்த புத்தகம் வாங்கும் போது விலை அதன் ரூபாய் 150 மட்டுமே..(இப்போது வேறு விலை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.) நான்  TECHNICAL  கற்று கொண்டது இந்த புத்தகத்தால் மட்டுமே..எனக்கு இந்த புத்தகமே போதுமானதாக இருந்ததால் வேறு புத்தகம் ஏதும் நான்  வாங்கவில்லை..எனவே எனக்கு இந்த புத்தகம் திருக்குறள் போன்றது.,...
                  இந்த புத்தகம் வாங்கியவுடன்இனிமேல் இலாபம் மட்டுமே சம்பாதிக்க முடியுமா என்று கேள்விகள் வரும்..அவர்களுக்கு முயற்சியும் பயிற்சியும் மட்டுமே வெற்றியை தரும்,,TECHNICAL  என்பது 30%-40% மட்டுமே மார்க்கெட்டில் வெற்றியை  தரும்..அந்த TECHNICAL ஐ நீங்கள் முழுமையாக கற்று கொள்ள இந்த புத்தகம் உதவும்,,,

இந்த புத்தகம் கிடைக்கும் இடத்தை கீழே  தெரிவித்துள்ளேன் ..புத்தகத்தை விருப்பமுள்ளவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு வாங்கி  கொள்ளவும்.

புத்தகத்தின் பெயர் :"பண மழை கொட்டுது பங்கு சந்தையிலே".(TECHNICAL ANALYST OF STOCK MARKET )

Dr .வெ .மாரியப்பன்
365,கோமதி கிளினிக்.
இராஜபாளையம் ரோடு,
சங்கரன்கோவில். 627756
04636-222192.

(குறிப்பு : இந்த பதிவு TECHNICAL  CHARTS பற்றி  தமிழிலும் நல்ல புத்தகங்கள் உள்ளது என்பதை தெரிவிக்க மட்டுமே.....}

முதல் பயிற்சி வகுப்பு...

நான் இந்த BLOG  எழுதுவதையும்,எனது FB இல்,எனது YAHOO MESSENGER (Z4MULA @YAHOO .COM )இல்  தினசரி மார்க்கெட் நிலவரம் UPDATE ய்வதையும் பார்த்து நிறைய நண்பர்கள்  OPTION பற்றி  பயிற்சி வகுப்புகள் எடுக்க சொல்லி கேட்டனர்.. நான் எல்லோருக்கும் சொன்ன ஒரே பதில் "MARKET  இல் வகுப்புகள் எடுப்பதற்கு என்று நிறைய TECHNICAL ANALYST  கள்  இருக்கிறார்கள்.நானும் எதற்கு புதிதாக என்று"..சொல்லி தவிர்த்து விட்டேன்.


   ஆனால்  2 நண்பர்கள் மட்டும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருந்தனர்.." அதில் ஒரு நண்பர் மட்டும் 6 பேரிடம் TECHNICAL CLASS க்கு சென்று ரூபாய் 68000 வரை CLASS  களுக்கே செலவிட்டு இருப்பதாகவும்.ஆனாலும்  MARKET இல் ஜெயிக்க முடியவில்லை TECHNICAL எல்லா நேரமும் கைகொடுக்கவில்லை என்ன செய்வது என்று குழப்பமாக கேட்டார் .(இந்த நண்பர் கிட்டதட்ட 4 வருடங்களுக்கு மேலாக MARKET  இல் இருக்கிறார்...


  நான்   அவரிடம் ஒன்றே ஒன்றை தான் கேட்டேன்.

 ஏன் சார் TECHNICAL  கற்று கொள்ள நல்ல தமிழில் 250 ரூபாய்க்கு
 ஒரு புத்தகம் உள்ளது.அந்த புத்தகத்தில் MARKET  ற்கு தேவையான மிக மிக முக்கியமான
 11 OSCILLATORS  ,
 11 INDICATORS,
 10 TREND REVERSAL TOOLS ,
 CANDLE STICKS (75 படங்களுடன்),
 ELLIOTT WAVE,
 FIBONACCI NUMBERS,
 OPEN INTEREST ,
 PUT /CALL RATIO
மேலும் பல விஷயங்கள் 250 பக்கங்களில் கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் நல்ல தமிழில் விளக்க பட்டுள்ளது. நீங்கள் எங்கே சென்று கற்றாலும்  இவ்வளவு விசயங்களையும் ஒரே நாளில் கற்று கொள்ள முடியாது.ஆனால்  இந்த புத்தகத்தை நீங்கள் வீட்டில் வாங்கி  வைத்து ஒரு 2 மாதங்கள் புரிந்து படித்தால் நீங்களே  மிக பெரிய TECHNICAL ANALYST ஆகி இருக்கலாம் ..

250 ரூபாயில் கிடக்கும் விஷயத்தை 68000 ரூபாய் கொடுத்தும் இன்னும் கற்று கொள்ளாமல் பணத்தை MARKET  இல் இழந்து கொண்டு இருக்கின்றிர்களே என்று வருத்த  பட்டேன்.


 TECHNICAL  பற்றி சில கேள்விகள் அவரிடம் கேட்டேன்.. எல்லா  கேள்விகளுக்கும் ஓரளவு சரியாக பதில் சொன்னார்.பின் அவரே சொன்னார் TECHNICAL நன்கு தெரியும் சார் ஆனாலும் MARKET  இல் ஜெயிக்க முடியவில்லை என்ன செய்வது என்று கேட்டார்.


இப்போது எனக்கு என்  நண்பரிடம் உரையாடிய ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது...


     தற்போது (8 மாதங்களாக )நான் பெங்களுரு நண்பர் ஒருவரிடம் இருந்து TECHNICAL CHARTS வாங்குகிறேன்.(முன்பு கல்கத்தா வில் இருந்து வாங்கினேன்.) அவரிடம் பேசிய போது  அவர் சொன்ன வரிகள் தான்  நினைவிற்கு வருகின்றது.. நான்  அவரிடம் கேட்டேன்..


    உங்கள் COMPANY  இல் இருந்து இலாபம் மட்டும் சம்பாதிக்கும் படி ஏதாவது நல்ல (SPECIAL INDICATORS ) TOOLS இருக்கிறதோ என்று கேட்டேன். அவர் சொன்னார் நான்  இந்தியா முழுவதிற்கும் 9 வருடங்களாக  CHART விற்பனை செய்கிறேன்..அப்படி இலாபம் மட்டும் வரும்படி INDICATORS  இருந்தால் நான் TRADING செய்து கொண்டிருப்பேன் ..உங்களிடம் வந்து CHART  விற்பனை செய்து கொண்டிருக்க மாட்டேன்..என்றார்.


CHARTS, INDICATORS ,TECHNICAL  ANALYST  என்பதல்லாம் ஒரு கருவி இதுவரை மார்க்கெட்டில் என்ன நடந்திருக்கிறது என்பதை வரை படமாக வரைந்து காட்டும்...அவ்வளவு தான் நாம்  தான்  அடுத்து நடக்க போவதை யூகித்து கொள்ள வேண்டும் என்றார். ... TECHNICAL  தெரியாமல் மார்க்கெட்டில் ஜெயிக்க முடியாது..அது  போல TECHNICAL  மட்டும் தெரிந்தாலும் மார்க்கெட்டில் ஜெயிக்க முடியாது என்று சொன்னார் ..எவ்வளவு உண்மையான வார்த்தைகள்..???


என்னிடம் பயிற்சி வகுப்பெடுக்க சொன்ன நண்பர்களிடம் நானும் அதை தான்  சொன்னேன்.. MARKET இல் TECHNICAL 30-40% மட்டும் தான்  கை கொடுக்கும்.. அதை தாண்டி  மார்க்கெட் இல் நிறைய விஷயங்கள் நடக்கின்றன.. அதை எல்லாம் தெரிந்தால் தான்  MARKET  இல் ஜெயிக்க முடியும்..என்றேன்.


அதை கற்று தாருங்கள் நாங்களும் கற்று கொண்டு ஜெயிக்க முயற்சிக்கிறோம் என்றனர். கற்று கொடுப்பது என்பது ஒரு கலை அந்த அளவிற்கு எனக்கு திறமை இல்லை, எனினும் அவர்களுக்காக,


 கடந்த ஒரு மாதமாக  என்னஎன்ன மார்க்கெட்டில் நடக்கிறது என்பதை ஒரு கதை போல் தயார் செய்தேன்.9.1.2015 இல் மார்க்கெட் 8118 இல் இருந்து  9000 வரை சென்றது..அந்த ஒவ்வொரு நாளும் OPERATORS எப்படி,எப்போது மார்க்கெட் க்கு வந்தனர் என்னனென்ன செய்தனர் இப்போது இந்த மாதம் 1.2.2015 முதல் 13.02.2015 வரை OPERATOR  MARKET ற்கு எவ்வளவு அழகாக வந்து NIFTY,BANK NIFTY , NIFTY OPTIONS,BANK NIFTY  OPTIONS  இந்த நான்கிலும் பணத்தை முதலீடு  செய்து அவர்கள் பணத்தை 3மடங்கு,4 மடங்கு என மாற்றி செல்வதை பற்றி இன்னும் வரும் வாரங்களில் என்ன செய்ய போகின்றனர் என்று,கட்டுரை தயார் செய்தேன்..


 நானே மிரண்டு விட்டேன் அவ்வளவு ஆச்சரியம் நான்  பொதுவாக ஒரளவு அவர்கள் OPERATORS  வரும்போது மட்டும் நானும் அவர்கள் வாங்கும் OPTION ஐ வாங்கிவிட்டு எனக்கென ஒரு குறிப்பிட்ட (15-25% )இலாபம் வரை வைத்திருந்து விற்றுவிடுவேன்.(போன மாதம் 8500 CALL 32 க்கு வாங்கி 77 இல் விற்றேன்.ஆனால் அதே OPTION ஐ OPERATORS 25-30 இல் வாங்கி விற்றது 460இல் கொண்டுபோய் விற்றுள்ளனர்.)

இது  போன்ற விஷயங்களை தொடர்ச்சியாக கவனித்து எழுதும் போது  தான் எனக்கே பல உண்மைகள் புரிந்தது...
                   அந்த நண்பர்களுக்கு கற்று கொடுக்க என்று நான்  இன்னும் பல விஷயங்களை தயார்  செய்தேன்..

Zformula Option Trading secrets 


1 மிக முக்கியமான சில CANDLES உருவானால் அடுத்து என்ன நடக்கும்

2 NIFTY யையும் STOCK யையும் ஒன்றாக வைத்து வியாபாரம் செய்யும் முறை..
3 NIFTY,BANK NIFTY OPEN  INTEREST  பிசினஸ்..
4 COMPANY RESULTS  DAY OPTION  TRADING.
5 FANCY  NUMBERS  TRICKS .
6 எப்போதேல்லாம் OPTION  TRADING  செய்ய வேண்டும் ? செய்ய கூடாது ??
7 TIMING வியாபாரம் (எந்த நிமிடங்களில் மார்க்கெட் TREND  இப்படி இருந்தால்    அடுத்த நிமிடங்களில் எப்படி இருக்கும்.12.30,12.50,1.50,2.00,2.25,2.50,3.15..இப்படி )
8 உலக மார்க்கெட் பார்த்து நம் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் முறை..
9 FII ,DII MF  என்ன செய்தால்  மார்க்கெட்டில் என்ன நடக்கும்..
10 கண்டிப்பாக 2,3,மடங்கு இலாபம் தரும் OPTION கண்டுபிடிக்கும் வழி ..
11 எந்த OPTION SHORT  SELLING  ற்கு ஏற்றது..

12 என்றைக்கு மார்க்கெட் 100-120 POINT ஏறும் .இறங்கும் என்று கணக்கிடும்
      முறை..
13   STOPLOSS  TRIGGERED  GAME .
14 என்றைக்கு RANGE BOUND ஆக (+25 TO -25)RANGE  வணிகம் நடக்கும்..
15 OPTION PREMIUM EATING  DAY  கவனித்து வியாபாரம் செய்வது எப்படி?

எல்லா  விவரங்களையும் கடந்த ஒரு மாதமாக தயார்  செய்து விட்டு அந்த நண்பர்களை சந்திக்க கட்டண பயற்சி வகுப்பிற்கு நேற்று 13.02.2015 அன்று கோவை சென்றேன்..ஒரு நண்பர் கோவில்பட்டியில் இருந்து வந்திருந்தார். மற்றொரு நண்பர் கோவையை சேர்ந்தவர். நேற்று காலை 9 மணி முதல் மாலை  4 மணி வரை மார்க்கெட் சமயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது..


இந்த பயிற்சிக்கு நேற்றைய மார்க்கெட்டும்  மிகவும் உதவியது...

மார்க்கெட் +60 point இல் இருக்கும்போது  operators அதை +100 point க்கு கொண்டுசெல்ல போக முயற்சிப்பதை ஆதாரத்துடன் விளக்கினேன் (CHART  இன் உதவி இல்லாமலேயே )அது  போல இந்த இடத்தில் ENTRY எந்த இடத்தில் நேரத்தில் போட வேண்டும் என்பதையும் விளக்கி சொல்லி 1.15 இல் இருந்து 1.50 வரை காத்திருந்து 1.59.56 க்கு NIFTY 8825க்கு வாங்கி 8820 SL (5 POINT ) மட்டும் , மற்றும் 8900 கால் 200 QUANTITY  69 க்கு வாங்கி  68 SL (1 RS )  போட பட்டது..
NIFTY  FUT அங்கிருந்து 8870 (+115) வரை சென்றது ..8900 CALL 85 வரை சென்றது இரண்டையும் 2.50 மணிக்குக்கு 8858 இல்,8900 CALL 78 இல் வெளியேறி TRADE  செய்து காண்பிக்க  பட்டது..2.50 மணிக்குக்கு 8700 PUT 42 க்கு வாங்க  சொல்லி 52 க்கு வெளியேற சொல்லி காண்பிக்கப்பட்டது....

நான்  மேலேதயார்  செய்த 15 METHOD களில்  முதல் 11 METHOD  நேற்றே நேற்றைய மார்க்கெட்டில் PRACTICAL ஆக வணிகம் செய்து காண்பிக்க  பட்டது...

அந்த இரண்டு நண்பர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி..புதிதாய் யாரும் இதுவரை பார்க்காத கோணத்தில் மார்க்கெட்டில் வணிகம் செய்ய கற்று கொண்ட திருப்தி..சிறு குழந்தை கூட வணிகம் செய்யும் வகையிலான மிக எளிதான வழிமுறைகளை கற்று கொண்ட திருப்தி உடன் விடை பெற்றனர்..

அதற்கு மிக முக்கியமாக OPERATORS  க்கும் நேற்றைய NIFTY  க்கும் தான்  நன்றி சொல்லவேண்டும்....


இந்த பயிற்சிக்கு வந்த இரண்டு நண்பர்களும் OPTION TRADING இல் இனி ஒரு பைசா கூட இழக்க மாட்டார்கள் ..அந்த அளவிற்கு தெளிவாக OPTION TRADING பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது ..


 கிட்டதட்ட இரண்டரை ஆண்டு காலம்  OPTION TRADING இல் மட்டும் (2011-2013)ஆய்வு செய்து கடும் இழப்புகளை சந்தித்து,முழுமையாக கற்று கொண்டு முழுமையாக புரிந்து கொண்டு,தற்போது கடந்த 1.5 வருடங்களாக இலாபம் சம்பாதிக்கும் நான் எனது பணம் சம்பாதிக்கும் Zformula Option Trading secrets ஐ இன்னும் இரண்டு நண்பர்களுக்கு கற்று கொடுத்துள்ளேன்...


இந்த பயிற்சிக்கு வந்த அந்த நண்பர்கள் இனி NIFTY ,FUTURES ,BANK NIFTY FUTURES ,NIFTY  OPTION ,BANK NIFTY OPTION (முழுக்க முழுக்க இந்த நான்கிலும் வணிகம் செய்ய கற்று கொடுக்க பட்டது...இந்த நான்கிலும் இனி இவர்கள் ஒரு  ஒரு முறை கூட தவறு செய்ய மாட்டார்கள்....


உண்மையில்  மிகுந்த மகிழ்சியாக உணர்ந்த நாள் ..