Friday, 26 June 2015

என்னால்  இந்த பங்குசந்தையில் ஜெயிக்க முடியுமா..???

இந்த கேள்வியை உங்கள் மனசாட்சி உங்களிடம் அநேக தடவை கேட்டிருக்கும் ...அதற்கான விடையாக இந்த பதிவு அமையக்கூடும்.. நீங்களும் படியுங்கள்,,கண்டிப்பாக மறக்காமல் SHARE செய்யுங்கள்...இதை படித்து முடிந்தவுடன் நீங்கள் செய்த தவறை நீங்களே சரி பார்க்க உதவியாகவும் ,அதன் பின் இந்த தொழிலில் நீங்கள் இருப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும் உங்களால் முடியும்..


பங்கு சந்தை ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1.5 இலட்சம் கோடி வணிகம் நடக்கும் ..இடம்.இது ஒரு மிக பெரிய தொழில்...இந்த தொழிலில் 100 க்கு 99 பேர் பணத்தை இழந்து ..மிக ஒரு சிலரே அந்த மொத்த பணத்தை சம்பாதித்து கொண்டும் இருக்கின்றனர் ..


இந்த தொழிலில் ஒவ்வொருவரும் நுழைவது  நண்பர்கள் சொன்னார்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார்,என்று ACCOUNT OPEN செய்து தொழிலில் நுழையும் போது   முதலீடு செய்வது என்னவோ 10000-50000 மட்டுமே...ஆரம்ப காலத்தில் எதிர்பார்ப்பதும் தினசரி 500 கிடைத்தால் போதும்..1000 கிடைத்தால் போதும் என்று தான் உள்ளே வருகின்றனர்...தினசரி வணிகத்தில் அவர்கள் எதிர்பார்த்த 300-500-1000 என ஒரு சில நாட்கள் கிடைக்கும் அதே போல 500-1000 என இழப்பும் வரும்..அதையெல்லாம் தாண்டி அடுத்து அவர்கள் செய்யும் தவறு  இலக்கில்லாமல் கணினி முன் வந்து அமருவது...


அதற்கு முன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி..காலையில் வந்து அமர்ந்தவுடன்

முதல் 2-3 வியாபாரத்தில் ஒரு 2000 ரூபாய் (50000 முதலீடிற்கு )கிடைத்தவுடன் COMPUTER ஐ விட்டு எழுந்து போய்விடுவேன் என்று உங்களில் ஒரே எவராவது இருகிறீர்களா ?

எவருமே இருக்க முடியாது ...இந்த ஒரு விஷயம் இந்த ஒரு விஷயம் தான் உங்களின் முதல் எதிரி ..

இலக்கில்லாமல் உள்ளே வராதீர்கள் வந்தீர்கள் என்றால் உங்கள் பணமும் இலக்கில்லாமல் அழிந்து போய்விடும்...

வெறும் 300 ரூபாய் ஒரு நாளைக்கு கிடைத்தால் போதும் என்று இந்த தொழிலுக்கு வந்து இன்று 30 இலட்சம் ரூபாய் கடனில் இருக்கும் நண்பர்களை சந்தித்து இருக்கிறேன்.. இதே கோவையில் 600 பேர் க்கு முதலாளியாக  ஒரு தொழிற்சாலை அதிபர் இன்று அதே தொழிற்சாலையில் வேலைக்கு செல்கிறார்.. அதே போல வெறும் 3500 ரூபாய் சம்பளத்திற்கு (1985 இல் ) வேலைக்கு சென்று கொண்டிருந்த ஒரு நண்பர் சென்னையில். இன்று 600  கோடிக்கும் அதிகமாக சம்பாதித்து இருப்பதும்..இந்த தொழிலினால் ...


எல்லாவற்றிர்க்கும் முதல்  காரணம் இலக்கு இல்லாதது தான்..எதற்காக இந்த தொழிலுக்கு வந்திருக்கிறோம் ??? நம்மிடம் இருக்கும் முதலீட்டிற்கு நாம்  எதிர்பார்க்கும் தொகை எவ்வளவு.. இந்த தொகையை சம்பாதிக்கும் அளவிற்கு நாம் தொழிலை புரிந்து கொண்டிருக்கிறோமா? என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பாருங்கள்...


ஒரே ஒரு விஷயம் ..உங்கள் வீடு இருக்கும் தெரு முனையில் இருக்கும் ஒரு சின்ன மளிகை கடையில் போய் விசாரித்து பாருங்கள்...அந்த கடை தொடங்கும் முன் அவர் ஏதேனும் மளிகை கடையில் ஒரு 4 வருடம் அனுபவத்துடன் இருந்திருப்பார் ..இந்த கடையை தொடங்க வேண்டி கட்டிடத்திற்கு ஒரு 1 இலட்சம் ரூபாய் ADVANCE கொடுத்திருப்பார்...மளிகை சரக்கு வாங்க வேண்டி ஒரு 2 இலட்சம் ரூபாயாவது முதலீடு செய்திருப்பார் ..இவ்வளவு முதலீடு செய்து அது போக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை  அந்த கடையில் இருந்து வணிகம்  செய்து அன்றைய இலாபத்தை கணகிட்டால் ஒரு 1000 ரூபாய் அல்லது 1500 ரூபாய் அவருக்கு கிடைக்கும்..


இதுவே வேலைக்கு போகும் ஒரு நபரை எடுத்து  கொள்ளுங்கள்..காலை முதல் மாலை வரை 6 நாட்கள் வேலை பார்த்து மாதம் 25 நாட்கள் வேலை பார்த்து அதன் பின் மாத கடைசியில் அவர் கையில் கிடைக்கும் சம்பளம் 30000-40000 வரை மட்டுமே...சராசரி ஒரு நாளைக்கு 1500-2000 ரூபாய் தான் கணக்கீடு வருகிறது..


ஆனால் இந்த தொழிலுக்கு வருபவர்கள் மட்டும்,வரும் போது தினசரி 1000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று இந்த தொழிலுக்கு வருகின்றனர்..ஆனால் வந்த பின் செய்வதோ..எல்லாம் தலைகீழ் ..ஆசை ஆசை இன்னும் பணம் இன்னும் பணம் ..என்று எந்த  இலக்கும் இல்லாமல் தொழிலும் தெரியாமல்..எல்லாவற்றையும் இழந்து,கடன் வாங்கி அதையும் இழந்து கடனாளி ஆகி ,நண்பர்களுக்கு TRADE செய்து தருகிறேன் என்று அதையும் இழந்து..கடன் கடன் கடன் ,,வட்டி வட்டி வட்டி என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம் ..


ஒரு நண்பர் 2 மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார் ..10 இலட்சம் போட்டேன் சார்..3 மாதத்தில் 6 இலட்சம் தான் இருக்கிறது..என்ன செய்ய சார் உங்க CLASS க்கு வரணும் சார்..வந்த பின் தான் TRADE செய்ய போகிறேன்..3 மாதத்தில் 4 இலட்சம் போய்விட்டது சார் என்றார்,,,நானும் கவனமாக TRADE செய்யுங்கள் சார் என்று சொன்னேன் ..அதன் பின் தொடர்பு ஏதும் கொள்ளவில்லை..

திரும்ப சென்ற மாதம் தொலைபேசியில் அழைத்து  சார் 3 இலட்சம் தான் இருக்குது சார் மீத பணம் எல்லாம் போய்  விட்டது சார்.உங்க CLASS க்காவது வந்திருக்கலாம் சார் என்று சொன்னார்..இன்னமும் பேசினார் ..  நேற்று ஒரு நண்பர் சொன்னார் PUT OPTION வாங்க சொல்லி MARKET முடியும் போது 27.50ரூபாய்க்கு 10000 QUANTITY வாங்கினேன்,இப்போ 55 ரூபாய் TRADE ஆகிறது ..நான் என்ன செய்ய விற்று விடவா ?? என்று கேட்டார் .. ஒரு இரவில்2.75 இலட்சம் ரூபாய்க்கு  2.75 இலட்சம் இலாபம்  கண்டிப்பாக BOOK செய்யுங்கள் என்று.. அதற்கு அவர் சொன்ன பதில் இங்கே எல்லாரும் சொல்லுகிறார்கள் இது 90 போகும் என்று..நான் வைத்து பார்க்க போகிறேன் சார் என்று...நான் சொன்னேன் பாதியை விற்று விடுங்கள் உங்கள் முதலீடு தப்பி விடும் மீதியை 90 க்கு போகும் வரை காத்திருங்கள் என்று அவர் சொன்னார் .எல்லாம் 90 போனால் 6.25 இலட்சம் கிடைக்கும்  எனது 10 இலட்சம் இழப்பில் இருந்து மீண்டு வந்து விடுவேன் சார் என்று  கூறினார் ....

அதற்கு மேல் நான் எனது சொல்லவில்லை 40-45 SL மட்டுமாவது  போட்டு விட்டு வணிகம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு முடித்து விட்டேன்....ஒரு மணிநேரம் கழித்து PH  செய்து நான் SL  30 இல் போட்டேன் SIR அது TRIGGER ஆகிவிட்டது கமிசன் எல்லாம் போக 8000 ரூபாய் மட்டும் கிடைத்து என்று,,,


திரும்ப ஒரு மாதம்  2ஆம் தேதி தொடர்பு கொண்டு 60000 ரூபாய் தான் அக்கௌண்டில் இருக்கிறது..நீங்கள் எப்போ CLASS எடுப்பிற்கள் என்று கேட்டார் ..நான் இப்போது வகுப்பு ஏதும் எடுக்க வில்லை அடுத்த மாதம் EXPIRY முடிந்தவுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன் ...

60000 ரூபாய் இருந்தால் தினசரி ஒரு 1000 ரூபாயாவது சம்பாதிக்க முடியுமா என்று கேட்கிறார்..??

இனிமேல் அவருக்கு கற்று கொடுக்க ஏதும் இல்லை இங்கே அவர் என்னிடம் வந்து பணம் கொடுத்து கற்று கொண்டால் கூட அவருக்கு இழப்பு தான் வரும் ..அவரை பொறுத்த வரை இது ஒரு சூதாட்டம்..அவர் இதை ஒரு தொழிலாகவே மதிக்க வில்லை ..


இது போல தான் நம்மில் பலரும் இருக்கின்றோம்..இந்த தொழிலை ஒரு தொழிலாக எண்ணாமல் 10000-,20000,50000 என்று கடன் வாங்கி  கொண்டு வந்து என்றைக்காவது நாமும் கோடிஸ்வரன் ஆகி விடுவோமா ??? யாராவது (TIPS PROVIDERS ) நம்மை கோடீஸ்வரன் ஆக்கி விடுவார்களா??? என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் ..


இந்த தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால் ..உங்கள் மனதில் இதை ஒரு தொழிலாக மதியுங்கள்.. 10000-20000 போட்டு விட்டு உங்கள் கோடிஸ்வர கனவினை மார்க்கெட்டில் திணிக்காதிர்கள் ...


அதற்காக 20000 ரூபாய் வைத்து இந்த தொழில் செய்தால் முன்னேற முடியாது என்று சொல்லவில்லை..


ஒரு 25000 ரூபாய் முதலீட்டை சரியான திட்டமிடல் முயற்சி இருந்தால் 11 மாதத்தில் ஒரு கோடியாக மாற்றும் வாய்ப்புகள் உள்ள தொழில் தான் இது..ஆனால் அதற்கு முறையான பயிற்சியும் பொறுமையும் அவசியம்.. பயிற்சி என்பது யாரோ ஒருவரிடமமோ அல்லது எங்களிடமோ வந்து கற்று கொள்ளவதில்லை..உங்களது தீராத ஆர்வத்தினால் மட்டுமே வருவது...அமைதியாக இருந்து ஒரு 6 மாதம் எந்த TRADE உம் செய்யாமல் மார்க்கெட்டில் ஒரு நாள் விடாமல் (9.15--3.30வரை ) வேடிக்கை மற்றும் பாருங்கள் மார்க்கெட் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்..அதன் பின் நீங்கள் தான் இராஜா இந்த தொழிலுக்கு..


ஒரு சின்ன கதை இங்கே..


இரண்டு மீனவர்கள் இருந்தார்களாம்..அவர்கள் இரண்டு படகுகளில் மீன் பிடிக்க செல்லும்  போது ஒரு தீவில் சற்று இருந்து விட்டு திரும்ப மீன் பிடிப்பார்களாம்..ஒரு நாளும் அந்த தீவின் உள்ளே சென்றது கிடையாதாம்..ஒரு நாள் அப்படி அந்த தீவில் ஓய்வெடுக்கும் போது அங்கே  ஒரு பாறையில் ஒரு MAP பாதை ஓன்று போட்டு இங்கே புதையல் உள்ளது..என்று எழுதி இருந்ததாம்..


அவர்கள் அங்கே அந்த MAP இன் படி போய் உள்ளே போய தேடும் போது வெகு நேர சிரமத்திற்கு பின் மிக பெரிய புதையலை கண்டு பிடித்தார்களாம் ..மிகப்பெரிய என்றால் பெரும் மலையளவு தங்கம்,வைரம் என கொட்டி கிடந்ததாம்..


ஒரு  மீனவன் படகு நிறைய நிரம்பி வழியும் அளவு அள்ளி நிறைத்து கொண்டான்..

மற்றொரு மீனவனோ படகில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தங்கம் ஏற்றி கொடு கிளம்பினான் ..
முதலாவது மீனவன் கேட்டானாம் ஏன்டா உனக்கு இவ்வளவு போதுமா ?? என்று ??
இரண்டாவது மீனவன் சொன்னான் ..எனக்கு இங்கே இருக்கிற எல்லாமே தான் வேணும்.. ஆனால் இதை நாம் மட்டும் தான் பார்த்திருக்கிறோம்..அதனால் தினசரி வந்து கொஞ்சம் கொஞ்சமாவாக எடுத்து கொள்வோம் என்று..

உனக்கு வேண்டுமானால் இதை மட்டும்  எடுத்து கொள். எனக்கு படகு நிறைய வேண்டும் என்று சொல்லி விட்டு முதலாவது மீனவன் அப்படியே வேகமாக கிளம்பினான் ..


திரும்ப இதே படகில் வந்து இன்னொரு  முறை படகு நிறைய வந்து அள்ளி கொண்டு போக வேண்டும் என்று ஆசை பட்ட முதலாவது மீனவன் வேகமாக படகை ஓட்டினான்..


இரண்டாவது மீனவனோ நிதானமாக ஓட்டினான் ..இந்த புதையல் முழுவதும் நம்முடையது தான் என்று நம்பினான்..


சற்று நேரத்தில் வந்த கடல் கொந்தளிப்பில் ,இருவரின் படகும் தடுமாறியது..

இரண்டாவது மீனவனின் படகு குறைவாக  தங்கம் இருந்ததால்,கொஞ்சம் தடுமாறியது..

முதல் மீனவனின் படகு அதிக எடை,அந்த மீனவனின் பதட்டம் என வேகமாக (முழ்கும் அளவிற்கு )ஆடியது...இரண்டாவது மீனவன் முதல் மீனவனை பார்த்து சொன்னான் ,,கொஞ்சம் தங்கத்தை குறைத்து கொள்..படகை முழக்காமல் காப்பாற்றி விடலாம் என்று..


முதல் மீனவன்  சொன்னான் இது  எனக்கானது..நான் இதில் ஒரு கிராம் கூட இழக்க மாட்டேன் என்று,,,

சற்று நேரத்தில் முதல் மீனவன் அதிக எடை காரணமாக படகு கடலில் முழ்கி இறந்து போனான்,,

ஆனால் இரண்டாவது மீனவனோ..அந்த கொஞ்சம் தங்கம் கொண்டு வந்ததால் முழ்காமல் தப்பி வந்து அந்த தங்கத்தை விற்று இன்னும் பெரிய படகு வாங்கி அதை கொண்டு இன்னும் நிறைய தங்கம் கொண்டு வந்து அதை விற்று பெரிய கப்பல் வாங்கி அந்த தீவின் முழு தங்கத்தையும் கொண்டு வந்து கோடீஸ்வரன் ஆகிவிட்டான் ..


இங்கே இந்த தீவு என்பது பங்கு சந்தை..இங்கே மலை போல் பணம் கொட்டி கிடக்கிறது..தெரிந்தோ தெரியாமலோ இங்கே நீங்கள் வந்து விட்டர்கள்..

அந்த படகு என்பது உங்களது முதலீடு ..நீங்கள் எடுத்து கொண்டு போகும் தங்கம் என்பது உங்களது இலாபம்.உங்கள் முதலீடிற்கு ஏற்ற அளவு இலாபம் கொண்டு போன இரண்டாவது படகை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து கொண்டு அவர்கள் முதலீட்டை பெருக்கி இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர்..இவர்கள் ஒரு சிலரே..

முதலீட்டை விட அதிக இலாபம் கொண்டு வர நினைத்த முதலாம் மீனவனை போல தான் இங்கே நிறைய பேர் 10000 முதலீட்டில் தினமும் 2000-3000 வேண்டும் என்று நினைக்கிறோம் ..அது சில சமயம் கிடைக்கவும் செய்கிறது ..ஆனால் மார்க்கெட் கொந்தளிக்கும் தருணங்களில் கொஞ்சம் இழப்பு வந்தால் கூட  நமது இலாபத்தை கொஞ்சம் கூட இழந்து போக கூடாது என்று நினைத்து  மொத்த படகையும் (முதலீட்டையும் ) இழந்து போனவர்கள் தான் ஏராளம்...


இந்த மீனவர்களில் நீங்கள் யாராக இருக்க போகிறீர்கள் ???

தயவு செய்து கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள்..
யாரிடமும் (எங்களிடம் கூட)பணம் கொடுத்து கற்று கொள்ள வேண்டாம்..
பொறுமையாக ஒரு 6 மாதங்கள் மார்க்கெட்டை பார்த்து கொண்டிருந்தால் போதும் உங்களுக்கே மார்க்கெட் புரிய ஆரம்பிக்கும் ..உங்களுக்கே இங்கே நடக்கும் ஏமாற்று வேலைகள் புரிய ஆரம்பிக்கும்...
அதன் பின் இங்கே ஜெயிக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள் அதன் பின் நம்பிக்கை இருந்தால் ஓரளவு பணத்தோடு இங்கே வாருங்கள்..உங்களால் ஜெயிக்க முடியும்..

உங்கள் மனசாட்சிக்கு ஒரு கேள்வி ??? நீங்கள் TRADING இல் திரும்ப திரும்ப பணத்தை கொண்டு வந்து போடும் போது உங்கள் மனதில் ஒரே ஒரு முறையாவது "இந்த பணமும் போய்விட்டால் என்ன செய்வது" என்ற எண்ணாமல் இல்லாமல் என்றைக்காவது இங்கே பணம் முதலீடு செய்திருக்கிரிங்களா???

இப்படி நினைதிருண்டீர்கள் என்றால் நீங்கள் தொழிலுக்கு வரவில்லை சூதாட வருகிறிர்கள்.என்று நீங்களே முடிவு செய்து விடலாம்...

இந்த பங்குசந்தை தொழிலில் நடப்பது பெரும்பாலும் திட்டமிடப்பட்ட வணிகம் ஒன்றே..எல்லா TRADE உம் இங்கே திட்டமிட்டே நடக்கின்றன...மிக பெரிய கூட்டம் ஓன்று இங்கே பெரும் பணத்தை கொண்டு போய் கொண்டு இருக்கின்றன..


சந்தேகம் இருந்தால் யோசித்து பாருங்கள் நேற்று முன் தினம் NIFTY 8400,BANK NIFTY 18500 இல் முடிந்தது..எவ்வளவு துல்லியமாக அந்த விலையில் வந்து NIFTY யை யை BANK NIFTY யை கொண்டு வந்து நிறுத்த முடியுமா..எல்லாமே இங்கே திட்டம் தான் ..அன்றைய கணக்கீடு என்ன என்றால் ..8400 CALL 8400 PUT ,18500 CALL 18500 PUT என அன்று முடியும் போது 000ZERO வாக முடிக்க வேண்டும் என்பது அன்று போடப்பட்ட திட்டம்...அது ஓரளவு முன்னரே கணிக்க முடிந்ததால் தான்  8395 இல் EXIT AND STAY AWAY என்று அன்று FB இல் UPDATE செய்தோம்..அது 8433 வரை சென்றது திரும்ப 8400 இல் வந்து முடிந்தது..அது அன்று 8450 வரை சென்று இருந்தால் கூட முடியும் போது 8400 இல் தான் முடிந்திருக்கும்...அது தான் திட்டமிடப்பட்டு அது தான் நடந்தது..இங்கே ஒரு வேளை வியாபாரம் நடந்திருந்தால் ஒரு 10 புள்ளிகள் அதிகமாகவோ குறைவாகவோ மார்க்கெட் முடிந்திருக்கலாமே ???? கடைசி 20 நிமிடமும் இப்படி தான் TRADE ஆகியது...இப்படி தான் இங்கே எல்லாமுமே...


இன்னும் நிறைய நிறைய இருக்கிறது உதாரணங்கள் ..அதை எழுத்தில் விளக்க முடியாது..எழுதினால் இன்னும் 200 பக்கம் எழுத வேண்டியது இருக்கும்..


இங்கே தொழில் என்ற மரியாதையோடு ..கவனமாக இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும் ..அதுவும் உங்கள் முதலீடிற்கு ஏற்ற வருமானம் மட்டுமே...மற்ற படி இங்கே இதை விட நல்ல தொழில்களும் உள்ளன..பங்கு சந்தையில் உள்ள 4000 COMPANY களும் 4000 தொழிலை தான் செய்கின்றன ..இந்த COMPANY கள் இங்கு வந்து அவர்கள் SHARE ஐ பட்டியலிட்டு இருகின்றன..அவ்வளவு தான் அவர்கள் வேறு தொழிலை தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள் .. எல்லோரும் இங்கே TRADE  செய்யவில்லை...                                                                    


 இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ...உங்களால் இந்த பங்குசந்தையில் ஜெயிக்க முடியுமா..???..கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் இங்கே இருங்கள்.. இல்லை என்றால் ...நாளையே உங்கள் ACCOUNT இல் இருக்கும் மீதமுள்ள பணத்தையாவது PAYOUT போட்டு அதை எடுத்து முழுமையாக உங்கள் குடும்பத்தினருடன் அனுபவித்து செலவழியுங்கள் ....அதன் பின் வேறு தொழிலுக்கு மாறி விடுங்கள்...எல்லா தொழிலிலும்   பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன...


நீங்கள்  தான் கற்று கொள்ளவும் பொறுமை மனது இல்லாமல் 20000,30000 என்று எங்குகெங்கோ உழைத்து இங்கு வந்து தொலைத்து  கொண்டு இருக்கிறார்கள்..


உங்களுக்கும் எனக்கும்உள்ள ஒரே ஒரு உறவு  FACEBOOK ம் தமிழும் மட்டுமே... என்  தமிழ் சகோதரர் ஒருவர் கூட தம் பணத்தை இழந்து விட கூடாது என்பதற்காக தான் இந்த கட்டுரை ..தவிர இந்த தொழில் மீதான உங்கள் நம்பிக்கையை குறைப்பதற்காக இல்லை...


தோழமையுடன்

ZFORMULA RAVI

Saturday, 6 June 2015

பங்கு சந்தையில் தினசரி வணிகத்தில் பயமின்றி, இழப்பின்றி இலாபம் மட்டுமே சம்பாதிக்க மிக எளிய வழி  ஓன்று உள்ளது ...

OPTION HEDGING WRITING ..
இந்த வழிமுறை பற்றி முன்னரே நான் எழுதியுள்ளேன்.

http://zformula.blogspot.in/2015/04/option-trading-7-option-trading-option_24.html

இப்போது இது பற்றி திரும்பவும் நிறைய நண்பர்கள் கேட்டு வருகின்றனர்.. அவர்களுக்காக முழு விவரங்களுடன் இந்த பதிவு ..

இந்த TRADING முறையை ஒரு இலட்சம் ரூபாய் முதலீட்டில் செய்வதாக வைத்து கொள்வோம்..
ஏனெனில் ஒருவர் இந்த தினசரி வணிகத்திற்கு வருகிறார்...அவரது இலாபம் குறைந்தது ஒரு 3000 ரூபாயாவது எதிர்பார்த்து தான் இந்த தொழிலுக்கு வருவார்..
உங்கள் முதலீட்டிற்கு பெரிய சேதாரம் இன்றி தினசரி  3000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால் இந்த முதலீடு மிக அவசியம்...
இந்த தொகையை வைத்து எப்படி OPTION WRITING செய்வது என்று மேலே குறிபிட்டுள்ள பதிவில் விளக்கி உள்ளேன் ..
இந்த TRADING முறை முழுக்க முழுக்க NIFTY OPTION ஐ WRITING செய்வது மட்டுமே...
எப்படி STRIKE PRICE  செய்யவேண்டும் என்று பார்க்கலாம்..

உதாரணத்திற்கு வரும் திங்கள் கிழமை NIFTY யை கணக்கிட்டு கொள்ளலாம் ...

முதலில் NIFTY ஓன்று மேலே போகும் அல்லது கீழே போகும் இந்த இரண்டு மட்டும் தான் நடக்கும்...இங்கே உங்களுக்கு 50% நீங்கள் நினைப்பது தான் நடக்கும் ..

நீங்கள் இன்னும் கொஞ்சம் MARKET ஐ நன்கு கவனித்து வந்தால் ..ஒரு 60% உங்களுக்கு NIFTY மேலே போகுமா இல்லை கீழே வருமா என்பதை உங்களால் கணிக்க முடியும்..

MARKET ஆரம்பித்த பின் ஒரு 30 நிமிடம் கழித்து தான் STRIKE PRICE தேர்வு செய்ய வேண்டும்..
திங்களன்று நிபிட்டி 8100 RANGE இல் TRADE ஆவதாக வைத்து கொள்வோம்...

நீங்கள் மார்க்கெட் MARKET (8100 இல் இருந்து )மேலேபோகும் என்று கணித்தால் (உங்களது 60%நம்பிக்கை இது  )PUT OPTION விலை இறங்கும்...எனவே நாம் PUT OPTION ஐ  விற்க போகிறோம் ...இந்த நேரத்தில் OUT THE MONEY.. PUT OPTION (7900,8000,) ஒன்றை WRITING செய்ய தேர்வு செய்ய வேண்டும் (EXAMPLE 8000 PUT  90 RS )...இந்த OPTION ஐ 1000 QUANTITY விற்பனை செய்கிறோம்..இப்போது நாம் நினைப்பது நடக்காமல் மார்க்கெட் இறங்கினால் இந்த PUT OPTION விலை ஏறி நமக்கு இழப்பு வரும்.. நாம் செய்யவிருப்பதோ பயம் இல்லாமல் செய்ய இருக்கும் SAFE TRADE ..

எனவே...நாம் இந்த TRADE உடன் செய்வது
அடுத்து CALL  OPTION WRITING (உங்களது 60% நம்பிக்கை பொய்யாக போனால் கூட நாம் நமது முதலீட்டை காப்பாற்றி கொள்ள இங்கு செய்ய போகும் OPTION WRITING தான் CALL OPTION WRITING ).. (இது மீதமுள்ள 40%நமது நம்பிக்கைக்கு எதிராக நடந்தால் என்ன ஆகும் என்பதற்காக தான் தேர்வு செய்வது...)இந்த CALL OPTION STRIKE PRICE ஐ தேர்வு செய்யும் போது..OUT THE MONEY..(8200,8250,8300)OPTION ஒன்றை தேர்வு செய்யவேண்டும்...இதில் நாம் தேர்வு செய்ய வேண்டியது..8250 PUT OPTION 75 ரூபாய் விலையில் 1000 QUANTITY விற்க வேண்டும்....

இந்த CALL OPTION 75 ரூபாய் விலையில் உள்ள STRIKE PRICE ஐ ஏன் தேர்வு செய்கிறோம் என்றால் ..

நமது   60%கணிப்பின்படி மார்க்கெட் மேலே போகவேண்டும்..இப்படிஒரு 50 புள்ளிகள் மேலே சென்றால்,மேலே போகும் போது நாம் விற்றுள்ள PUT OPTION 90 இல் இருந்து  70 ரூபாய்க்கு வரும்..இந்த 20 புள்ளிகள் நமக்கு இலாபம்..
இதே சுழலில் நாம் பயமில்லாமல் வணிகம் செய்ய வேண்டி HEDGING WRITING செய்யும் CALL OPTION விலை நமது கணிப்பின் படி மார்க்கெட் ஏறும் போது ...
மிக வேகமாக ஏறினால் அதுவும் 20 ரூபாய் ஏறினால் நமக்கு இலாபம் வருவது கடினம்..இங்கு நாம் இந்த OPTION ஐ 75 ரூபாய்க்கு விற்பதால் இந்த CALL OPTION MARKET ஏறும்போது 75 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கு வரும்..இங்கு நமக்கு 15 ரூபாய் இழப்பு ..)
 PUT OPTION விற்றதில் 20000 இலாபம் ..(20 ரூபாய் )

CALL OPTION விற்றதில் 15000 நட்டம் ...(15 ரூபாய்)
நிகர இலாபம் 5000(5 ரூபாய் )
BROKERAGE,TAX 1000(1 ரூபாய்)
 அன்றைய இலாபம் இந்த TRADE இல் 4000.
நாம் நினைத்தது நடந்தால் 4000 ரூபாய் ..இலாபம் ..

இந்த TRADE நாம் நினைப்பதற்கு எதிராக மார்க்கெட் இறங்கினால் கூட உங்களது CALL OPTION விலை 75 இல் இருந்து 60 ரூபாய்க்கு வேகமாக வரும்..ஆனால் 90 ரூபாயில் இருந்த PUT OPTION விலை 90 இல் இருந்து 105 ரூபாய்க்குள் (15-) இருக்கும்..

 PUT OPTION விற்றதில் 15000 இலாபம் ..(15 ரூபாய் )

CALL OPTION விற்றதில் 15000 நட்டம் ...(15 ரூபாய்)
நிகர இலாபம் 0(0 ரூபாய் )
BROKERAGE,TAX 1000(1 ரூபாய்)
நமக்கு இழப்பு 1000 ரூபாய் மட்டும்...

அது போல் மிக வேகமாக மார்க்கெட் இறங்கினால் கூட இந்த இழப்பு அதிகபட்சம் 8-10 புள்ளிகள் இருக்கும்..ஆனால் அப்படி இறங்கிய மார்க்கெட் ஒரு 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் அதே இடத்தில் இருந்தால் போதும் அந்த இழப்பு புள்ளிகள் 8 புள்ளிகளில் இருந்து வேகமாக குறைந்து 3-4 புள்ளிகள் மட்டுமே இருக்கும்...

அதுவும் போக நாம் TRADE செய்துள்ள OUT THE MONEY..OPTION கள் இன்னும் கொஞ்சம் தள்ளி இருந்தால் நமக்கு இழப்பு குறையும் இலாபம் உறுதியாகும்...
மார்க்கெட் மேலே கீழே போய் NEUTRAL ஆக வந்து நிற்கும் SIDE WAY மார்க்கெட் இல் நமது இலாபம் மிக அதிகமாக இருக்கும்...
உதாரணமாக கடந்த வெள்ளிகிழமை மார்க்கெட் 8130 இல் இருந்து..மேலே கீழே சென்று வந்தது.. முடிவில் 8115 இல் முடிந்தது..

இங்கே நாம் காலையில் 8300 CALL 63 இல் OPEN ஆகி உள்ளது இதை 1000 விற்றதாக கணக்கிட்டு கொள்வோம்
63*1000=63000
இங்கே நாம் காலையில் 8100 PUT 92 இல் OPEN ஆகி உள்ளது இதை 1000 விற்றதாக கணக்கிட்டு கொள்வோம்
92*1000

மார்க்கெட் ஏறும் போது
இங்கே நாம் விற்ற 8300 கால் அதிகம் சென்றது 90.20 ரூபாய் நமது இழப்பு 63-90=27ரூபாய்..
அதே நேரம் நாம் விற்ற 8000 PUT கீழே வந்தது 63 நமது இலாபம் 92-63=29 ரூபாய்.
சந்தை உச்சதில் இருக்கும் போதே நமக்கு இலாபம் 2 ரூபாய்..

திரும்ப சந்தை பழைய நிலைக்கு வரும் போது(-15)
இங்கே நாம் விற்ற 8300 கால் கடைசி TRADE விலை 57 ரூபாய் நமது இலாபம் 63-57=6ரூபாய்..
அதே நேரம் நாம் விற்ற 8000 PUT கடைசி TRADE விலை 90 ரூபாய் நமது இலாபம் 92-90=2 ரூபாய்.
 மொத்த இலாபம் 6+2=8000 ரூபாய் -TAX BROKERAGE 1000= NET PROFIT 8000 ரூபாய் ..
இது 1 இலட்ச ரூபாய் முதலீடிற்கு மார்க்கெட் ஏற்ற இறக்கம் என்ற பயமில்லாமல் உங்களுக்கு,10% RISK இல் உங்களுக்கு கிடைக்கும் இலாபம்.
நீங்கள் இந்த 8 புள்ளிகளுக்கு ஆசைபடாமல் தினசரி 5 புள்ளிகளை எதிர்பார்த்தால் ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரத்தில் உங்கள் TRADING முடிந்து விடும்...
பயமில்லாமல் தினசரி வணிகம் நிச்சய வருமானம்..இது போல் மாதம் 22 TRADING நாட்களில் ஒரு சில நாட்கள் போக (மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் ஒரு சில இழப்புகள் ) 15-18 நாட்கள் இலாபம் சம்பாதிக்க முடியும்...

இங்கே இது போல் எமது நண்பர் குழு வணிகம் செய்வது 1 இலட்சம் SHARE கள் வரை இரண்டு பக்கமும் WRITING செய்கின்றனர் ..அவர்களது தினசரி இலாபம் 4 இலட்சதிற்கும் மேல் ,,,

இங்கே 1 இலட்சம் ரூபாய்க்கு 1000-5000 வரை OPTION WRITING செய்ய சில COMPANY கள் EXPOSURE கொடுக்கின்றன...

அவற்றில் ஏதும் ஒரு COMPANY இல் நீங்கள் TRADING ACCOUNT OPEN செய்து இந்த வகை TRADING முயற்சி செய்து பார்க்கவும்,..
2 இலட்சம் 5 இலட்சம் என பணம் முதலீடு செய்து நீங்கள் அதிக பயத்துடன் வணிகம் செய்து சந்திப்பது என்னவோ இழப்பை மட்டும் தான்..
இந்த முறை பயமில்லாமல் வணிகம் செய்யும் முறை...

நீங்கள் தவறாக TRADE செய்தால் கூட ...இந்த முறையின் அதிகபட்ச இழப்பு 5-8 புள்ளிகள் மட்டுமே..இந்த புள்ளிகளில் நீங்கள் இழப்பை பதிவு செய்திட வேண்டும்..இந்த முறை தோற்பது நம்மை அறியாமல் நிபிட்டி 200 புள்ளிகள் MOVEMENT கொடுக்கும் போது மட்டும் தான்

உத்திரவாதமான பயமில்லாத வணிகம்...முன்பே ஓரளவு தெரிந்திருந்தாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு 3 மாத PAPER WORK ற்கு பிறகு இந்த முறையின் நம்பிக்கை காரணமாக ..நாங்கள் OPTION TRADING இல் இந்த முறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறோம்..

எனது 8 வருட அனுபவத்தில் எனக்கு தெரிந்த வரை இந்த முறை பங்குசந்தையில்  மிக கண்டிப்பாக இலாபம் தரும் முறை..முக்கியமாக பயமில்லாமல் இலாபம் சம்பாதிக்கும் முறை.

நீங்களும் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக இலாபம் தரும் முறை இது ..
உங்கள் நண்பரையும் இலாபம் சம்பாதிக்க வைக்க அவர்களுக்கும் இந்த பதிவை பகிரவும்...உங்களுக்கு இந்த முறை புரிந்தால் இதை மற்றவருக்கும் கற்று தரவும்..
இந்த முறை TRADING பற்றி உங்களுக்கு எந்த சந்தேகம் இருப்பினும்,தினசரி இரவு 7.30-8.30 மணிக்குள் என்னை தொடர்பு கொள்ளவும்..என்னால் முடிந்த விளக்கங்கள் தருகிறேன்..நீங்களும் கற்று கொண்டு மற்றவர்களுக்கும் கற்று கொடுங்கள்..

பயிற்சிக்கு பின் TRADE செய்யவும்...

Monday, 1 June 2015

உங்கள் TIPS PROVIDER எப்படி பட்டவர்....? ? ?

பங்கு சந்தை பற்றி நிறைய பதிவுகள் எழுதி வருகிறேன்....நானே TIPS PROVIDER ஆக இருந்து கொண்டு மற்ற  TIPS PROVIDER கள்  பற்றிய  இந்த பதிவை எழுதுவதா வேண்டாமா ? என்று நிறைய யோசித்து விட்டு தான் இந்த பதிவை எழுதுகிறேன்...இந்த பதிவு யாரையும் குறிப்பிட்டு எழுதுவதல்ல..TIPS PROVIDER என்ற பெயரில் ஏமாற்றி வரும் ஒரு சில நபர்களை பற்றியது மட்டுமே...

பங்கு சந்தையில் வணிகம் செய்யும் நீங்கள் உங்கள் TIPS PROVIDER பற்றி  முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு ...

பங்குசந்தை இந்தியா முழுவதும் பல இலட்சகணக்கான மக்கள்(95%) பணத்தை இழந்து கொண்டும்,ஒரு குறிப்பிட்ட ஆயிரக்கணக்கான (5%) நபர்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கும் இடம்..

பங்குசந்தையில் கோடிகளை சம்பாதிக்கலாம் என்றுஅவர் சொன்னார்,இவர் சொன்னார் , என்று எதுவும் தெரியாமல் பணத்தை விட்டு விட்டு,இழந்த பணத்தை திரும்ப மீட்டு விட எண்ணி திரும்பவும் கொஞ்சம் முதலீட்டை திரட்டி வந்து TRADE செய்ய வரும் போது,யாராவது நம்மை காப்பாற்றி  விட மாட்டர்களா ?நாம் இழந்த பணத்தை இந்த சந்தையில் மீட்டு தந்து விடுவார்களா ?என்று நாம் தேடும் போது (FB ,GOOGLE )உங்களுக்கு TIPS கொடுப்பதற்கு என்றே நிறைய நண்பர்கள் இங்கே இருக்கின்றனர்...அவர்களில் ஒரு சில நல்லவர்கள் இருந்தாலும் இங்கே இருப்பதில் 99 சதவீதம் போலி  TIPS PROVIDERகள் தான் ...

எப்படியெல்லாம்  TIPS PROVIDERகள்  இருக்கிறார்கள் என்பதில் என்னுடைய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கிறேன்..இந்த பதிவு யாருடைய பணத்தையாவது ஒரு ரூபாய்,ஒரே ஒரு ரூபாய் காப்பாற்றினால் கூட அது இந்த பதிவிற்கு கிடைத்த வெற்றி...

2009-2010 இல் ஒரு TIPS PROVIDER ரிடம் நானும் TIPS வாங்கி ஏமாந்து இருக்கிறேன்..
CHENNAI ஐ சேர்ந்த அந்த நண்பர் 6000 வாங்கி கொண்டு டிப்ஸ் கொடுத்தார் அவர் வழங்கும் டிப்ஸ் எனக்கு MESSAGE வந்து சேரும் போது,அது டார்கெட் REACH ஆகி இருக்கும் ..SIR என்ன சார் இப்படி என்று அவருக்கு போன் செய்து கேட்டால்,உங்கள் நெட்வொர்க் PROBLEM சார் நீங்கள் திருநெல்வேலியில் இருகிர்கள் அதனால் சில நிமிடம் LATE ஆகிறது என்று சொல்லுவார் ..நானும் இனி வரும் மெசேஜ் ஆவது சரியான நேரத்தில் வரும் என்று காத்திருந்தேன் ..ஒருநாளும் சரியான நேரத்தில் வந்து சேரவில்லை..ஆனால் அவர் கொடுத்தது TARGET மட்டும் போய் சேர்ந்திருக்கும் ...சரி அவர் சரியாக தான் கொடுக்கிறார் நமக்கு தான் நேரம் சரியில்லை என்று எண்ணி கொண்டிருந்தேன்..

ஒருநாள் காலை சந்தை ஆரம்பித்தவுடன் SUNTV FUT வாங்க சொன்னார் ..அவர் சொன்ன TARGET எனக்கு மெசேஜ் வரும் போது போய்  சேர்ந்திருந்தது ..அவருக்கு போன் செய்தேன் ,,என்ன சார் இன்னைக்கும் உங்களுக்கு மெசேஜ் லேட்டா ??? முதல்ல NETWORK மாத்துங்க சார்..இங்கே நம்ம CLIENTS 11 பெரும் PROFIT BOOK பண்ணிடாங்க சார்..எல்லோரும் சூப்பர் PROFIT ன்னு போன் பண்ணுறாங்க...நீங்கள் மட்டும் தான் TRADE செய்யல ன்னு  சொன்னார்..நானும் நம்ம விதியை நினைத்து கொண்டு ஓகே சார்ன்னு சொல்லிட்டு...SUNTV FUT SHARE யே பார்த்து கொண்டு இருந்தேன்..எப்படியோ எதையோ செய்ய எண்ணி  SUNTVFUT TOTAL TRADE QUANTITY எவ்வளவென்று பார்தேன்..மொத்தம் 2500 QUANTITY ..FUTURE ஒரு LOT 500 QUANTITY .11 பேர் வாங்கி விற்றிருந்தால் (500*11)5500+5500..11000 Q TRADE ஆகி இருக்க வேண்டும் ஆனால் அங்கே  TRADE ஆனதோ மொத்த (வாங்கியது விற்றது எல்லாம் சேர்த்து 5 லாட் கள் மட்டுமே...

புரிந்து கொண்டேன் அந்த  TIPS PROVIDER இன் உண்மை முகத்தை பற்றி,
அந்த நபருக்கு இப்போது அபார வளர்ச்சி...டிவி யில் பேசுகிறார்..தனியே MCX இல் MAIN BROKER ஆக இருக்கிறார்... அந்த சகோதரர் இன்றும் TIPS கொடுத்து வருகிறார்... பறவை யின் பெயர் கொண்ட TIPS PROVIDER ரிடம் கவனமாக இருங்கள்...

அடுத்த நபர்,,2007-2008 இல் நான் இந்த தொழிலுக்கு வந்து கிட்டத்தட்ட 5 இலட்சம் ரூபாய் இழப்ப்பதற்கும்,இன்னும் 8 நபர்கள் தங்களது (குடியிருந்த வீட்டை கூட )சொத்துகளை எல்லாம் இழப்பதற்கும் காரணம் ஆன,,ஒரு சகோதரர் தற்கொலை செய்வதற்கும் காரணமான எனது சப்-புரோக்கர்..சென்னையில் ஒரு கவிஞர் பெயர் கொண்ட பகுதியில் SUB BROKER ஆக இருந்தார் ..அவரது எல்லா CLIENT களையும் BROKERAGE க்கு ஆசை பட்டு ஒரு TECHNICAL CHART வைத்து கொண்டு அதை வாங்குங்கள் இதை வாங்குங்கள் என்று கூறி..தினசரி BROKERAGE வருமானம் மட்டும் 40000 ரூபாய் வரை சம்பாதித்த அந்த நபர் ..நாங்கள் எல்லாம் இழந்த போனவுடன்..அடுத்ததாக தேர்ந்தெடுத்த தொழில் TIPS PROVIDING, அவரது TECHNICAL ANALYST TEAM MEMBER கள் அவர்,அவரது நண்பர் (WEBSITE DESIENER MARKET தெரியாது ) ஒரு டீச்சர் அவரது CLIENT (ஒரு மாதத்தில் 1.30 இலட்சம் ரூபாய் அவரால் இழந்து )அவருடன் இந்த ( TIPS PROVIDER)தொழிலில் இணைந்து கொண்டவர்  ,அவரது ஆபீஸ் க்கு TEA கொண்டு வரும் ஒரு கேரளத்து  பையன் COMPUTER என்றால் என்னவென்றே தெரியாது.. இவர்களது  4 பேர் பெயர் தான் அவர்களது வெப்சைட் இல் TECHNICAL TEAM என்ற பகுதியில் இருக்கும்...

எல்லாம் இழந்த பின் இவர்கள் இந்த தொழில் ஆரம்பிக்கும் போது இவர்களை விட்டு நான் சென்று விட்டு ஒரு 5 மாதங்கள் கழித்து இந்த பகுதிவழியாக நான் வந்த போது அவர்களை பார்க்க சென்றேன் ...நான் பார்த்து அதிர்ந்து போன விஷயம் ..வெப்சைட் ஆரம்பிக்க 30000 ரூபாய்க்கு வழியில்லாமல் அந்த டீச்சர் நகையை அடமானம்  வைத்து அங்கே  இருந்த பழைய கம்ப்யூட்டர் ருடன் 5 மாதங்களுக்கு முன் அவர்கள் ஆரம்பித்த தொழில் ..இப்போது AC அறை 6 மொழி பேசும் 6 பெண்கள் வேலைக்கு ,4 SYSTEM ,5 LAND LINE இணைப்பு ,3WEBSITE (மேலும் 3 புது WEBSITE WORKING உருவாகி கொண்டு இருந்தது...) அபார வளர்ச்சி...அந்த பகுதியை சேர்ந்த என்னுடைய நண்பர் (அவரின் பழைய CLIENT )ஒருவரிடம் விசாரித்த போது உண்மை நிலவரம் தெரிந்தது...

அவர்களின் செய்தது  இந்த 3 WEBSITE களை இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிய வைக்க GOOGLE க்கு பணம் செலுத்தினால் இந்த WEBSITE முதன்மையாக தெரியும்..இதை பார்க்கும் இந்தய TRADER கள்..பல மொழிகளில் இவர்களை தொடர்பு கொள்ளுவார்கள் ..அவர்களிடம் பேச இந்த 6 பெண்கள்..மேலும் share traders database  (எவரேனும் ONE MONTH FREE TRIAL என்று FB யில் யாரும் விளம்பரம் கொடுத்தால் உடனே நீங்கள் ஓடி வந்து அப்டேட் செயவீர்களே உங்கள் மொபைல்  நம்பர் அதை எடுத்து TIPS PROVIDER களிடம் விற்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது..) வாங்கி இந்தியா முழுவதும் பல மொழி TRADER களிடம் பேசி அவர்களை SUBSRIBE செய்ய வைப்பது..இந்த வெப்சைட் இன் NAME FAIL ஆனவுடன் அடுத்த வெப்சைட் அறிமுகம் செய்வது என இவர்கள் செய்தது 6 WEBSITE கள் ...

இவர்களது TARGET  நீங்கள் தான்... நீங்கள் மாதமாதம் இவர்களுக்கு TIPS வாங்க முடியாது..ஏனெனில் இவர்கள் TIPS ஐ நீங்கள் முதல் மாதம் நீங்கள் பயன்படுத்தும் போதே உங்கள் முதலீடு அழிந்து போயிருக்கும்...அடுத்த மாதம் TRADE செய்ய பணம் இருந்தால் தானே நீங்கள் TIPS வாங்குவீர்கள்... அது இவர்களுக்கும் தெரியும்...அது தான் இவர்களுக்கும் வேண்டும் ...தெம்பாக இருக்கும் ஒருவன் தான் இங்கு வந்து  இவர்களை எதிர்க்க முடியும். இங்கே பணத்தை இழந்து தோற்று போய் நிற்கும் நீங்கள் இங்கே எங்கு வந்து சண்டை போடமுடியும் ..???
அவர்களது கணக்கீடு சிறியது தான் இவர்களது முதலில் ஒரு WEBSITE ,FB விளம்பரம்,6 பெண்களின் தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் ஒரு 5000 நபர்களையாவது தொடர்பு கொள்வது.. இதில்  1000 பேர்களின் மனதை மாற்றி அதில் ஒவ்வொரு மாதமும் ஒரு 100 பேர் இவர்களிடம் பணம் கட்டினால் கூட இவர்களது இலாபம் 6000*100=6 இலட்சம்.....அடுத்த மாதம் அடுத்த 100 பேர்,,என்று இப்படியே போய் 6 வெப்சைட் ..கணக்கிட்டு கொள்ளுங்கள் இவர்கள் டிப்ஸ் மூலம் எத்தனை இலட்சங்கள் ரூபாய்கள் ,எத்தனை 1000 குடும்பங்கள் நடுதெருவுக்கு வந்திருக்கும் என்று...

அடுத்த நபர்,எங்கள் மாவட்டதில் ஓடும் ஒரு ஆறு உற்பத்தி ஆகும் இடத்தை சேர்ந்த நண்பர் ..இவர் செய்தது  முந்தைய இருவரை விட கொஞ்சம் பரவாஇல்லை..இவர் செய்தது ஒரு இந்தியா 4 TIPS PROVIDER களிடம் 5000,6000 என்று பணம் கட்டி YAHOO MESSENGER மூலம் TIPS வாங்குவது ..அதை இங்கே COPY PASTE செய்து தமிழ்நாட்டு TRADER களிடம் தொடர்பு கொண்டு இந்த மாதிரி 4 பேரின் டிப்ஸ் நீங்கள் வாங்கினால் 20000 நாங்கள் வெறும் 4000 தருகிறேன் என்று ஒரு 20 நபர்களிடம் 4000*20=80000 வரை பெற்று அவர்களுக்கு அனுப்பி வந்தார்...இங்கே நடந்தது என்ன ஒரு TIPS PROVIDER ரிடம் வாங்கினால் 1 மாதத்தில் அழியும் முதலீடு 4 பேரிடம் வாங்கும் போது ..ஒருவர் நிபிட்டி SELL கொடுக்க அவர்கள்  SHORT போனவுடன் இன்னொரு TIPS PROVIDER BUY கொடுக்க இவர்கள் அதை COVER செய்ய ..திரும்ப அதை செய்ய இதை செய்ய என 4 நாளில் பலர் முதலீட்டை இழந்தனர்...


அடுத்தது..
TIPS கொடுப்பவர்கள் செய்யும் சூட்சுமங்கள் பற்றி ,,
FB இல் உள்ள TIPS PROVIDERகள் பற்றி,
ROBOT TRADING பற்றி ,
CHART PROVIDERS பற்றி,
TECHENICAL TEACHERS பற்றி,
PROFIT SHARING COMPANY கள்  பற்றி,
அடுத்தடுத்த பதிவுகளில்...

இன்னுமொரு முக்கியமான விஷயம்,

நேற்று என்னுடன் பேசிய ஒரு நண்பர் ,உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது ..ஒவ்வொரு TRADER களுக்கும் இது முக்கியமான கையேடு போன்றது என்றெல்லாம் சொல்லிவிட்டு எல்லாம் சரி சார்,நீங்கள் இதெல்லாம் சொல்லி விட்டு நீங்களும் பணம் வாங்கி கொண்டு தானே வகுப்பு எடுக்குறீங்க??உண்மையிலேயே நீங்க எங்க மேல அக்கறை உள்ளவரா இருந்தால் ஏன் நீங்க  வகுப்பு எடுப்பதை ஏன் இலவசமாக செய்ய கூடாது ன்னு, கேட்டு விட்டு சிரித்தார்  ???.(அவர் புத்திசாலி தனமான கேள்வி கேட்டுவிட்டாராம் ) .உங்கள்ள பல பேர் இதே கேள்வியை என்கிட்ட கேட்க நினைத்திருக்கலாம் ???
அவருக்கும் உங்க எல்லாருக்குமான என்னோட பதில் மற்றும் என்னோட கேள்வி இது  தான் ???,..

எனக்கு தமிழ்,ENGLISH  ,TYPING எதுவும் தெரியாது.. என்னுடைய எல்லா கட்டுரைகளும் TAMILISH இல் (PANKUSANTHAYIL என்று ஆங்கிலத்தில் TYPE செய்தால் பங்குசந்தையில் என்று தமிழில் TYPE ஆகும் )இல் தான் இரவு 10மணிக்கு மேல் 3 மணிவரை எழுத்துகளை தேடி பிடித்து TYPE செய்து எழுதியவை ..

நான் இன்று பங்கு சந்தையில் என்ன நடக்கிறது என்பதை கற்று கொண்டு பணம்(கற்றது சும்மா இல்லை பணத்தை இழந்து இழந்து தான் )ஈட்டி  வருகிறேன் ...இது போன்று இந்த சந்தையில் யாரேனும் ஒருவரையாவது எனது எழுத்துகள் காப்பாற்றிவிடாதா? என்ற எண்ணத்தில் இதுபோல்  எழுதிவருகிறேன்..
கண்ணுக்கு தெரியாத மற்றவர்களை விட்டுவிடலாம்.. என்னுடன் FB இல் FRIENDAKA இருக்கும்..எனக்கு தெரிந்த உங்கள் பணமாவது காப்பாற்றபடட்டுமே என்று எழுதி வருகிறேன்...

உங்களுக்கான கேள்வி ???
இதை படிக்கும் நீங்கள் (TRADER யின் கையேடு என்றெல்லாம் புகழ்ந்த நீங்கள் )(உங்களுக்கு இலவசமாக கிடைத்த இந்த பதிவை ) உங்களுடன் FB இல் நண்பராக இருக்கும் உங்கள் நண்பர் (இன்னொரு TRADER )இன் பணத்தை காப்பாற்ற இந்த கட்டுரைகள் உதவும் என்று உங்களில் எத்தனை பேர் எனது கட்டுரைகளை SHARE செய்தீர்கள்???...உங்களில் எத்தனை பேர் எனது  FB இல் UPDATE பற்றி உங்கள் நண்பர்களிடத்தில் பேசி இருக்கிறீர்கள் ???

முன்பே சொல்லி இருக்கிறேன் ...எனது பயிற்சி வகுப்புகள் மார்க்கெட் நேரத்தில் மட்டும் நடத்த முடியும்..அந்த நேரத்தில் மார்க்கெட்டில் இருந்தால் என்னால்குறைந்த பட்சம்  4000 -10000 ரூபாய் சம்பாதிக்க முடியும்..

இலவசமாக உங்களுக்கு கிடைத்த ஒரு விஷயத்தை ஒரு கிளிக் செய்தால் SHARE ஆகும் (மற்றவருக்கு உதவியாக போய்  சேரும் விஷயத்தை), மற்றவருக்கு கொடுக்க(SHARE செய்ய ) தயங்கும் நீங்கள்...
நான்  எனது பணத்தை,உழைப்பை கொடுத்து உருவாக்கிய எனது ZFORMULA வை..நான் சம்பாதிக்கும் நேரத்தில் (மார்க்கெட் நடைபெறும்  நேரத்தில்),நான் சம்பாதிப்பதை விட்டுவிட்டு உங்களுக்கு வந்து இலவசமாக கற்று தந்து உங்களுக்கு உதவ வேண்டும்  என்று எந்த அடிப்படையில் விரும்புகிறீர்கள்..?????

அதை விடுங்கள் நான் எனது FB இல் ஒரு சில TIPS கள் இலவசமாக UPDATE செய்து வருகிறேன்.சென்ற மாதம்(4 அல்லது 5 இருக்குமென நினைக்கிறேன்) நான் கொடுத்தது எதுவுமே இழப்பை சந்திக்கவில்லை
 சென்ற மாதம் நான் கொடுத்த இந்த TIPS களை TRADE செய்தது உங்களில் எத்தனை பேர்..??? அதிகபட்சம் ஒரு 4 பேர் இருக்குமா???  இலவசமாக கிடைக்கும் ஒரு பொருளுக்கு என்ன மரியாதையை இருக்கும் என எனக்கு தெரியும் நண்பர்களே ..நான் முதலில் உங்களை போல ஒரு TRADER தான் ..அதன் பின் தான் மற்ற எல்லாம்.....FREE TIPS இன் மீது  உங்கள் மனநிலை என்னவாக இருக்கும் என்பதும் எனக்கு தெரியும்...

நன்கு கவனிக்க: பயிற்சி வகுப்புகள் நடத்துவது எனது தொழில் அல்ல ..சில FB நண்பர்கள் கேட்டு கொண்டதால் அவர்களுக்கு பயிற்சி அளித்தேன் அது பற்றி FB  இல் UPDATE செய்தேன் .. மேலும் சில நண்பர்கள் எப்போது அடுத்த வகுப்பு என்று கேட்டிருந்தனர் அவர்களுக்காக தான் FB இல் அடுத்த பயிற்சி வகுப்பு பற்றி தெரிவித்து இருந்தேன் அன்று  ஒப்பு கொண்ட நபர்களுக்கு மட்டுமே  தற்போதைக்கு பயிற்சி நடக்கிறது..புதிய நபர்கள் இணைத்து கொள்ளவில்லை(தயவு செய்து தொடர்பு கொள்ளவேண்டாம் )..

உங்களுக்கு தெரியுமா ?? நான் தமிழில் பங்கு சந்தை கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பின் எத்தனை SUBBROKER கள் (LOW BROKERAGE DETAILS IN MY ARTICLES ) TIPS PROVIDER கள் ,TECHNICAL CLASS TEACHERS என என்னை UNFRIEND  செய்துள்ளனர் எத்தனை பேர் என் ID யை BLOCK செய்து வைத்துள்ளனர் என்று??? ..எனது கட்டுரை அவர்களது FB CLIENT க்கு போய் சேர்ந்தால் அவர்கள் விவரம் ஆகி விடுவார்களாம்..இவர்களால் அவர்களை வைத்து சம்பாதிக்க முடியாதாம்..அதற்காக ...

பங்கு சந்தையில்  இழப்பை தடுக்கும் வழிகள் நமக்கு கிடைக்கும் போது ..அதை மற்றவருக்கு கொடுக்க நீங்களே தயங்கும் போது ...

ஏமாற்றுவதை தொழிலாக கொண்ட அவர்கள் அப்படி இருப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...

தயவுசெய்து இந்த கட்டுரையின் COMMENT BOXIL வந்து அவர் இப்படி ஏமாற்றினார் இவர் இப்படி ஏமாற்றினார் என்று வேறொருவரின் பெயரை COMMENT செய்வதை விட்டு விட்டு..(ஏனெனில் அவர் ஏமாற்றவில்லை) நீங்கள்  எப்படி ஏமாந்திர்கள் என்று மட்டும் (பெயர் வேண்டாம் )COMMENT செய்யவும் ...

முடிந்தால் இந்த கட்டுரைகளை  இன்னும் சிலரை சென்று சேர முயற்சி செய்யுங்கள்...
தோழமையுடன்
ZFORMULA RAVI

Tuesday, 26 May 2015

"OPTION WRITING IS HIGH RISK,LIMITED RETURN..THEN WHY SOME PEOPLE WRITING OPTIONS?"    ONE OF MY FB FRIEND ASK THIS QUESTION... MY ANSWER IS OPTION BUYER IS SOME TIMES ONLY MAKE MONEY,MAXIMUM TIMES LOOSE THEIR MONEY.. BUT OPTION WRITER IS MAXIMUM TIMES MAKE MONEY..SOME TIMES ONLY LOOSE THEIR MONEY....


OPTION SHORT செய்தால் அதிக RISK குறைந்த இலாபம் ,இப்படி இருக்கும் போது, ஏன்  நிறைய பேர் SHORT SELLING செய்கின்றனர் என்று ஒரு நண்பர் என்னிடம் முன்பு கேட்டிருந்தார் ...அவருக்கான பதில் OPTION வாங்குபவர்கள் எப்பவாவது இலாபம் பார்க்கின்றனர் ..ஆனால் OPTION விற்பவர்களோ எப்போதும் மிக குறைந்த இலாபம் என்றால் கூட மிக உத்திரவாதமான இலாபத்தை பெறுகின்றனர்...கீழே இந்த மாத NIFTY BANKNIFTY OPTION கள் உதாரணத்திற்கு ...

Friday, 8 May 2015

இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த பங்குசந்தையில் பணத்தை இழக்க போகிறிர்கள்.???

பங்குசந்தை தேவைக்கும் அளிப்புக்கும் (DEMAND AND SUPPLY )என்ற வணிக நிலையில் இருந்து மாறி,பணம் படைத்தவர்களின் சூதாட்ட களம் போல் மாறி வெகு நாளாக ஆகிறது.. 

சென்ற வாரத்தில் NIFTY திங்கள்கிழமை 160 புள்ளிகள் உயர்ந்தது ,செவ்வாய்கிழமை -11 புள்ளிகள் குறைவாக முடிந்தது புதன்கிழமை -237 புள்ளிகள் குறைவாக முடிந்தது..வியாழக்கிழமை -39 புள்ளிகளில் முடிந்தது ..வெள்ளிகிழமை +134 புள்ளிகளில் முடிந்துள்ளது.மொத்ததில் சென்ற வாரத்தை விட 10 புள்ளிகள் (NIFTY SPOT) அதிகமாக வந்து முடிந்துள்ளது..ஆனால் இந்த ஏற்ற இறக்கத்தில் நீங்கள் இழந்த பணம் எவ்வளவு ?????....

என்னிடம் FB இல் நண்பர்களாக இருக்கும் ஒரு 6-7 நண்பர்களின் (என்னுடன் பகிர்ந்து கொண்ட )இழப்பு மட்டும் 5.25 இலட்சங்களுக்கு மேல்..எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக வேறு எங்கோ இருந்து நாள் முழுக்க வேலை செய்து சேர்த்து வைத்த பணம்..

ஏன் இப்படி எதுவும் தெரியாமல் இங்குவந்து பணத்தை இழந்து வருகிர்கள்????
எதுவும் தெரியாமல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று TRADE செய்யாமல், இந்த தொழிலை விட்டு தயவு செய்து வெளியே சென்று விடுங்கள்..உங்கள் குடும்பம் உங்கள் வருங்கால உழைப்பாவது மீதம் இருக்கும்..

இங்கே நடப்பது முழுக்க முழுக்க பணம் படைத்தவர்களிடையே நடக்கும் விளையாட்டு..அவர்களின் நோக்கம் முழுவதும் உங்களுடைய பணம் தான் .. 
உங்களது TECHNICAL ANALYST திறமை எல்லாம் இந்த சந்தைக்கு மிக சாதாரணம்..எல்லாவற்றையும் நொறுக்கி தள்ளிவிட்டு உங்கள் பணத்தை கொண்டு போய்விடும்...

சின்ன உதாரணம் இங்கே ஒரு DAILY CHART UPDATE செய்துள்ளேன்..பாருங்கள் மே முதல் வாரம் ,ஜனவரி முதல் வாரம் இரண்டையும் வட்டமிட்டு காட்டியுள்ளேன் பாருங்கள் ..இந்த இரண்டு வார CANDLE களுக்கும் உள்ள ஒற்றுமையை..
இங்கு எல்லாமே திட்டமிட்டு நடக்கிறது..எந்த ஒரு ஏற்றத்திற்கும், இறக்கத்திற்கும் பலபல காரணங்கள் சொல்லுவார்கள்..சென்ற வார இறக்கத்திற்கும் பற்பல காரணங்கள் சொன்னார்கள்..ஆனால் எங்களுக்கு(எனது மாணவர்களுக்கும் ) தெரியும் இந்த இறக்கத்திற்கு உண்மையான காரணம் என்னவென்று...  
உண்மையான காரணம் புரிந்த நாங்கள் இந்த வீழ்ச்சியில் இருந்து எங்களது முதலீட்டை காத்து கொண்டோம்..

 உங்கள் பணத்தை கொண்டு  போக இங்கே நடப்பது மிகப்பெரிய பணம் படைத்த கூட்டம் திட்டமிடுகிறது ..அவர்களின் கூடவே சென்றால்,நாமும் பணம் சம்பாதிக்கலாம் ,நமது முதலீட்டையாவது இழப்பில்லாமல் காத்து கொள்ளலாம்...

தயவு செய்து திரும்பவும் சொல்லுகிறேன்..இங்கே உங்கள் முன் இருப்பது கண்ணுக்கு தெரியாத எதிரி அவனது பலம் அசூர பலம் ..அவர்களோடு மோத மிக  அதிகபட்ச திறமை...
 அந்த திறமை இல்லாத நண்பர்கள் தயவு செய்து மீதம் இருக்கும் உங்கள் பணத்தையாவது  பாதுகாத்து கொள்ளுங்கள்..."சந்தையை விட்டு போய்விடுங்கள்"..இந்த வார்த்தையை சொல்ல வருத்தமாக தான் இருக்கிறது ..வேறு வழியில்லை ஒவ்வொரு நண்பர்களும் தொலைபேசியில் நான் இவ்வளவு இழந்து விட்டேன் இவ்வளவு போய்விட்டது என்று கதறும் போது வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை..
இந்த பதிவையும் பகிர்ந்து உங்கள் நண்பரின் பணத்தையும் காக்கவும் 
Zformula Ravi 


Wednesday, 29 April 2015

OPTION TRADER களின்  கவனத்திற்கு ...

27-4.2015 அன்று ஒரு நண்பர் FB CHAT இல் வந்து  எதாவது CALLS கொடுங்க சார் என்று கேட்டார்..அவரது மொத்த முதலீடே 10000 ரூபாய் மட்டும் தான்..இந்த சந்தையில் தவரான முறையில் TRADE செய்து பெரும் பணத்தை இழந்துள்ளார் ..தற்போதைய சூழலில் இந்த 10000 ரூபாயில் தான் TRADE செய்து வருகிறார்..

அவருக்கு 8200 PUT வாங்க சொன்னேன்.44ரூபாயில் 100 QUANTITY வாங்கி உள்ளார்..நான் எனது TRADING இல் கவனமாக இருந்ததால்,அவருக்கு SL  மட்டும் 40 என்று கூறிவிட்டேன்..TARGET சொல்லவில்லை ..அந்த OPTION 59.95 ரூபாய் வரை சென்றுள்ளது ஆனால் அவர் அதை விற்கவில்லை 40 ரூபாய்க்கு SL TRIGGER ஆகும் வரை வைத்திருந்து..இழப்பை பதிவு செய்திருக்கிறார்...

திரும்ப அந்த சகோதரரை தொலைபேசியில் அழைத்து,சற்றே கடிந்து கொண்டேன்.பின் சில வழிமுறைகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்,,,

OPTION TRADING மிகவும் RISK அதிகம் உள்ள இலாபம் அதிகம் உள்ள தொழில்.
இது போன்ற TRADING ஐ உங்களில் பலரும் செய்து வரலாம்.. உங்களுக்காகவே இந்த பதிவு.. OPTION TRADING இல் ஜெயிக்க உள்ள மிக சிறிய எளிய வழிமுறை இது..
.
முதலில் உங்கள் முதலீடு(OPTION TRADING) எவ்வளவு என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள்..
நமது கணக்கீடாக ஒரு 50000 என்று வைத்து கொள்ளுவோம்..இந்த 50000 ரூபாயை வேறு ஒரு நண்பரிடம் நீங்கள் கடனாக வாங்கியதாக வைத்து கொள்ளுவோம்..அந்த நண்பருக்கு வட்டி 3% என்றால் 1500 ரூபாய் மாதம் நீங்கள் கொடுக்க வேண்டும் ..(நன்றாக கவனியுங்கள் :50000 ரூபாய் முதலீடிற்கு  உங்கள் நண்பர் மாதம் பெறுவது 1500 ரூபாய் )

நமது TRADING நாட்கள் மாதத்திற்கு 20-21 நாட்கள் மட்டுமே..நமக்கு தேவை மிக குறைந்த BROKERAGE இல் ஒரு ACCOUNT (இது பற்றி நான் முன்னரே  எழுதி இருக்கிறேன்.http://zformula.blogspot.in/2014/11/option-trading.html)..

50 ரூபாயில் ஒரு OPTION CALL அல்லது PUT  எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ..நீங்கள் ஒரு 300 QUANTITY வாங்கினால் 50*300=15000 ரூபாய் ..இந்த TRADING ஐ 52 ரூபாயில் நீங்கள் முடித்து விடுங்கள்..குறைந்த BROKERAGE FIRM இல் நீங்கள் TRADE செய்யும் போது அதிகபட்சம் 25 காசுகள் (0.25*300=75ரூபாய்) மட்டும் கமிசன் மட்டும் TAX போகும்..

உங்கள் கையில் 1.75 காசுகள் (1.75*300=525) ரூபாய் இலாபம் நிற்கும்..இது போல் ஒரு இரண்டு TRADE செய்து பாருங்கள் 1050 ரூபாய் உங்களுக்கு இலாபம் கிடைக்கும் ..இது போல 20 TRADING நாட்களில் ஒரு 15 நாள் இலாபமும் 5 நாட்கள் இழப்பும் வந்தால் கூட உங்கள் கையில்.10500 ரூபாய் இலாபம் நிற்கும் .
சிலர் எப்படியும் வந்து COMMENT இல் கேட்பிர்கள் 2 ரூபாய் ஏறும் OPTION கண்டுபிடிப்பது எப்படி என்று ?? அவ்வாறு கண்டு பிடிக்க முடியாதவர்கள் ஒரு ரூபாய் இலாபத்தில் வந்து பாருங்கள்(0.25  காசுகள்) 75 ரூபாய் கமிசன் போக 225 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.. இது போல தினசரி 2 TRADE செய்யுங்கள் 450 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்..

இவ்வாறு ஒரு 15 நாட்கள் இலாபமும் 5 நாட்கள் இழப்பும் வந்தால் கூட உங்கள் அக்கௌண்டில் நிகர  இலாபம் 4500 ரூபாய் கண்டிப்பாக கிடைக்கும்..

ஒரு ரூபாய் ஏறும் OPTION ஐ எப்படி கண்டு பிடிப்பது என்று சிலர் கேட்கலாம்..NIFTY  5 புள்ளிகள் MOVE ஆனால் 50 ரூபாய் விலையிலுள்ள OPTION குறைந்தது 1ரூபாய் யாவது ஏற்ற இறக்கம் இருக்கும்..NIFTY யில் இந்த 5 புள்ளிகள் ஏற்ற இறக்கத்தை கணிக்க முடியாத நண்பர்கள் தயவு செய்து வேறு தொழிலுக்கு மாறிவிடவும்...

கவனிக்க இந்த TRADING முறைக்கு நாம் பயன்படுத்திய முதலீடு 15000 ரூபாய் மட்டுமே..

இது போல சின்ன சின்ன TRADE செய்து உங்களது முதலீட்டை முதலில் கொஞ்சம் அதிகபடுத்தலாம்...உங்களது 50000 முதலீடு ஓரளவு இலாபத்திற்கு (ஒரு 20000 மாவது ) கிடைத்த பின்னர் நீங்கள் பெரிய இலாபத்திற்கு காத்திருந்து SL போட்டு காத்திருந்து TARGET BOOK செய்யலாம்...

உங்களிடம் 50000 முதலீடு செய்து உங்கள் நண்பர் ஒரு மாதத்தில் பெறுவது 1500 ரூபாய் மட்டுமே..

நீங்கள் அந்த 50000 தில் 15000 மட்டும் TRADING இல் பயன்படுத்தி ஒரு மாதத்தில் பெறுவது 10500...

சில நாட்கள் இந்த TRADING ஐ கவனமாக செய்துமுடித்தால்அதன் பின் 50000 பயன்  படுத்தி செய்ய ஆரம்பித்தால் 30000 ரூபாய் வரைக்கும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது..

கவனிக்க இது முழுவதும் உங்களது முதலீடு கொஞ்சம் பெருகி வரும் வரைக்கும் மட்டுமே..
உங்களது இலாப தொகை உங்களது முதலீடாக மாறும்.சூழ்நிலையில் உங்களுக்கு இழப்பு வரும் வாய்ப்புகள் மிக குறைவு ..
இது மிகவும் சுலபமான வெற்றி பெரும் முறை..

எனது நண்பர் ஒருவர் இந்த சந்தைக்கு புதியவர் ..அவருக்கு நான் ONLINE ACCOUNT OPEN செய்து கொடுத்து,அவருக்கு நான் கற்று கொடுத்தது மூன்று பொத்தான் (BUTTON )களை மட்டும் தான்..F 1 என்றால் BUYING F 2 என்றால் SELLING,அதன் பின் NET ORDER POSITION பார்ப்பது எப்படி இந்த மூன்று மட்டும் தான் அவருக்கு கற்று கொடுக்க பட்டது ...SL ORDER சொல்லி கொடுக்கவில்லை..எதை வாங்கினாலும் 2 ரூபாய் தள்ளி விற்று விடுங்கள் என்று மட்டும் சொல்லி கொடுத்து விட்டு வந்தேன் ..80000 முதலீட்டில் CALL ,PUT என அவர் எல்லாவற்றிலும் 200 QUANTITY வாங்கி 2 ரூபாய் தள்ளி விற்று அவர் அன்று செய்த TRADE மொத்தம் 43 ..மாலை அவர் அவரது வீட்டிற்கு வர சொன்னார் ..போய் அவரது TERMINAL ஐ OPEN செய்து பார்த்த போது அவருக்கே தெரியாமல் அவர் அன்று சம்பாதித்தது 8600 ரூபாய் (அவரது நிகர இலாபம் 6400 ரூபாய் ..உண்மையை சொல்லவேண்டுமானால் அவருக்கு அன்றைய சுழலில் CALL PUT OPTION என்றாலே என்னவென்று தெரியாது...நம்பர் களை பார்த்து மட்டும் வணிகம் செய்தார்..

4400 ரூபாய் முதலீடிற்கு 1500 ரூபாய் இலாபம் கிடைத்தும் BOOK செய்யாமல்இந்த நண்பரை போல உங்களில் எத்தனை பேர் உள்ளீர்கள்????
திருந்துங்கள் நண்பர்களே...



Friday, 24 April 2015

OPTION TRADING விதிகள் (7வது விதி )

நம்மில் பலர் OPTION TRADING இல் பல வழிமுறைகளை கையாண்டு OPTION ஐ வாங்கி  அது இறங்கும்வரை வைத்திருந்து இழப்பை சந்தித்து வருகின்றனர்...
ஒரு சிலர் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் நிபிட்டி 8500 இல் இருந்தால் 9000 CALL .மற்றும் 8000 PUT என இரண்டு பக்கமும் வாங்கி இழப்பை சந்திக்கின்றனர்

ஆனால் OPTION TRADING இல் எனக்கு தெரிந்த நண்பர் குழு ஓன்று தினசரி OPTION இல் SHORT மட்டும் செய்து மாதத்தில் 15 நாட்களுக்கு குறையாமல் இலாபம் சம்பாதித்து வருகின்றனர்.. இவர்களின் மொத்த RISK இன் அளவு முதலீட்டில் 10%மட்டுமே...அவர்களின் OPTION TRADING முறையை இங்கு விளக்குகிறேன்..ஒரு 20 நாட்கள் பேப்பர் TRADE செய்து விட்டு முயற்சித்து பார்க்கவும்..

தினசரி OPTION பிரிமியம் கரைவது உங்களுக்கு தெரியும்..இந்த நண்பர் குழுவுக்கு தேவை இந்த கரையும் பிரிமியம் மட்டும் தான் ..

உதாரணமாக ஒரு இலட்சம் ரூபாய் உள்ள ஓர் அக்கௌன்ட் கணக்கீடாக கொள்ளுவோம் ... இவர்கள் செய்வது என்னவென்றால் ஒரு இலட்சம் ரூபாய்க்கு 2000 QUANITITY NIFTY OPTION SHORT TRADING செய்யும் அளவிற்கு ACCOUNT தயாராக இருக்கும்..

இவர்கள் செய்வது என்னவென்றால்

மார்க்கெட் ஆரம்பித்தவுடன் NIFTY FUTURE 8750 இல் (+30) TRADE ஆவதாக வைத்து கொள்வோம்.
இந்த நேரம்
8700 CALL விலை 80ரூபாய் அளவில் இருக்கும் ..
8800 PUT விலையும் 80 ரூபாய் அளவில் இருக்கும் ..

இந்த நேரத்தில் இந்த இரண்டு OPTION களையும் 8700 CALL 1000QUANTITY....மற்றும் 8800 PUT 1000 QUANTITY..SHORT செய்து விடுவார்கள் ...

மார்க்கெட் மேலே போனால் இவர்கள் SHORT போன CALL OPTION விலை ஏறும் இவர்களுக்கு இழப்பு வரும்..ஆனால் இவர்கள் SHORT போன PUT OPTION விலை இறங்கும் இதில் இலாபம் வரும்..இவ்வாறு மேலே கீழே நடக்கும் போது  இவர்களது முதலீடு கொஞ்சமும் குறையாமல் இருக்கும்...

இப்படியே இருந்தால் இவர்களுக்கு எப்போது இலாபம் வரும் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம் ??

இலாபம் வரும் எப்படி  வரும் என்றால் ???..கணக்கிட்டு பாருங்கள் ...

8750 இல் உள்ள NIFTY FUTURE 8780 க்கு போய் இருந்தால்

இவர்கள் SHORT  போன 8700 CALL 80 இல் இருந்து 95 வரை சென்று இருக்கும் ..
இவர்களது இழப்பு இந்த TRADE இல் (80-95) 15*1000=-15000...

அதே போல் SHORT போன இவர்களது 8800 PUT 80 இல் இருந்து 60 வரை வந்து இருக்கும் ... இதில் இலாபம் (80-60) 20*1000=20000...

இதுவே

8750 இல் உள்ள NIFTY FUTURE 8720 க்கு போய் இருந்தால்

இவர்கள் SHORT  போன 8800 PUT 80 இல் இருந்து 95 வரை சென்று இருக்கும் ..
இவர்களது இழப்பு இந்த TRADE இல் (80-95) 15*1000=-15000...

அதே போல் SHORT போன இவர்களது 8700 CALL 80 இல் இருந்து 60 வரை வந்து இருக்கும் ... இதில் இலாபம் (80-60) 20*1000=20000...

மொத்த இலாபம் =20000-15000=5000 (BROKERAGE TAX -1200) =நிகர இலாபம் 3800 ரூபாய்..

இது எப்படி நடக்கிறது ?? எல்லாம் ஒரே ஒரு காரணம் தான் ??PREIMIUM MELTING ...மார்க்கெட் ஒரு 30புள்ளிகள் ஏறினால் CALL 15 ரூபாய் ஏறும் PUT 20 ரூபாய் இறங்கும்..
எவ்வாறெனில் மார்க்கெட்டில் CALL PUT எதுவாக இருந்தாலும்,,,அது ஏறும் வேகம் குறைவாகவும் (100%) இறந்கும்வேகம் அதிகமாகவும் ..(150%)இருக்கும் ..
இந்த ஏற்ற இறக்கம் தான் இவர்களின் இலாபம் ..

இது கணக்கீடு மட்டும் தான் இவர்கள் ஒரு இலட்ச ரூபாய் முதலீட்டிற்கு 4 புள்ளிகள்  கிடைத்தால்  கூட தங்கள் POSITION ஐ COVER செய்து விடுவார்கள்...நிகர இலாபம் 2800..சராசரியாக மாதத்தில் 15-17 நாட்கள் இவர்களுக்கு இந்த வருமானம் கிடைத்து வருகிறது.,,மார்க்கெட் சில சமயம் ஒரே பக்கத்தில் MOVE ஆகும் சமயங்களில் மட்டும் இவர்களுக்கு இழப்பு வருகிறது...(இப்போது ஒரு SIDE MARKET பற்றிய எமது பயிற்சி அவர்களுக்கு அளிக்கபட்டு வருவதால் இனி அந்த 3-5 நாட்கள் கூட இழப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை )

உங்களுக்கே தெரியும் மாதம் 20 TRADING நாட்களில் NIFTY  +-60புள்ளிகளுக்குலேயே  மட்டும் TRADE ஆகிறது ..100 புள்ளிகளுக்கு மேல் போவது ஒரு 3-5 நாட்கள் மட்டும் தான்

மார்க்கெட் எந்த பக்கம் போனாலும் இவர்களுக்கு கவலையில்லை இலாபம் ஒரு  85%  நிச்சயம்.. மார்க்கெட் எந்த பக்கமும் போகாமல் அப்படியே இருந்தாலும் இவர்களுக்கு இலாபம் 100%உறுதி (PREIMIUM MELTING )

இந்த முறையை ஒரு மாதம் பேப்பர் TRADE செய்யவும் அதன் பின் TRADING இல் முயற்சி செய்து பார்க்கவும்...

இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் ....நம்புங்கள் ..

நம்மாலும் முடியும்....

Sunday, 19 April 2015

OPTION TRADING RULES ( 7 )


IN ENGLISH
TRY TO TRADE OPTION WRITING SIDE...EVERY DAY,EVERY HOUR ALL OPTION  PREMIUM IS MELTING..SO TRY OPTION WRITING..WHO TRADE IN OPTION WRITING THEY ARE MAKE MONEY IN THE MARKET..

ONE OF MY FRIEND,HIS CAPITAL ONE LAKHS.. HE TRADE BOTH SIDE OPTION WRITING STRATEGY ..MONTHLY 15 TO 17 DAYS HE EARN MONEY..ONLY 3 OR 5 DAYS ONLY HE MAKE SMALL LOSS...

HIS STRATEGY

EXAMPLE
NIFTY FUTURE  TRADE 8750 RANGE .. 8700 CALL 80  RS AND 8800 PUT 80 RS..

 THAT TIME HE WRITE (SOLD)  OUT THE MONEY CALL AND PUT  OPTIONS..(NEAR STRIKE PRICE)

  SOLD 8700 CALL 1000 @ 80... 8800 PUT 1000 Q @ 80..

AFTER ONE HOUR  OR TWO HOUR..

IF
NIFTY GO TO 8780 (8750 TO 8780)RANGE
8700 CALL PRICE INCREASE 95(80-95) HE MAKE LOSS -15 RS(15*1000=-15000)
8800 PUT PRICE DECREASE 80(80-60) HE MAKE PROFIT +20 RS(20*1000=+20000)

SAME TIME NIFTY COME TO 8720 (8750-8720)RANGE

8700 CALL PRICE DECREASE 60 (80-60)  HE MAKE PROFIT +20 RS(20*1000=+20000)
8800 PUT PRICE INCREASE 95(80-95) HE MAKE LOSS -15 RS(15*1000=-15000)  

TOTAL PROFIT 20000-15000=5000-(TAX BROKERAGE 1200)=3800 NET PROFIT..

NOTE : EVERY BODY KNOW WHEN MARKET MOVE IF OPTION INCREASE SPEED 100% BUT OPTION DECREASE (MELTING)SPEED IS 150%...

MARKET ANY SIDE MOVE HE MAKE 85% SURE  PROFIT ...AND ALSO
MARKET NOT MOVING HE MAKE 100% SURE PROFIT (PREIMIUM MELTING)...
IF ANY ONE SIDE MOVE THAT TIME ONLY HE MAKE SMALL LOSS...(MONTHLY 3-5 DAYS ONLY...
FIRST TRY THIS @ PAPER TRADE ..THEN ONLY TRADE WITH UR ACCOUNT...
PLEASE TRY TO WITH YOUR OWN DECISION...


Thursday, 2 April 2015

OPTION TRADING RULES ( 6  )
OPTION TRADING விதிகள் (6ஆவது விதி )

IN ENGLISH

6. TRY TO TRADE NEAR STRIKE PRICE....EXAMPLE : NIFTY FUT TRADE @ 8635. IF U HAVE IN BULL SIDE ...TRADE @ =8700,8800,8900 CALL OPTIONS ONLY ..SAME TIME IF U HAVE IN BEAR SIDE... TRADE @ 8600,8500,8400 PUT OPTIONS ONLY...
MAXIMUM NIFTY TRADE  RANGE IN A WEEK IS + OR - 300 RANGE ONLY SO TRADE THIS RANGE OPTIONS ONLY...
OUT THE MONEY (3 STRIKE PRICE ) MELTING SPEED IS 5% EVERY DAY
SAME TIME OUUUUUTTTT THE MONEY (OTHER STRIKE PRICE MELTING SPEED IS 8-10% EVERY DAY..SO TRADE CARE FULLY...

IN TAMIL

6. OPTION TRADE இல் மிக முக்கியமானது STRIKE PRICE தேர்ந்தெடுப்பது .....

நிறைய நண்பர்கள் இந்த இடத்தில் மிக பெரிய தவறு செய்கின்றனர்...உங்கள் ACCOUNT இல் ஒரு 25000 ரூபாய் இருந்து  NIFTY OPTION இல் TRADE செய்வதாக வைத்து கொள்வோம்...

NIFTY FUTURE  இப்போது 8635 இல் TRADE ஆவதாக வைத்து கொண்டால்,

நாம் NIFTY  இன்னும் மேலே போகும் என்று எண்ணினால் 8700,அல்லது 8800 அல்லது 8900 ஆகிய CALL OPTION களில் மட்டும் TRADE செய்ய வேண்டும்..

அதே போல் நீங்கள் NIFTY கீழே இறங்கும் என்று நினைத்தால் 8600,8500,8400 ஆகிய PUT OPTION களில் மட்டும் TRADE செய்ய வேண்டும் ..

9000,9100,9200 CALL  அல்லது 8300,8200,8100,8000 PUT OPTION களில் TRADE செய்வதை தடுக்க வேண்டும்..

எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும் எனில்,

OPTION TRADE செய்யும் உங்கள் எல்லோருக்கும் தெரியும் CALL ,PUT என ஒவ்வொரு மாதமும் 65-75% OPTION கள் ZERO வில் தான் முடிகின்றன ..

மாத துவக்கத்தில் ஒரு OPTION  100 ரூபாய் விலையில் இருந்தால் அது அந்த மாத கடைசியில் ZERO ஆவதாக வைத்து கொண்டால் சராசரியாக ஒரு நாளைக்கு 5% விலை குறையும் ...
அதுவே வெகு தொலைவில் (OUTTTTTT THE MONEY)உள்ள OPTION எனில் குறையும் வேகம் 8% TO 10 % வரை இருக்கும்

இப்படியான சுழலில் NIFTY யானது ஒரு வாரத்தில் அதிகபட்சம்(80% வாரங்களில்)  ஒரு 300 புள்ளிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தான்  TRADE ஆகிறது..
8635 இல் இருக்கும் NIFTY மேலேறினால் 8935 வரை தான் (நீங்கள் நினைப்பது நடந்தால் மட்டும் ) செல்லும் கீழிறங்கினாலும் இந்த 8335 வரை தான் செல்ல வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த RANGE  க்குள் உள்ள OPTION களில் TRADE செய்தால் நீங்கள் நினைத்து நடக்கும் நிலையில் ஓரளவு இலாபமும்,ஒரு வேளை நீங்கள் நினைத்தது நடக்கா விட்டால் உங்கள் OPTION விலை குறையும் (கரையும்) வேகம் கட்டுக்குள்ளும் இருக்கும்....

நமது மனம் எப்போது அதிக எண்ணிக்கைக்கு  ஆசைபடும்...
8700 CALL வாங்கினால் 85 ரூபாய்க்கு தோரயமாக 300(300*85=25500)  QUANTITY வாங்கலாம் ..
ஆனால் நமது மனமோ 9000 CALL 12.50 க்கு 2000 (12.5*2000=25000) QUANTITY வாங்க தான் எண்ணும்..

நமது கணக்கில் 300 QUANTITY இருப்பதை விட 2000 QUANTITY இருப்பது உள்ளுக்குள் ஆழ்மனதை சந்தோசப் படுத்தலாம்..

ஆனால் அடுத்த 5 நாட்களில் கழித்து நாம் நினைத்தது நடக்க வில்லை..NIFTY அங்கே  இங்கே போய் திரும்ப வந்து 8635 இலேயே முடிந்து விட்டது எனில்,

இதே 8700 CALL விலை 60 ரூபாய் வரை  வந்து முடிய வாய்ப்புள்ளது(60*300=18000) (30%LOSS )

ஆனால் 9000 CALL விலை 6 ரூபாயில் வந்து நிற்கும் (6*2000=12000)(55% LOSS )

இதே போல் தான் எல்லா STOCK களிலும் ,,,அதற்கு அருகில் உள்ள STRIKE PRICE OPTION களில் வணிகம் செய்ய முயற்சி செய்யுங்கள்...

எப்போதுமே நடப்பு விலை அருகில் உள்ள OPTION ஐ விட வெகு தூரத்தில் உள்ள OPTION STRIKE PRICE இன் விலை குறையும் வேகம் மிக அதிகமாக இருக்கும்....

எனவே QUANTITY யை மனதில் கொள்ளாமல், நடக்க வாய்ப்புள்ள STRIKE PRICE இல் வணிகம் செய்ய முயற்சி செய்யுங்கள்..உங்கள் இலாபம் அளவோடு இருந்தாலும் ,உங்கள் முதல் (CAPITAL ) உங்களிடம் இருக்க வாய்ப்புள்ளது ...

இந்த தொழிலில் பணம் சம்பாதிக்க யாரோ ஒருவரால் முடிகிறது ..நம்மால் முடியாதா ???? முடியும் ....நம்புங்கள் ..

நம்மாலும் முடியும்....

Friday, 27 March 2015

நேற்று மாலை ஒரு நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்...இன்றும் ஒரு நண்பர் எனது TIMELINE COMMENT BOX இல் ஒரு கேள்வி கேட்டுள்ளார்..அவர் கேட்ட கேள்விகள் போல் உங்களுக்கும் சந்தேகம் இருக்கலாம் எனவே  அவருக்கும் உங்களுக்கும் சேர்த்து பதிலையும் கூறுகிறேன்...

அந்த நண்பர்  கேட்டார் .."நீங்கள் உங்கள் NIFTY VIEW வை  கடந்த 6 மாதமாக FB இலும் UPDATE செய்கிறிர்கள் ..எல்லாமே ஓரளவு சரியாகவே இருக்கிறது..அப்படியே நீங்கள் TRADE செய்த TRADE BOOK ஐ COPY செய்து UPDATE செய்தால் இன்னும் உங்கள் மேல் நம்பிக்கை வரும்..உங்களிடம் பயிற்சி வகுப்புக்கு நிறைய பேர் கலந்து கொள்வார்கள் அல்லவா ? உங்களிடம் TIPS வாங்கவும் நிறைய பேர் வருவார்கள் அல்லவா ????" என்று கேட்டார்..
இன்னும் நிறைய பேருக்கு இதே கேள்வி இருக்கலாம்...?/

எல்லோருக்கும் இதோ எனது பதில்,

           நான் முன்னரே சொல்லி இருக்கிறேன்..எனது வெற்றியின் சதவிகிதம் 80% மட்டுமே.இந்த சூழலில் நான் எனது TRADE BOOK ஐ FB இல் UPDATE செய்ய ஆரம்பித்தால், அந்த 20%இழப்பு வரும் TRADE ஐ மறைத்து விட்டு இலாபம் வந்த TRADE ஐ மட்டும் UPDATE செய்ய வேண்டியதிருக்கும்.

அல்லது நான் இலாபத்தில் இருக்கும் நாட்களில் மட்டும் UPDATE செய்ய வேண்டியது இருக்கும் ..
இதுவும்  போக TRADE BOOK ஐ மாலையில் FB இல்  UPDATE செய்ய வேண்டுமே,,,எனவே இழப்பில்லாமல் TRADE செய்து காட்ட வேண்டுமே,,, என்ற பயத்துடன் TRADE செய்யும் போது கவனம் சிதறும்..
முன்னேரே சொல்லி இருக்கிறேன் COMMITMENT வைத்து கொண்டு TRADE  செய்தால் ஜெயிக்க முடியாது என்று...

இந்த தொழில் என்பது மிகவும் இரசித்து அனுபவித்து செய்யவேண்டிய தொழில்,,,அப்படி செய்தால் மட்டுமே இலாபம் சம்பாதிக்க முடியும்..

இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இதில்..

உங்களில் பலருக்கு இந்த எண்ணங்கள் இருக்கலாம்...TRADE BOOK UPDATE செய்பவர்கள்  திறமைசாலிகள் அவர்களிடம் பயிற்சி எடுத்தால் ,TIPS வாங்கினால் ஜெயித்து விடலாம் என்று...கண்டிப்பாக அது தோல்வியையே தரும்..ஏன் ???

FB இல் TRADE BOOK UPDATE செய்யும் அந்த TIPS தரும் அல்லது பயிற்சி வகுப்பு எடுக்கும் COMPANY (அல்லது நண்பர்கள்) உண்மையிலேயே நல்ல விதமாக TRADE செய்து அதை UPDATE செய்திருக்கலாம்...

அதே போல் நீங்கள் TRADE செய்ய முடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான்  சொல்லுவேன் ... ஏனெனில் அவர்கள் இந்த தொழிலில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் பல ஆண்டுகளாக இந்த தொழிலில் பல இழப்பு,பல இலாபம் செய்தவர்கள்..
அதுவும் போக மிக முக்கியமான ஒரு விஷயம்..

அவர்களது முதலீடு என்பது அவர்களின் TRADING இல் கிடைத்த இலாப பணமாக,அல்லது TIPS கொடுத்ததில் கிடைத்த ,பயிற்சி வகுப்பு எடுத்ததில் கிடைத்த உபரி பணமாக  இருக்கலாம்...

உபரி பணத்தில் வணிகம் செய்யும் போது தோல்விக்கான வாய்ப்பு மிக குறைவு என்பது உங்களுக்கே தெரியும்..
ஆனால் உங்களின் முதலீடு நீங்கள் வேறு எங்கோ கஷ்டடபட்டு சம்பாதித்த பணம் அல்லது எங்கோ கடன் வாங்கி கொண்டு வந்த பணம்..
..
உதாரணமாக சொன்னால் நீங்கள் ஒரு இலட்சம் ரூபாய் பணம் கடனாக வட்டிக்கு வாங்கி வந்து உட்கார்ந்து TRADE செய்யும் போது எத்தனை SL போட வேண்டியதிருக்கும்,எவ்வளவு TENSION உடன் TRADE செய்ய வேண்டியதிருக்கும்  அதையே நீங்கள் எங்கோ செல்லும் வழியில் ஒரு பையில் ஒரு இலட்சம் ரூபாய் கிழே கண்டெடுத்து அதை வைத்து TRADING செய்யும் போது எவ்வளவு தைரியமாக TRADE செய்ய முடியும்..??/

இது தான் வித்தியாசம் TRADE BOOK UPDATE செய்யும் COMPANY களின் TRADE க்கும் உங்கள் TRADE க்கும் உள்ள வித்தியாசம்...

அதுவும் போக எனக்கு தொழில் வகுப்பெடுப்பது அல்ல...எனக்கு தொழில் TRADING மட்டுமே...இந்த சந்தையில் OPERATORS பொது மக்களின் பணத்தை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்த பின் .இது பற்றி நமது நண்பர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே ..என்று தான் எழுத ஆரம்பித்தேன்...அதன் பின் சில நண்பர்கள் கேட்டதினால் அவர்களுக்கு  தான் வகுப்பு எடுத்தேன்... இரண்டாவது வகுப்பு எடுத்து விட்டு அதை UPDATE செய்யும் போது ஒரு நண்பர் CHATING இல் கேட்டார் WHY YOU TAKEN  SECRECT CLASS என்று ????அதனால் தான் அடுத்த CLASS பற்றி  FB இல் அப்டேட் செய்தேன்..மற்றபடி நான் வகுப்பு எடுக்கிறேன் என்னிடம் கலந்து கொள்ளுங்கள் என்றெல்லாம் விளம்பரம் கொடுத்து வகுப்பெடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை ....ஏனெனில் வகுப்பெடுப்பது எனது தொழில் அல்ல நண்பரே..

உங்களில் பலருக்கும் TRADE BOOK நன்றாக இருந்தால் அவர்களிடம் பயிற்சி எடுக்கலாம் என்ற எண்ணம் இருக்கும்..

ஒன்றை கவனித்து கொள்ளுங்கள்

INDORE இல் இருக்கும் ஒரு நிறுவனம் இது போல பல இலாபம் ஈட்டும் TRADE BOOK களை அப்டேட் செய்து TIPS கொடுத்து வருகிறது...ஒரு மாதம் டிப்ஸ் க்கு அவர்களுக்கு கட்டணம் 22000 ரூபாய் ..ஆனால் உண்மையில் நடப்பது என்ன என்பது அந்த தொழிலில்  இருந்த எனக்கு தெரியும்..

உதாரணமாக அவர்கள் என்ன செய்வார்கள் என்றால்,NIFTY FUTURE ஒரு அக்கௌண்டில் 1000 SHARE வாங்குவார்கள் .. இன்னொரு அக்கௌண்டில் 1000 SHARE விற்று விடுவார்கள் ..NIFTY எப்படியும் ஏதோ ஒரு பக்கம் போகும் ஒரு 50 அல்லது 60 புள்ளிகள் ஏதோ ஒரு பக்கம் போனவுடன் வாங்கியதை விற்று விடுவார்கள் விற்றதை வாங்கி  விடுவார்கள் ..அதன் பின் கணக்கிட்டு பார்த்தால் ஒரு அக்கௌன்ட் 50000 ரூபாய் இலாபம் காண்பிக்கும் ஒரு அக்கௌன்ட் 50000 ரூபாய் இழப்பு காண்பிக்கும்..இதில் எந்த அக்கௌன்ட் இலாபம் காண்பிக்கிறதோ அந்த அக்கௌன்ட் ID மட்டும் மறைத்து விட்டு வெளியிடுவார்கள் ..அவர்களை பொறுத்த வரை அவர்களுக்கு BROKERGE மட்டும் தான் நட்டம் ஆனால் TIPS க்குக்காக இந்த TRADE BOOK பார்த்து ஒரு 10 நபர்கள் அவர்களுக்கு கிடைத்தால் கூட 220000 ரூபாய் இலாபம்..இது போன்ற மோசடிகள் நிறைய நடக்கின்றன...

TRADE BOOK நன்றாக இருந்தால் அவர்களிடம் பயிற்சி எடுக்கலாம்,TIPS வாங்கலாம் என்ற எண்ணம் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள்...

திரும்பவும் சொல்லுகிறேன்
நான் இந்த FB யில் எந்த ஒரு இடத்திலும் என்னிடம் பயிற்சிக்கு வந்தால் இலாபம் சம்பாதிக்க முடியும் என்று சொன்னது கிடையாது..இழப்பில்லாமல் இருப்பார்கள் என்று மட்டும் தான் கூறியுள்ளேன்..திரும்ப எனது பதிவுகளை கவனித்து படித்து பார்க்கவும்..

நான் இது வரை கொடுத்துள்ளது நட்ட படாமல் தொழில் செய்வதற்கான பயிற்சியும்,இலாபம் தரும் வாய்ப்புகளை கண்டறியும் பயிற்சியும் மட்டும் தான் ..நீங்கள் இதை குறைந்தது ஒரு 2 மாதங்களாவது TRAINING செய்தால் தான் முழுமையாக இலாபம் சம்பாதிக்க முடியும்..

இந்த பயிற்சிக்கு பின் இலாபம் சம்பாதிப்பது,உங்கள் கையில் தான் உள்ளது..

வகுப்பெடுப்பதை  எனது முதன்மையான தொழிலாக செய்யும் போது கண்டிப்பாக எனது 3 ACCOUNT களின் TRADE BOOK களையும் UPDATE செய்கிறேன்..அப்போது உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன் ..அப்போது வந்து எனது வகுப்பில் கலந்து கொள்ளவும் .....

என்னிடம் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள நான் யாரையும் அழைக்கவில்லை..என்னிடம் பயிற்சி பெற  விரும்பும் நண்பர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்  ..அதனால் இது போன்ற கேள்விகளை தவிர்க்கவும்..இந்த விளக்கத்தை TYPE செய்யும் நேரத்தில்..இன்னும் ஒரு இரண்டு TRADING RULES  TYPE  செய்திருந்தால் யாராவது  இன்னும் நிறைய நண்பர்களுக்கு TRADING செய்ய உதவியாய் இருந்திருக்கும்...