Wednesday, 17 February 2016

சந்தையை முடிவு செய்ய நீங்கள் யார்??



பங்கு சந்தையில் வணிகம் செய்யும் நண்பர்களுக்கு,
அதிக பணி  சுமை காரணமாக அதிகம் சந்தை பற்றி தமிழில் முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..
இந்த பதிவின் முக்கிய காரணம்,
கடந்த ஒரு வாரத்தில் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு  பேசிய நண்பர்கள்....
உங்களை போன்ற சில FB நண்பர்கள் அவர்கள் ..
அந்த நண்பர்களின் கடந்த வார மொத்த இழப்பு சுமார் 9 இலட்சத்திற்கும் மேல்..

இவ்வளவிற்கும் இந்த சந்தைக்கு அவர்கள் புதியவர்களா என்றால் அப்படி ஏதும் இல்லை..அவர்கள் அனைவரும் 1--2 ஆண்டுகளாக பங்கு சந்தையில் வணிகம் செய்து வருபர்கள் தாம்..
அப்படி இருந்து எப்படி இவ்வளவு இழப்பு.???

ஒருவர் சொல்லுகிறார் சந்தை நன்றாக இறங்கி விட்டது..எனது TECHNICAL  படி சந்தை இந்த இடத்தில் சந்தை திரும்பி விடும் ,இனி  ஏறிவிடும் என்று நினைத்தேன் அதனால் CALL OPTION வாங்கினேன் என்று

இன்னொரு நண்பர்  சொல்லுகிறார் TATASTEEL RESULT மோசமாக இருந்தது அதனால் SHORT  போனேன்..ஆனால் ஏறிவிட்டது என்று..

இன்னொரு நண்பர் சொல்லுகிறார்..இறங்க இறங்க AVERAGE செய்து வாங்கினேன் எல்லாம் ஒரு கட்டதில் (6950 கீழ் )AUTO SQUARE UP ஆகிவிட்டது என்று..

இங்கே இவர்கள் சொல்லும் அனைத்தும் முழுக்க முழுக்க தானாகவே யுகம் செய்து செய்த வணிகம்..
அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது...
இழப்பு அவர்களது முழு முதலீட்டு தொகையும்...
இது என்னிடம் பேசிய நண்பர்களின் கதை..
இது போல இன்னும் வெளியே சொல்ல முடியாமல் கடந்த வாரம் பணத்தை இழந்தவர்கள் எத்தனை பேர்..???

திரும்பவும் சொல்லுகிறேன்..
இந்த சந்தை முழுவதும் திட்டமிடப்பட்ட சந்தை ..
கடந்த வியாழன் அன்று NIFTY - 265 புள்ளிகள் இறங்கியது..
அதற்கு இங்கே TV இல்  நிறைய காரணங்கள் சொன்னார்கள்..
என்னிடம் கேட்டால் வியாழ கிழமை இறக்கம் புதன் அன்றே முடிவு செய்ய பட்டது  ஓன்று.
அதை புதன் அன்றே நான் UPDATE செய்தேன் நாளை "BLACK THURSDAY " என்று.

இப்படி திட்டமிட்டு நடக்கும் சந்தையில்  உங்கள் TECHNICAL கள் ,உங்கள் இன்டிகேடேர்கள் எல்லாம் சந்தைக்கு உதவுவது ஒரு 30% மட்டும் தான் ..
இதை தாண்டி இங்கே பல விஷயங்கள் இங்கே நடக்கின்றன...

முழுக்க முழுக்க இந்த சந்தை பணம் வைத்து விளையாடும் பணக்காரர்களால் மட்டுமே இயக்கபடுகின்றது..
ஒரு நாளில் 9.15 முதல் 3.30 க்குள் (345 நிமிடத்தில்) 1.50 இலட்சம் கோடிக்கு மேல் வணிகம் நடக்கிறது.
தோரயமாக இங்கே ஒருநிமிட வியாபாரம் 400 கோடி ரூபாய்,ஒரு நொடிக்கு வியாபாரம் 6.60 கோடி ரூபாய் நடக்கிறது..

இந்த இடத்தில் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் வந்து பணத்தை இழந்து கொண்டிருக்கும் நண்பர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது...

திரும்பவும் சொல்லுகிறேன்..உங்கள் அக்கௌண்டில் 20000-50000 வைத்து கொண்டு உங்களது முந்தைய இலட்சகணக்கிலான இழப்பை  எல்லாம் RECOVER செய்ய நினைத்திர்கள் என்றால் அதை விட பெரிய முட்டாள் தனம் ஏதும் இல்லை..
இந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் திறமைக்கு(?) ஏற்ப கரைந்து காணாமல் போகும்..
அதற்காக பணம் நிறைய கொண்டு வர வேண்டுமா என்றால்  அதுவும் இல்லை..
இதுவரை இழந்ததை நினைத்து கொண்டே வியாபாரத்திற்கு வராமல்,
இன்று தான் புதியதாக வருவது போல  கற்று கொள்ளுங்கள்..கற்று கொள்ளும் வரை பணத்தை சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்..
கற்று கொண்ட பின் கற்று கொண்டது சரிதானா என்று உறுதி படுத்தி கொள்ள கொஞ்சம் TRADE செய்து பாருங்கள் ..அதில் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை எதனால் இந்த இழப்பு வந்தது என்று யோசியுங்கள் தவறை திருத்துங்கள்..
அதன் பின் நம்பிக்கை வந்தவுடன்
அந்த பணத்தை(20000-50000) கொண்டு TRADE செய்ய ஆரம்பித்தால் உங்கள் இழப்பை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து விடலாம்.

இந்த சந்தையில் சம்பாதிக்க வேண்டும்  என்றால்  அதற்கு சந்தையை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்..

TATASTEEL 2500 கோடி நஷ்ட கணக்கு காண்பித்தான், அதனால் அந்த SHARE இறங்கும் என்று SHORT போவீர்கள் ..
நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்,அது பெரிய இழப்பு என்று .???
இப்போதைய பொருளாதார சூழலில் சந்தை TATASTEEL க்கு  எதிர்பார்த்தது 6000 கோடி இழப்பு ஆனால் இங்கு 2500 கோடி தான் இழப்பு எனவே COMPANY நன்றாக உள்ளது என்று இந்த SHARE விலையை ஏற்றுவார்கள்..

இதுவே அடுத்த 3 மாதங்களுக்கு பின் அதே TATASTEEL 4000 கோடி இலாபம் சம்பாதிக்கும் அப்போது (2500 கோடி நஷ்டத்தில் இருக்கும் போதே  ஏறிய ஷேர் இது இப்போது 4000 கோடி இலாபம் என்றால் மேலே போகும் என்று  )வாங்குவீர்கள் ஆனால் அன்று அந்த பங்கு இறங்கும் காரணம் என்னவென்றால் இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு சந்தை எதிர்பார்த்த இலாபம் 8000 கோடி ஆனால்  இது 4000 கோடி இலாபம் கொடுத்துள்ளது எனவே இது மோசமான SHARE என்று காரணம் வரும்...

இது போல இங்கே எல்லாமே திட்டம் போட்டு தான்  நடகின்றது..
இது எனது ZFORMULA NIFTY VIEW தினசரி தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும்.சந்தையின் ஒவ்வொரு அசைவும் காரணம் இல்லாமல் நடைபெறவில்லை..
அதை புரிந்து கொண்டு TRADE செய்பவர்கள் மட்டுமே இலாபம் சம்பாதிக்கவும் முதலீட்டை காப்பாற்றி கொள்ளவும்  முடியும்.

இப்போது LIVE TECHNICAL CHART கள் சில வெப்சைட்களில் இலவசமாகவே கிடைகின்றன..சில நிறுவனங்கள் மாதம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர் ..
.
இதை வாங்கி  வைத்து கொண்டு CANDLE CHART OPEN  செய்து வைத்து கொண்டு ஒரு 6 மாதங்கள் அதை WATCH செய்து பாருங்கள் ..சந்தை உங்களுக்கு முழுமையாக புரியும்..
இங்கே TECHNICAL என்பது ஒரு வரைபடம் போல தான்..
நீங்கள் எந்த இன்டிகேடேர்கள் பற்றியும் கற்று கொள்ள வேண்டாம்..
அதனுடன் எந்த கோடும் வரைந்து நீங்கள் பார்க்க வேண்டாம்...

நீங்கள் இங்கே படிக்க வேண்டியது CANDLES,CANDLES ,CANDLES  மட்டும் தான் ..
CANDLES படியுங்கள் இதை தாண்டிய விஷயம் இங்கே ஏதும் இல்லை...
CANDLES பெயரை மனப்பாடம் செய்து ஒன்றும் ஆகபோவதில்லை..
என்னிடம் கேட்டால் எனக்கு  இரண்டு CANDLE களின் பெயர்கள் கூட எனக்கு சரியாக தெரியாது..
ஆனால் எந்த CANDLE எப்படி உருவானால் அடுத்து என்ன நடக்க போகிறது,அடுத்து எந்த CANDLE வர போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்..
அதை கற்று கொள்ளுங்கள்  முதலில் நீங்கள் சந்தையில் 30% தோற்பது தவிர்க்க படும்..அதன் பின் சந்தையை இயக்குபர்கள் ( OPERATORS ) பற்றி அறிந்து கொள்ளலாம்....

இழப்பதை நிறுத்த முயற்சி செய்யுங்கள் ..அதன் பின் சம்பாதித்து கொள்ளலாம்...

இலாபத்தை இழந்தால் சம்பாதித்து கொள்ளலாம்..
முதலீட்டை இழந்தால்..???
இங்கே போக போவது முதலீடு மட்டும் அல்ல சந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் மொத்த நம்பிக்கையும் தான் .
எனவே இழப்பை தடுக்க கற்று கொள்ளுங்கள்...
இலாபம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம்...

மற்ற தொழிலில் இழப்பு ஏற்பட்டால் நமக்கு இந்த தொழில் தெரியவில்லை என்று வேறு தொழிலுக்கு சென்று விடுவார்கள்.
ஆனால் இந்த தொழிலில் மட்டும் தான் எவ்வளவு இழப்பு வந்தாலும்,விட்டு விலகி செல்லாமல் ,முழுமையாக கற்று கொள்ளாமலும்,திரும்ப திரும்ப கொண்டு வந்து இழந்து கொண்டிருக்கிறார்கள்..

முயற்சி  ஏதும் இல்லாமல் தொழில் செய்ய நினைத்தால் அது இழப்பை மட்டுமே தரும்..

எதையும் கற்று கொள்ளாமல்,கற்று கொள்ள முயற்சி செய்யாமல் இருக்கும் நண்பர்களுக்கு எனது ஒரே ஒரு அறிவுரை

உங்கள் TRADING  ACCOUNT  இல் இருக்கும் பணத்திற்கு ஏதேனும் நீண்ட காலத்திற்கு POSITIONAL ஆக நல்ல STOCK வாங்கி வைத்து விட்டு வேறு நீங்கள் தொழிலுக்கு சென்று விடுங்கள்..

அல்லது அந்த பணத்தை எடுத்து உங்கள் குடும்பத்தினருக்கு செலவழியுங்கள்..

நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் அதை இந்த சந்தையில் யாரோ ஒரு பணக்காரன் அனுபவிப்பதற்கு பதில்,
 உங்கள் குடும்பதினராவது ஆனந்தமாக அனுபவிக்கட்டும்...

தோழமையுடன்
ZFORMULA RAVIKUMAR

Tuesday, 17 November 2015

Nifty Future Fancy Numbers..



Hai Friends,
As A Diwali Gift And Going to Tell About Here Simple Trading Secrets..Use This Tricks And Share To Your Friends...

FANCY NUMBER TRICKS ...
That is In Nifty 20-80 (+-7 Points) is a big Support And Resistance..
Wherever Nifty Goes (2500,6000,12300,7800,8300)
(2520,2580,6020,6080,12320,12380,7820,7880,8320,8380))(8313-8320-8327------8373-8380--8387)
Last Two Numbers (20-80)Give a Big Support and resistance So Trade Carefully...@ this Place..





In Tamil...

வணக்கம் எனது பங்குசந்தையில் TRADING செய்து வரும் FB நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு சின்ன TRADING METHOD கற்று தர போகிறேன்..
FANCY NUMBER TRICKS ...
NIFTY FUTURE 
இல் TRADE செய்யும் அனைவருக்கும் இந்த TRICK உதவும்..
உங்கள் நண்பர்களும் பயன் பெற இதை அவர்களுக்கு SHARE செய்யவும்...
NIFTY FUTURE 
 பொறுத்த வரை 20-80 (+ OR - 7 POINTS ) என்ற இரண்டு 
LEVEL கள் பெரிய SUPPORT செய்யும்...

NIFTY FUTURE 2500 
இல் TRADE ஆனாலும் 6100 இல் TRADE ஆனாலும் 10500 இல் TRADE ஆனாலும் .. 7500 இல் TRADE ஆனாலும்...சரி 20-80 அதாவது ..2520,2580,6120,6180,10520,10580,7520,7580 இந்த 2 (கடைசி இரண்டு NUMBER களும் மிக பெரிய SUPPORT மற்றும் RESISTANCE ஆக  செயல்படும்..இதற்கு நீங்கள் எந்த CHART ஐயும் பார்க்க வேண்டியதில்லை...NIFTY மேலே செல்லும் போது EXAMPLE 8280 ,8320(+-7 POINTS ) வரும் போது கொஞ்சம் மேலே போக தடுமாறும்...அது போல கிழே வரும் போதும்   EXAMPLE 8180.8120(+-7 POINTS )அருகே வரும் போது அதற்கு கீழே இறங்க கொஞ்சம் தயங்கும்...இந்த இரண்டு LEVEL களும் பெரிய SUPPORTRESISTANCE ஆக செயல்படும் ....இந்த இடங்களில் கொஞ்சம்  கவனமாக இருந்தால் உங்கள் இலாபம் இன்னும் அதிகபடலாம் ..
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு
தோழமையுடன்
Zformula Ravi

களும் மிக பெரிய SUPPORT மற்றும் RESISTANCE ஆக செயல்படும்..இதற்கு நீங்கள் எந்த CHART ஐயும் பார்க்க வேண்டியதில்லை...NIFTY மேலே செல்லும் போது EXAMPLE 8280 ,8320(+-7 POINTS ) வரும் போது கொஞ்சம் மேலே போக தடுமாறும்...அது போல கிழே வரும் போதும் EXAMPLE 8180.8120(+-7 POINTS )அருகே வரும் போது அதற்கு கீழே இறங்க கொஞ்சம் தயங்கும்...இந்த இரண்டு LEVEL களும் பெரிய SUPPORT RESISTANCE ஆக செயல்படும் ....இந்த இடங்களில் கொஞ்சம் கவனமாக இருந்தால் உங்கள் இலாபம் இன்னும் அதிகபடலாம் ..
இங்கே உதாரணமாக Nifty Future கடந்த 2 மாதங்களாக TRADE ஆன விலைகள் இங்கே. உங்கள் பார்வைக்கு

தோழமையுடன்
Zformula Ravi


Thursday, 22 October 2015

NSE FUTURE இல் LOT SIZE அதிக படுத்தபட போகிறது

NSE FUTURE இல் LOT SIZE  அதிக படுத்தபட போகிறது ..இது RETAIL TRADER க்கு நல்லதா கெட்டதா ???

NSE இல் வரும் நவம்பர் முதல் எல்லா LOT SIZE களும் அதிகபடுத்த படுகிறது ..என்னை பொறுத்த வரை இது RETAIL TRADER களுக்கு மிகவும் பாதிப்பான ஒரு விஷயம்..எப்படியெனில்.


இதுவரை 50000 ரூபாய் இருந்தால் ஒரு FUTURE LOT LONG அல்லது SHORT எடுத்து POSITIONAL வைத்து வணிகம் செய்து வந்த வணிகர்கள் இனி 125000 அல்லது 150000 இருந்தால் மட்டுமே FUTURE இல் POSITION  வைக்க முடியும்.. FUTURE இல் TRADE செய்த எவரும் திரும்ப EQUITY யில் TRADE செய்ய விரும்ப மாட்டார்கள் இனி அவர்கள் கவனம் OPTION பக்கம் திரும்பும்...CALL PUT OPTION களை இருக்கும் பணத்திற்கு தகுந்தார் போல வாங்கி வைப்பார்கள்..


(உதாரணமாக NIFTY ஒரு LOT(25) 20000 MARGIN கொண்டு  TRADE செய்த நபர் இனி ஒரு LOT (75) TRADE செய்ய 60000 வேண்டும்.. அவர் மேற்கொண்டு கடன் வாங்கி  இந்த வணிகத்திற்கு வர போவதில்லை ..இனி அவர் செய்வது இருக்கும் 20000 ரூபாய்க்கு NIFTY CALL  அல்லது PUT OPTION  வாங்கி வைத்து TRADE செய்ய முயற்சி செய்வார் .)



இங்கே OPTION TRADING இல் என்ன நடக்கிறது என்பது OPTION இல் TRADE செய்யும் எல்லோருக்கும் தெரியும்..

முழுக்க முழுக்க OPTION MELTING மட்டுமே பெரும்பாலும் நடக்கிறது..
இங்கே புதிதாக வரபோகும் அந்த நண்பர்களின் பணம் கண்ணெதிரே கரைய போகிறது..

இது என்னுடைய கருத்து மட்டுமே..

கவனமாக TRADE செய்யுங்கள்...


From November Onwards NSE is Going to Increase The Futures and Options Lot Size.

For Retail Trader This is Good News??? Or Bad News???

In my view This is The Bad News For Retail Traders.

Because,

Nowadays in Nifty You can Buy One Lot(25) In 20000 Rupees For Positional Trade ..
After November You can Buy or Sell One lot(75) In 60000 Rupees..
(Lot size And Margin Money are Going To Increase for All The Futures)
Many of the person can think The Lot size is Going To increase is the Good news.
But The reality is This Good news Only for The Big Traders...

Many of the Retail Traders are Having Below 30000 to 50000 as Their Capital..

After November This Retail Traders Can not able To Trade Futures..
So They Change Their Trades in Option Side.
But you can Know What is Happening in Option Trade..Maximum Options are In Melting..
Now Maximum of the Retail Traders Will Buy The Options As they Do in the Future Trades...
Like Option Melting Their Capital Also Going to Melt.
This is Only My View... Trade Carefully..


Friday, 2 October 2015

கவனமாக இருங்கள் FACEBOOK அனலிஸ்ட்களிடம்...
நீண்ட நாளைக்கு பின் இந்த பதிவை எழுதுகிறேன்...

நேற்று மதியம் ஒரு புதிய  நண்பர் தொலைபேசியில் பேசி கொண்டிருந்தார்...
அவர் பேசிய விஷயம்... 6 மாதத்திற்கு  முன் பங்கு சந்தைக்கு வந்த அவர் FB இல் பங்குசந்தை பற்றி CALLS அப்டேட் செய்துவரும் நண்பர்கள் பலருடன் நட்பு வைத்துள்ளார்..

ஒருவர் சொல்லுவது சில நேரங்களில் சரியாக இருக்கிறது ..அதை நம்பி நாம் TRADING இல் இறங்கினால் நமக்கு நட்டம் வருகிறது...என்று கூறினார்.
அதில் பலரையும் FOLLOW செய்து 2.30 இலட்சம் ரூபாய் இழந்து விட்டதாகவும்,கூறி வருத்தப்பட்டார் ..
அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவு,அவர் போல் ஏமாந்து கொண்டிருக்கும் பலருக்காகவும் இந்த பதிவு...

FB இங்கே நிறைய வகையான அனலிஸ்ட் கள் உண்டு..அவர்களில் சிலவகை அனலிஸ்ட் கள் பற்றி மட்டும் சுருக்கமாக இங்கே...

1.ஜோதிடரா இல்லை அனலிஸ்ட் ஆ ???

FB அனலிஸ்ட் களில் மிக முக்கியமான முதல் வகை..இவர்கள் குறி (ஆய்வினை ) சொல்லும் விதம் வித்தியசமாக இருக்கும் ..அதாவது TARGET சொல்லுவது உதாரணமாக NIFTY தற்போது 7950 இல் உள்ளது இவர்கள் (BULL SIDE ஆக இருந்தால் )சொல்லும் டார்கெட் 8100 ஆக இருக்கும் SL ஏதும் சொல்ல மாட்டார்கள் ...     BEAR SIDE ஆக இருந்தால் 7800 ஆக இருக்கும் ,,

8100 போகும் என்று சொன்ன நபர்கள் NIFTY 7950 இல் இருந்து 7700 வரும் அப்போது ONLINE இல் இருக்க மாட்டார்கள் ..திரும்ப 7950 வரும் போது வேறு சில பதிவுகள் கொடுத்து கொண்டு இருப்பார்கள் ..8100 வந்தவுடன் நான் சொன்னது நடந்துவிட்டது..மார்க்கெட் 8100 என்று பெருமிதம் கொள்வார்கள்...(250 புள்ளிகள் இறங்கி விட்டு 250 புள்ளிகள் திரும்ப ஏறி அதன் பின் 150புள்ளிகள் ஏறி இருக்கிறது ... )

இதில் என்ன ஆய்வு இருக்கிறது ? ..
7950 இல் இருக்கும் NIFTY இவர் 8100 போகும் என்று சொல்லும் போது ஒரு 50 புள்ளிகள் இறங்கி திரும்ப 150 புள்ளிகள் மேலே போனால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது...
50 POINT DOWN  150 POINT UP  ..
250 POINT DOWN 150 POINT UP ...
இதில் எது அனலிஸ்ட் சொன்னது எது கற்பனை வாதிகள் சொன்னது என்பதை கவனித்து கொள்ளலாம்..

2 ..ONE SIDE அனலிஸ்ட் ..

இந்த வகை அனலிஸ்ட் கள் மார்க்கெட் ஆரம்பித்தவுடன்..NIFTY BUY TARGET 50 POINT SL 40 POINT என அப்டேட் செய்வார்கள் (BUY  @ 7950 SL 7915 TARGET 7980) இதே போல் SELLING SIDE உம்
இவர்கள் கணக்கீடு மிக எளிதான வகை ..நிபிட்டி எப்படியும் 50-70 POINT ஒருநாள் TRADE ஆகும் ..மாதம் 20 TRADING நாளில் 10 நாள் இந்த மாதிரி TRADE கள் SUCCESS ஆகும்..அப்போது TARGET REACHED என்று COMMENT போடுவார்கள்... ஒரு 10 நாள் FAILURE ஆகும் அப்போது அந்த CALL கொடுத்து பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள்...
பெரும்பாலும் இவர்கள் BUY SIDE மட்டுமோ  SELL SIDE மட்டுமோ தான் இருப்பார்கள்...

3... LINE  ANALYST

இந்த வகை அனலிஸ்ட் கள் ஏதாவது CHART இல் கோடுகள் வரைந்து UPDATE கொண்டே இருப்பார்கள் என்ன கோடுகள் எதற்கு இத்தனை கோடுகள் ?இது எதையுமே புரிந்து கொள்ள நம்மால் (அவர்களாலும்)தான்  முடியாது...

இவர்களும் மேலே 1,2 வது POINT களில் சொன்னது போல ஒரு விஷயம் நடக்கும் போது மட்டும் நான் சொன்னது நடந்து விட்டது என்று கருத்து சொல்வார்கள்.....

4.... MARKET VIEW ANALYST

A . BEFORE MARKET OPENING
இந்த வகை அனலிஸ்ட் கள் காலையில் மார்க்கெட் ஆரம்பிக்கும் முன்பு NIFTY மற்றும் சில STOCK களின் PIVOT களை UPDATE செய்வார்கள் ..இவர்கள் சொன்ன PIVOT புள்ளிக்கு இந்த STOCK வரும் போது ...ஆகா நாம சொன்னது நடந்து விட்டது ..என்று பெருமிதம் கொள்வார்கள்..

B . AFTER MARKET OPENING

இந்த வகை அனலிஸ்ட் கள் காலையில் MARKET ஆரம்பித்த பின் அதன் ONE HOUR CANDLE களை கணக்கிட்டு சில VIEW களை சொல்வார்கள் ..(நாங்கள் இந்த வகை தான் எங்களது வெற்றிய 85% மட்டும் தான்  15% நாங்களும் தோற்க தான் செய்கிறோம். )இ ங்கே இவர்களது கணக்கீடும் சில சமயம் பொய்யாகும் ..அப்போது அமைதியாக இருப்பார்கள்..இவர்கள் சொன்னது நடந்தவுடன் ஆகா நான் சொன்னது நடந்து விட்டது என்று தலைகிழாக நிற்பார்கள்(நாங்களும் தான் )...

5.... TRADE BOOK  அனலிஸ்ட்

இந்த வகை அனலிஸ்ட் கள் மாதத்தில் 6-7 நாட்கள் TRADE BOOK UPDATE செய்வார்கள் ..நாங்கள் இன்று சம்பாதித்தோம் என்று 4000  ரூபாய் இலாபத்திற்கு  எல்லாம் TRADE BOOK அப்டேட் செய்வார்கள்...ஆனால் 13 நாள் எந்த BOOK உம் அப்டேட் செய்ய மாட்டார்கள் ..எளிதாக புரிந்து கொள்ளலாம் அந்த நாட்களில் என்ன நடந்திருக்கும் என்று...

இவ்வாறு இன்னும் பல வகை அனலிஸ்ட் கள் இங்கே இருகின்றனர் ....கவனமாக இருங்கள்..உங்கள் பணதிற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு...

கடந்த இரண்டு மாதங்களாக சந்தை பற்றி கட்டுரை ஏதும் எழுத வில்லை..ஒரு சகோதரர் என்ன சார் நீங்க எழுதி ரொம்ப நாளாச்சு சார்  என்று கேட்டு கொண்டே இருந்தார்...அவருக்கும் பதில்  இங்கே..

இரண்டு மாதங்களுக்கு  முன் WHATS UP இல் எனக்கு ஒரு MESSAGE வந்தது..அதில் JUNE 6 ஆம்  தேதி எனது BLOG இல் நான் எழுதிய  OPTION HEADGING பற்றிய ஒரு கட்டுரை .... அதில் இருந்த எனது பெயரை எல்லாம் நீக்கி விட்டு வேறொரு பெயர் சேர்க்க பட்டு  அவர்கள் அலுவலகதிற்கு சென்றால் இது போன்ற முறைப்படி கற்று கொள்ளலாம் ..இலாபம் சம்பாதிக்கலாம் ..என்று PHONE நம்பருடன் ஒரு விளம்பரம்....

நான் எழுதிய கட்டுரையை COPY செய்து பெயர்களை திருத்தம் செய்து அதை எனக்கே அனுப்பிய அவர்களிடம் வகுப்பிற்க்கு வர சொன்ன புத்திசாலியிடம் போன் செய்து சொன்னேன்/. இது எனது கட்டுரை என்று..அவர் சொன்னார்  இது அவருக்கு WHATS UP இல் யாரோ அனுப்பியதாகவும் அதில் உங்கள் பெயர் இல்லை என்றும் வேறொரு பெயர் இருந்தது என்றும்....கட்டுரை நன்றாக இருந்ததால் அந்த பெயரை நீக்கி விட்டு அவர் பெயர் பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதிற்கும் பரப்பியதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டார்..

எனக்கு தெரிந்து 2 பேர் இன்னும் இது போல எத்தனை பெயர் மாற்றம் செய்து ஏமாற்றி கொண்டு இருகிறார்களோ..??

எனது எழுத்துகளை இங்கே TRADER கள்  பயன்படுத்தி கொள்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை >>.ஆனால் அது திருடர்களுக்கு  துணை போவது போல உணர்ந்ததால் எழுதுவதை குறைத்து கொண்டேன்..

நேற்று என்னுடன் பேசிய சகோதரர் சந்தைக்கு புதியவர்..FB இல் உள்ள சில அனலிஸ்ட்களை (?????)  நம்பி நாமும் இந்த தொழிலுக்கு வருவோம் ஏற்ற ஆவலுடன் வந்து 3 இலட்சம் ரூபாய் முதலீட்டை 5 மாதத்தில் 35000 ரூபாயாக மாற்றி இருக்கிறார்..
இன்னமும் அந்த 35000 கொண்டு 3 இலட்சத்தை எடுத்து விடலாம் என்று இன்னொரு FB சொன்னதை நம்பி முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்...அவருக்காகவும் இவரை போன்ற புதியவர்களுக்காகவும் இந்த கட்டுரை (அமைதியாக இருக்க மனசாட்சி ஏற்று கொள்ளவில்லை..இவர்களுக்காக இந்த கட்டுரை எழுதினேன். )...

இங்கே FB இல் இருக்கும் எந்த அனலிஸ்ட் களும் உங்களின் இழப்பிற்கு  பொறுப்பு ஏற்க போவதில்லை ...உங்கள் பணத்திற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு ..நீங்கள் இங்கே இழக்கும் பணத்திற்கு நீங்களும் உங்கள் மனைவியும் உங்கள்  குழந்தைகளுமே துன்பத்தை அனுபவிக்க போகிறிர்கள்..

எவரையும்  (எங்களையுமே ) நம்பாதீர்கள்..

நீங்கள் கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள் ...யாரிடமும் போய் கற்று கொள்ள வேண்டாம் சந்தையில் அமைதியாக ஒரு 6 மாதம் WATCH செய்தாலே போதும் (TRADE செய்ய கூடாது )உங்களுக்கு சந்தை பற்றிய புரிதல் ஏற்படும் ..அந்த அனுபவத்தினை சில மாதங்கள் பயிற்சி செய்யுங்கள் ..அது இலாபம் செய்யும் வழியை உங்களுக்கு கட்டும் ..

3 வருடம் COMMERCE (B .COM )படித்தால் தான் ஒரு அலுவலகத்தில் கணக்கு எழுதும் வேலை மாதம் 15000 ரூபாய் சம்பளத்திற்கு கிடைக்கும் .ஆனால் இங்கே இந்த சந்தைக்கு வந்து 2 நாளில் கோடிஸ்வர கனவுடன் TRADE செய்ய தொடங்குகிறோம் ..இருப்பதை இழந்து விட்டு இது சூதாட்டம் என்று புலம்புகிறோம்..சூதாட்டம் ஆகவே இருக்கட்டுமே அந்த ஆட்டதில் கூட ஒருவன் இழப்பதை இன்னொருவன் பெறுகிறான்...நீங்கள் ஏன் பெறுபவனாக இருக்க முயற்சி செய்ய கூடாது..???

அனலிஸ்ட் கள் வெற்றியை தரபோவதில்லை ,
உங்களுக்கு TIPS கொடுப்பவர் வெற்றியை தரப்பவதில்லை
பயிற்சி வகுப்புகள் வெற்றியை தராது ..

பயிற்சி மட்டுமே வெற்றியை தரும் ...
பயிற்சி செய்யுங்கள்
அதன் பின் TRADE செய்ய வாருங்கள் ..
வெற்றி உங்களுக்கே...

தோழமையுடன்
Zformula Ravi...

Saturday, 8 August 2015

மதுரை கலந்துரையாடல் வகுப்பு..

உயர்திரு : MR.GANASKANTHAN  அவர்கள்,  MADURAI COMMODITY TRADERS AND WELFARE ASSOCIATION..  இன் நிறுவனர்.. உயர்திரு RAM CHANDRASEKAR  அவர்கள் இந்த ASSOCIATION  இன் துணை தலைவர்... 

இன்று நான் சந்தித்த மிக அற்புதமான மனிதர்கள் ..இவர்களை பற்றி நான் இங்கு குறிப்பிட காரணம்இங்கே விளக்கமாக ..

இவர்கள் இந்த ASSOCIATION துவங்கியது  TRADER ஆக ONLINE தொழிலுக்கு வரும் இந்த மதுரை பகுதியை சேர்ந்த நண்பர்கள், தொழிலை கற்று கொள்ளவேண்டும்என்பதற்காக ,அனைவரும் கலந்து கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக,புதிதாக வரும் அனைவரும் தொழில்  கற்று கொள்ள வேண்டும் என்பதற்காக, ,அவர்களையும் கைபிடித்து அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக,   

மதுரையின் மைய பகுதியில் 14000 ரூபாய் (மின்கட்டணம் சேர்த்து ) வாடகையில் ஒரு பெரிய TRADING அறை உருவாக்கி உள்ளனர் ..
இந்த அறையின் வாடகை முழுவதும் இந்த நிறுவனர் தமது சொந்த பணத்தில் செலுத்தி வருகின்றார் ..இங்கே தினசரி 10 நண்பர்கள் வரை வந்து அவர்கள் LAPTOP கொண்டு வந்து வைத்து கொண்டு தங்களுக்குள் கலந்துரையாடி,TRADING முடிவுகளை எடுத்து இலாபம் ஈட்டி வருகின்றனர் ...

இந்த அறையின் வாடகை செலவுக்காக இங்கு வரும் நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சம் பணம் செலுத்தி வாடகையை பகிர்ந்து கொள்வோம் என்று சொன்ன பொது இதன் நிறுவனர் உயர் திரு MR.GANASKANTHAN அவர்கள் பணம் பெற்று கொள்ள மறுத்து விட்டார் ,,
இதுவும் போக இவர்கள் செய்யும் மிக பெரிய ஒரு காரியம்,மார்க்கெட் இல்லாத நாட்களில் சனி ஞாயிறு களில் ஒன்றாக சந்தித்து சந்தை பற்றி தங்களுக்குள் ஒன்றாக விவாதிக்கின்றனர் ,மேலும் இந்த சந்தை பற்றி ஓரளவு விழிப்புணர்வு தரக்கூடிய நண்பர்களை தமிழகம் முழுவதிலிருந்தும் வரவைத்து ,அவர்களுக்கு தங்கும் வசதி செய்து தந்து (நிறுவனரின் சொந்த செலவில் ) இங்கே ASSOCIATION இல் விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் நடத்துகின்றனர்..இங்கு இதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தனியே கட்டணம் ஏதும்  வசுலிப்பதில்லை ,,அவர்களின் ஒரே நோக்கம் TRADER கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும் என்பது மட்டும் தான் ..

இங்கே ஒவ்வொரு வாரமும்  15-20 நண்பர்கள் வாரவாரம் வருகின்றனர்..தினசரி TRADE செய்ய ஒரு 10 நண்பர்கள் வருகின்றனர்..TRADING பற்றிய போதிய விழிப்புணர்வையும் பெற்று வருகின்றனர் ..

இப்போது சொல்லுங்கள் இந்த சேவை செய்து வரும் இவர்கள் அற்புதமான மனிதர்கள் தானே ..

இந்த வார நண்பர்களின் சந்திப்பின் போது என்னை வந்து உரையாற்றும்படி இங்கு உறுப்பினராக உள்ள நண்பர் மதுரை ராஜா அவர்கள் என்னிடம் கேட்டார் ..25-30 பேர் வரக்கூடிய இடத்தில் அவர்கள் முன் பேசும் அளவிற்கு எனக்கு முழுமையாக பேச தெரியாது என்பதால் தவிர்க்க  முயற்சி செய்தேன் ..
அந்த ASSOCIATION பற்றி அது எதற்காக செயல்படுகிறது என்பது பற்றியும்,நண்பர் மதுரை ராஜா கூறியவுடன் நான் ஒப்புக்கொண்டேன் ,இன்று அந்த கலந்துரையாடல் நிகழ்வு அங்கு நடந்தது ..நிறைய நண்பர்கள் வந்திருந்தனர் ..எல்லோரும் மிக அமைதியாக முழு ஒத்துழைப்பு தந்தனர் ..நிறைய என்னுடைய FB நண்பர்களும் வந்திருந்தனர் ..

  எனக்கு இது முதல் சந்திப்பு ஒரு 25-30 பேர் முன்னிலையில் பேசுவது முதன் முறை ..இந்த பதட்டத்தின் காரணமாக நான் பேச வந்த OPTION பற்றிய SUBJET குறைவாகவும் சந்தை விழிப்புணர்வு பற்றிய பேச்சு அதிகமாகவும் இருந்தது  ..ஒரு சில நண்பர்களுக்கு (OPTION பற்றி எதிர்பார்ப்புடன் வந்த)இந்த சந்திப்பு கொஞ்சம் ஏமாற்றத்துடன் முடிந்திருக்கும் என்று எண்ணுகிறேன் .. 
எனவே மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தால் OCTOBER மாதம் இந்த ASSOCIATION க்கு  மீண்டும் உங்களை சந்திக்க வருகிறேன் .,,.அப்போது இன்னும் OPTION பற்றி மீண்டும் உரையாடலாம் நண்பர்களே ,

மதுரை பகுதியை சேர்ந்த TRADER கள் இந்த ASSOCIATION ஐ முழுமையாக பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்கிறேன் ..உங்கள் சந்தை அறிவை வளர்த்து கொள்ள இந்த ASSOCIATION உங்களுக்கு உதவும்.ASSOCIATION நண்பர்களின் தொடர்பு எண்கள் (98425 85593-7200077622)

இதே போன்று  பிறருக்கு உதவவேண்டும் என்ற மனப்பான்மை கொண்ட மனிதர்கள் கிடைப்பது மிக கடினம் ..இப்படி ஒரு சிலர் எல்லா மாவட்டத்திலும் கிடைத்து விட்டால் அது அந்த மாவட்டத்திலுள்ள TRADER களுக்கு மிகப்பெரிய வரபபிரசாதம் .. மதுரை பகுதி TRADER கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள் தான் ... ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஒரு 10 நண்பர்கள் தலைக்கு 1000 ரூபாய் செலுத்தி ஒரு 10000 ரூபாய் மாத வாடகையில் ஒரு அறை அமைத்து ஒன்றிணைந்து TRADE செய்ய ,இது போல்  செய்தால் முதலில் கொஞ்சம்  சிரமம்  இருந்தாலும் நாளடைவில் ஒரு 30 உறுப்பினர்கள் வரை ஒன்றிணைந்து TRADE செய்ய துவங்கும் போது ..செலவுகள் பகிர்ந்து கொள்ள படும் ..ஒரு நபருக்கு ஒரு 500 ரூபாய் மாதம்

வரை செலவுகள் வரலாம்.ஆனால் இது போன்ற  முயற்சி  பல இலட்ச ரூபாய் TRADING இழப்பை தடுக்கும் ..பல இலட்சம் கொடுத்து கற்று கொள்ள நினைக்கும் MARKET அறிவையும் 500-1000 ரூபாயில் வளர்க்கும் ..உங்கள் மாவட்டத்தில் முயற்சி செய்யுங்கள் நண்பர்களே..

இந்த பங்கு  சந்தையிலும் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பது இன்று நான் சந்தித்த  அந்த ASSOCIATION நிறுவனர்,துணை தலைவர் மூலம் உணர்ந்து கொண்டேன்..

அவர்களுக்கு அவர்களின் பணிக்கு என் மனம் நிறைந்த  நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்..

தோழமையுடன் 
ZFORMULA RAVI ..
           

Friday, 24 July 2015

பங்கு சந்தை பயிற்சி வகுப்பு தேவையா ???

இந்த பதிவு பொதுவாக TRADER களிடையே  விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக எழுதப்படும் பதிவு ..இங்கு பயிற்சி வகுப்பு எடுப்பவர்களை பற்றி மிக விரிவாக எழுதினால் அது எனக்கு சாதகமாக நான் எழுதுவதாகவே இருக்கும் ..ஏனென்றால் நான் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறேன்..
எனவே என்னால் முடிந்த அளவு நடுநிலையோடு எழுதி  இருக்கிறேன்  ..ஒருவேளை இது TRAINER கள் சார்பாக இருந்தால் என்னை மன்னிக்கவும்..
உங்களின் மேலான கருத்துகளை கண்டிப்பாக பதிவிடவும்...

ஒரு மளிகை கடை வைக்கவேண்டும் என்றால் கூட ஒரு  வருடம் எங்காவது மளிகை கடையில் வேலை பார்த்தால் மட்டும் தான் கடை நடத்த முடியும்..
அது போல
பயிற்சி என்பது எதுவும் தெரியாமல் ஒரு தொழிலை ஆரம்பிப்பதை விட கொஞ்சம் தெரிந்து கொண்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கலாமே என்று நினைபவர்களுக்கு பயிற்சி உதவும்.. ஆனால் இங்கே பங்கு சந்தையில் (மற்றும் FB )இல் 100 க்கு 200 பயிற்சியாளர்கள் ஏமாற்றுபவர்களாக இருப்பது தான் அடிப்படை பிரச்சனை ..ஒவ்வொரு பயிற்சி வகுப்பிற்கும் சென்று பணத்தை இழந்து ஏமாந்து மனம் நொந்து போனவர்கள் தான் அதிகம் ..

நானும் முன்பு 2007 இல்  3000 ரூபாய் ,900 ரூபாய் செலுத்தி 2 பயிற்சி வகுப்பிற்கு சென்றவன் தான்..அன்று நான் கற்று கொண்ட விஷயம் சிறியது என்றால் கூட இன்று அது எனக்கு பயன்படுகிறது..

பயிற்சி வகுப்பிற்கு சென்று பணத்தை வீணாக்குவதை விட சிலர் அனுபவத்தில் கற்று கொள்ளலாம் என்று சொல்லுவார்கள்..(நானும் கூட இந்த வகையை  சேர்ந்தவன் தான் )..

அனுபவம் மிக பெரிய ஆசான் . உண்மையான வார்த்தைகள் ..
ஆனாலும் அதிலும் சிக்கல்கள் உள்ளது ..

சென்ற வாரம் ஒரு சில நண்பர்களுக்கு  பயிற்சி அளிக்கும் போது  எனக்கு தோன்றியது  ஒன்றே ஓன்று தான் ..

இதே போல் இந்த பங்கு சந்தையின் பள்ளங்களை (இங்கு பள்ளங்கள் தான் அதிகம் ) அன்று யாரோ எனக்கு கற்று தந்திருந்தால்,அன்றே நான் சிறிய இழப்பின் போதே இந்த சந்தையை விட்டு  விலகி ஓடி இருப்பேன்.

அல்லது இந்த பங்கு சந்தை வெற்றி நுணுக்கங்களை,எவரேனும் எனக்கு அன்றே கற்று தந்திருந்தால் இவ்வளவு வருடங்களை இழந்து அதன் பின் புரிந்து கொண்ட சந்தையை அன்றே புரிந்து கொண்டிருப்பேன்..எனது இழப்பினை சிறிதாக்கி கொண்டிருப்பேன் ..

அன்று எனக்கு அந்த பயிற்சி அனுபவம் கிடைக்கவில்லை...

அடுத்ததாக
நல்ல பயிற்சியாளர்கள்  எப்படி இருப்பார்கள் ????

முதலில் எவரும் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ...எல்லோரும் ஏமாற்றுபவர்களாக இருக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது..

எல்லோரும் ஒவ்வொரு FORMULA பின்பற்றுவார்கள் ஒவ்வொரு வகையிலான TRADE முறையை செயல்படுத்துவார்கள் ,,ஒவ்வொரு முறையை கற்று தருவார்கள் ..ஒவ்வொருவருக்கும் ஏதேனும் திறமை இருக்கலாம்..அதை கற்று தருவார்கள்..யாரிடம் இருந்து எது கிடைக்கும் என்று தெரியாது..

நல்லதை தேர்ந்தெடுக்க எனக்கு தெரிந்த ஒரே ஒரு வழி ..நீங்கள் யாரிடம் பயிற்சி பெற விரும்புகிரிர்களோ ? அவரை தொடர்பு கொண்டு பேசும் போது அவரிடம் பயிற்சி பெற்ற அவரது மாணவர்கள் சிலரது எண்களை கேளுங்கள் ...
அந்த எண்கள் மூலம் அவரது மாணவர்களை  தொடர்பு கொண்டு பேசுங்கள் ..

(பயிற்சி கொடுப்பவர் அவரது அலுவலக உதவியாளர்கள்,அவரது நண்பர்கள்  எண்களை கொடுத்து பயிற்சியாளர் பற்றி நல்ல விதமாக சொல்லி ஏமாற்ற வாய்ப்பு உள்ளது) எனவே முடிந்தால் அந்த மாணவர்களிடம் நேரில் சென்று பேசுங்கள் ..பயிற்சிகொடுத்தவர் பற்றி அவரிடம் பயின்ற மாணவர் சொல்லட்டும் அவரிடம் பயின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று அதன் பின் பயிற்சிக்கு செல்லுங்கள் ..இது ஓன்று தான் வழி ..

இன்னும் ஒரு வழி ..அங்கெ பயிற்சிக்கு போய் அவர்கள் சொல்லுவதை முழுமையாக உள்வாங்கி அதில் உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்து கொண்டு தேவை இல்லாததை விட்டு விடுவது .

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்..இங்கே அதிகபட்சம் இருப்பது போலிகள் தான்..எது நல்லது எது கெட்டது என்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் ..தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள்..தவறுதலாக தேர்ந்தெடுத்து விட்டு அதன் பின் புலம்புவதில் பலன் இல்லை ...

இவை எல்லாவற்றையும் விட மிக எளிய வழி ஓன்று இருக்கிறது..
இந்த பங்கு  சந்தையில் ஜெயிக்க' ..மிக அருமையான வழி அது ..

ஒரு 3 மாதம்  முதல் 6 மாதம் வரை எந்த TRADE உம்  செய்யாமல்,TERMINAL,ஒன்றும் ,CHART ஓன்று வாங்கி  கொண்டு (CANDLE மட்டும்)பாருங்கள் ..
தினசரி காலை 9.15 முதல் 3.30 வரை ஒரு 4 SHARES  மட்டும் எடுத்து கொண்டு அதனுடன் NIFTY ,BANKNIFTY FUTURE எடுத்து வைத்து கொண்டு (OPTION தேவை என்பவர்கள் தேவையான STRIKE PRICE வைத்து கொண்டு )ஒரு 3 மாதங்கள் கவனியுங்கள் ..
அதன் பின் உங்கள் தகுதிக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பணத்தை மாதம் ஒரு 10000 ரூபாயாவது ACCOUNT இல் போட்டு நீங்கள் கடந்த 3 மாதம் நீங்கள் செய்ய நினைத்த TRADE ஐ  அடுத்த 3 மாதம் TRADE செய்து பாருங்கள் ..இழப்பு வந்தாலும் பரவாயில்லை ..கண்டிப்பாக PAPER TRADE செய்ய கூடாது ..

ஒவ்வொரு தவறுக்கும் பணத்தை இழந்தால் அடுத்த அந்த தவறு செய்ய மாட்டோம்,,,இது தான் வெற்றியின் சூட்சுமம் ..எனது வெற்றியும் சாத்திய பட்டது இப்படிதான் ..நான் கற்று கொண்டது இப்படி தான் ...

இதன் பின் நீங்கள் எந்த பயிற்சியாளரையும் தேடவேண்டாம்..

இவை தான் பயிற்சியாளர்கள்  பற்றிய எனது கருத்து ..
இந்த பதிவில் தவறுகள் இருப்பின் கண்டிப்பாக சுட்டிகாட்டவும் .....

நிறைய  நண்பர்கள் என்னுடைய CHAT BOX இல் வந்து ஒவ்வொரு TIPS PROVIDER ,பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள் பேர் சொல்லி இவர் நல்லவரா ?இவர் கெட்டவரா ?என்று கேட்கின்றனர் ..

..இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது ..(நானும் கூட )..ஏனென்றால் நான் எனது பயிற்சி வகுப்புகள்  திட்டமிடுவது மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் தான்..அதன் பின் எவரேனும் தொடர்பு கொண்டால் அவர்களை அடுத்த மாதம் EXPIRY முடிந்த வுடன் FB இல் UPDATE போடுவேன் அப்போது வாருங்கள் என்று சொல்லிவிடுவேன் ..ஏனென்றால் மாதத்தின் முதல் 10 நாட்களில் OPTION இல் பெரிய அளவு TRADE செய்ய முடியாது ..அந்த நேரத்தில் வகுப்புகள் நடத்துகிறேன் ..10-30 தேதி வரை எனக்கு TRADE தான் முக்கியம் ..வகுப்பு எடுப்பதில் கிடைக்கும் பணத்தை  விட இங்கே TRADING இல் அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற சுயநலம் தான் ...இப்படி தான் இப்படிதான் எல்லோரும் இருப்பார்கள்..எனவே தயவுசெய்து இது போல் வந்து கேட்டு உங்கள் நேரத்தை இங்கே வீணாக்க வேண்டாம்..

இன்னும் சில நண்பர்கள் இவர் என்னை இப்படி ஏமாற்றினார் ,, ,இந்த TIPS PROVIDER உங்களை(ZFORMULA RAVI ) பற்றி குறை சொன்னார் என்று எனது COMMENT BOX இல் வந்து UPDATE செய்கின்றனர் ..,இன்னும் சிலர் என்னிடம் போன் செய்து இந்த பயிற்சியாளர் உங்களை பற்றி இப்படி அசிங்கமாக பேசினார் என்று வருத்த படுகின்றனர்...

தயவு செய்து என்னிடம் வந்தோ ,எனது COMMENT BOX இலோ பிறரை பற்றி குறை கூறுவதை தவிர்க்கவும்..இந்த பதிவுகள் நிறைய நண்பர்களை சென்றடைய வேண்டும் .இந்த கட்டுரை நிறைய நண்பர்களுக்கு விழிப்புணர்வை தரவேண்டும்..அவ்வளவு தான் ..பிறரை குறைகூற இது இடம் இல்லை..தயவு செய்து விட்டு விடவும் ..

 TIPS கொடுக்கும் ,TRAINING CLASS எடுக்கும் அன்பு சகோதரர்களுக்கு ,ஒரு சின்ன வேண்டுகோள் ,ஒரு சிலர்   எனது பெயர் குறிப்பிடாமல்,பெயர் குறிப்பிட்டு இங்கே என்னை பற்றி தவறாக COMMENT செய்வது,விமர்ச்சனம் செய்வது  எனக்கும் தெரியும் நான் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை ..நான் பதிலும் சொல்வதில்லை .

இங்கே TRADER களை ஏமாற்ற எனென்ன மாதிரி நீங்கள் முயற்சிகள் செய்து வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும்..

நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை..உங்களுக்கும் இந்த சந்தையில் ஏதாவது திறமை இருக்கும்,ஏதாவதுவழிகள் தெரிந்திருக்கும் இந்த சந்தையில் சம்பாதிக்க .. ..உங்களின் அந்த திறமையை நான் மதிக்கிறேன்.அதனால் தான் நான் பெயர் குறிப்பிட்டு யாரையும் குறை சொல்வதில்லை  ..

குற்றம் உள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும் என்று சொல்வார்கள் ...இங்கே பங்கு சந்தையில் இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று எழுதினால்,உங்களிடம் இருந்து ஏன் எதிர்ப்பு வருகிறது..???  அதற்கு உங்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தால்,,நீங்களே உங்களிடம் தவறு உள்ளது  என்பதை ஒப்பு கொள்வதாக தான் தோன்றுகிறது...

.நான் உங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதிற்கு முக்கிய  காரணம் " மார்க்கெட் இருக்கிறது " உங்களுக்கு பதில் சொல்ல..உங்கள் திறமை பொய்யென்று நிருபிக்க ..இங்கே மார்க்கெட் உள்ளது..

பங்குசந்தை  சொல்லும் இங்கே
யார் நல்லவர் என்று ??
யார் கெட்டவர் என்று ??
யார் திறமையானவர் என்று ?
யார் திறமையற்றவர் என்று..?

தோழமையுடன்
ZFORMULA RAVI

உங்களின் மேலான கருத்துகளையும், பகிர்வையும் வரவேற்கிறேன் ...

Friday, 17 July 2015

யார் தான்  நல்ல TIPS PROVIDER ..???

 உங்கள் டிப்ஸ் PROVIDER எப்படி பட்டவர்  என்று இரண்டு வாரங்களுக்கு முன் எழுதி இருந்தேன்..அதன் பின் நிறைய நண்பர்கள் அது பற்றி என்னிடம் CHAT இல் பேசினர்  ..இதுவும் போக இன்னும் சில நண்பர்கள் TIPS PROVIDER பற்றி,TRAINING CLASS எடுப்பவர்கள் பற்றி கடுமையாக திட்டி தரக்குறைவாக எழுதி விவாதித்து வருகின்றனர் ... அந்த விவாதத்தில் அவர்கள் முன் வைக்கும் ஒரு சில விஷயங்கள் திரும்பவும் தவரான பாதையை நோக்கி TRADER களை வழிநடத்துவது போல் எனக்கு தோன்றுகிறது...எனவே அது பற்றிய ஒரு பதிவு தான் இது ..

 TIPS PROVIDER  பார்த்து இவர்கள் கேட்கும் கேள்வி நீங்கள் உண்மையான TIPS PROVIDER என்றால் உங்கள் ஒரு மாத TRADE BOOK காட்டுங்கள் ??,ஏன் உங்கள் TIPS  க்கு நீங்கள் TRADE செய்ய மாட்டீர்களா ??நீங்கள் கொடுக்கும் TIPS க்கு மற்றவர்கள் தான்  TRADE செய்ய வேண்டுமா ???
இந்த கேள்விகள் நியாயமான கேள்விகள் போல் தோன்றலாம்..நீங்களும் இதே கேள்வியை TIPS PROVIDER களை பார்த்து கேட்க நினைத்திருக்கலாம்  ???
உங்களின் இந்த கேள்விக்கெல்லாம் இங்கே பதில் தரலாம் என்று நினைக்கிறன் ..இந்த பதில் எனது TRADING அனுபவத்தில்,மற்றும் முன்பு TIPS கொடுக்கும் போது கிடைத்த அனுபவத்தை வைத்து எழுதி உள்ளேன் இது எனது கருத்து மட்டுமே ..

TIPS PROVIDER ஐ பார்த்து ஒரு மாத TRADE BOOK கேட்கிறார்கள்..
ஒரு  TIPS PROVIDER ஒரு மாத TRADE BOOK காண்பித்தால் அவர் நல்லவரா ???
உதாரணமாக ..(உதாரணத்திற்கு மட்டும்..)
இங்கே நான் (ZFORMULA RAVI )TIPS கொடுப்பவனாக இருக்கிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் ...நான் ஒரு மாத TRADE BOOK (இலாபத்தோடு )இங்கே UPDATE செய்து விட்டால் நான் நல்ல TIPS PROVIDER  ஆகிவிடுவேனா ??..உடனே எல்லோரும் என்னிடம் சேர்ந்து TIPS வாங்க ஆரம்பித்து விடுவீர்கள் சரி..

அப்படியே நான் இங்கே காண்பித்த அந்த மாதம் நன்றாக இருந்த என்னுடைய (TRADE BOOK ) காரணமாக என்னிடம் நீங்கள் பணம் கட்டி சேருகிறீர்கள் ..அடுத்த மாதம்  நான்  கொடுத்த  TIPS நிறைய FAIL ஆகி உங்கள் முதலீடு மொத்தமும்  இழந்து விடுகிறீர்கள் ..  அப்போதும் இவர் போன மாதம் நன்றாக TRADE செய்திருக்கிறார்  ..இந்த மாதம் தான்  இப்படி தவறாக போய்விட்டது..என்று எதுவும் சொல்லாமல் இவர் நல்ல TIPS PROVIDER என்று அப்போதும் சொல்லுவீர்களா ????
மாட்டீர்கள் தானே ???அப்புறம் ஏன் TRADE BOOK காட்டுகிறவர் நல்லவர் என்பது போல நினைகிறீர்கள் ..
உங்களுக்கு TRADE BOOK மூலம் தான்  ஒருவர்  நல்லவரா?கெட்டவரா ? என்பது தெரிய வேண்டுமா ?

எனது நண்பர் ஒருவர் சென்னையில் மிக பெரிய SUBROKER அவருக்கு கீழ் சுமார் 800 CLIENTS TRADE செய்து வருகின்றனர் அவரது CLIENT களில் சுமார் 3 கோடிக்கு மேல் ACCOUNT இல் பணம் வைத்து TRADE செய்பவர்கள் சுமார் 16 பேர் இருகின்றனர் ..அவர்களது ACCOUNT இல் பெரும்பாலும் இழப்பே வராது .. நான் அந்த நண்பரிடம் சொன்னால் தினமும் மாலை 3.35 க்கு யாருடைய ACCOUNT இலாபத்தில் இருக்கிறதோ அந்த TRADE BOOK  ஒரு நான்கு அல்லது ஐந்து தினசரி அனுப்பி வைப்பார் ..அதை ID ஐ மட்டும் மறைத்து விட்டு இங்கே UPDATE செய்து காண்பித்தால் போதுமா ??? நான் நல்ல TIPS PROVIDER ஆகவோ ,நல்ல TRAINING CLASS  TEACHER ஆகி விடுவேனா ???
பின் எப்படி TRADE BOOK ஐ நீங்கள் அளவு கோலாக வைக்கிறீர்கள் ??

8000-10000 கோடி ரூபாய்களை நிர்வாகம் செய்யும் MUTUAL FUND திட்டங்களே முந்தைய(10 ஆண்டு கால 15 ஆண்டு கால) இலாபம்.. வரும் காலத்தில் கிடைக்கும் என்பது உறுதி கிடையாது என்று அறிவிப்பு கொடுத்து தான் இங்கே அவர்களது MUTUAL FUND  UNIT களை விற்பனை செய்கின்றனர் ,,,விளம்பரம் செய்கின்றன..  நீங்கள் கடைசி ஒரு மாத TRADE BOOK  வைத்து உங்கள் TIPS PROVIDER ஐ தேர்வு செய்ய நினைக்கிறீர்கள் ..எவ்வளவு பெரிய முட்டாள் தனமான முடிவு இது ????

கொஞ்சம் யோசித்து பாருங்கள்..

உங்கள் TIPS க்கு நீங்கள் TRADE செய்ய மாட்டீர்களா ??/ ஒரு TIPS PROVIDER ஐ பார்த்து நீங்கள் கேட்கும் பெரிய  முட்டாள் தனமான கேள்வியே இது தான் ..
ஒருவன் TRADE செய்கிறான் என்றால் அவன் ஒரு நல்ல TIPS PROVIDER ஆக இருக்க முடியாது..எப்படி என்று நீங்கள் கேட்கலாம் ..

ஒரு சின்ன உதாரணம் இங்கே ..நான் பயிற்சி வகுப்புகள் எடுத்த உடன் முதல் BATCH இல் பயின்றவர்களுக்கு ஒரு FB CHATING இல் ஒரு GROUP (ZFORMULA STUDENTS ) என்று அமைத்து கொடுத்தேன்..அவர்கள் இந்த FORMULA எப்படிசந்தை தினசரி எப்படி செயல் படும் என்பதை கலந்துரையாடி NIFTY MOVEMENT பற்றி விவாதிட்டுமே என்று.... ஆனால் அங்கு 2ஆம் நாள் எங்களது ZFORMULA படி மார்க்கெட் மேலே போகவேண்டும்..ஆனால் அங்கெ இருந்த 7 நண்பர்களும் நமது ZFORMULA VIEW படி MARKET மேலே போக போகிறது என்று சொல்ல ஒரு சகோதரர் மட்டும் இல்லை CHARTஇல் CANDLE  WEAK ஆக உள்ளது ...மார்க்கெட் கீழே வரும் என்று சொல்ல மற்ற நண்பர்கள் ZFORMULA வை நம்பவா ?இல்லை அந்த நண்பர் சொன்னபடி CHART ஐ நம்பவா என்று குழம்பி போய் அன்று TRADE ஏதும் செய்யவில்லை .முடிவில் எங்களது ZFORMULA படி MARKET மேலே சென்றது..

மாலை MARKET WEAK ஆக இருக்கும் என்று சொன்ன அந்த நண்பரிடம் PHONE செய்து கேட்கும் போது தான் தெரிந்தது அவர் 2 நாளுக்கு முன்பே 80000 ரூபாய்க்கு NIFTY PUT OPTION வாங்கி  வைத்து இருக்கின்றார் ..அதனால் இங்கே அவர் பார்க்கும் எல்லா VIEW வுமே இங்கே மார்க்கெட் இறங்க போகிறது என்பதை தான் காட்டும் ..ஏனென்றால் அங்கே அவரது பணம் 80000 ரூபாய் PUT OPTION இல் முடங்கி போய் உள்ளது ..இங்கே மார்க்கெட் இறங்கினால் மட்டுமே அவரது முதலீடு திரும்ப கிடைக்கும் இந்த இடத்தில் அவரது மனம் எப்படியாவது மார்க்கெட் இறங்கவேண்டும் என்று தான் வேண்டும்..தேடுவது எல்லாம் எந்த VIEW வந்தால் மார்க்கெட் இறங்கும் என்பதாக தான் இருக்கும்..

இங்கே ஒருவேளை அவர் எந்த POSITION உம் (அந்த PUT OPTION )இல்லாமல் இருந்தால் அவர் அன்று எங்களது ZFORMULA VIEW படி மார்க்கெட் ஏறும் என்பதை அவரும் சொல்லி இருப்பார்..

இதே போல உங்கள் நல்ல (TRADE செய்யும் )TIPS PROVIDER ஒரு 50000 ரூபாய்க்கு PUT OPTION வாங்கி வைத்து இருந்தால்..அவர் எப்படி உங்களுக்கு மார்க்கெட் ஏறும் போது CALL OPTION வாங்க சொல்லுவார் ?? அவர் கவனம் எப்படி அவர் வைத்துள்ள PUT OPTION விலை ஏறும் என்பதை யோசிக்குமா ? அல்லது உங்களுக்கு TIPS கொடுத்து உங்களை இலாபம் சம்பாதிக்க வைக்க வேண்டும் என்பதை யோசிக்குமா ????அவர் எப்படி நடுநிலையோடு TIPS கொடுக்க முடியும்???

அடுத்த உதாரணம்
இன்று மார்க்கெட் +20 புள்ளிகள் + இல் இருக்கிறது அது +140 புள்ளிகள் போகும் சூழ்நிலை இருக்கும் போது உங்கள் TIPS PROVIDER  TIPS கொடுத்து தவருதலாக NIFTY FUTURE விற்க  சொல்லிவிட்டார் ..அவரும் ஒரு 1000 QUANTITY விற்று விட்டார் ...மார்க்கெட் +60 புள்ளிகள் போகும் போது, அவர் கொடுத்த SL TRIGGER ஆகிவிட்டது  ..அவரிடம் டிப்ஸ் வாங்கிய உங்களுக்கும் இழப்பு அவருக்கும் இழப்பு..   சரி இந்த சுழலில் அவர் இழந்த 40000 ரூபாய் எப்படி அவரை அடுத்த டிப்ஸ் ஐ நிம்மதியாக கொடுக்க வைக்கும்???
உங்கள் TRADING இல் ஒரு தவறு நடந்து ஒரு இழப்பு வந்து விட்டால் ,அன்றைக்கு அடுத்தடுத்து எல்லாமே இழப்பாக முடியும்..நீங்களே இதை உணர்ந்திருப்பீர்கள்  ..
ஒரு இழப்பில் இருக்கும் ஒருவர் எப்படி முழு திறமையோடு அந்த இழப்பை மறந்து MARKET பற்றி கணிக்க முடியும்???

நீங்கள் கவனித்து இருக்கலாம் ..BROKER OFFICE இல் யாரோ ஒரு TRADER சும்மா வந்து உட்கார்ந்து இருப்பார் ..TRADE செய்ய மாட்டார் (பணம் இருக்காது)
ஆனால் அவர் சொன்ன STOCK எல்லாம் ஏறும் ??அவர் சொன்ன STOCKS எல்லாம் இறங்கும் ..அதுவே அவர் பணம் போட்டு TRADE செய்யும் போது அங்கெ அவர் தோற்று போவார் ..ஏனென்றால் நேற்று அவர் சொல்லும் போது அவரிடம் எந்த பணமும் இல்லை ..எந்த POSITION உம இல்லை அதனால் அவர் நடுநிலையுடன் இருந்தார்..அவர் சொன்னது நடந்தது..இன்று அவர் TRADER ஆக மாறும் போது இங்கே அவரது ACOUNT இல் உள்ள பணம் இழந்துவிட கூடாது என்று பதட்டத்தில் தவறு செய்கிறது ..

இன்னும் சொல்ல போனால்

பங்கு சந்தையை நிர்வாகம் செய்யும் SEBI யின் உத்தரவு படி ஒருவர் SUBBROKER ஆக ஒரு நிறுவனத்தில் சேரும் போது ,அந்த நிறுவனத்தில் அவர் பெயரில் TRADING ACCOUNT தொடங்க முடியாது ..NCFM பயிற்சி முடித்து DELEAR ஆக ஒருவர் பணியில் சேரும் போது அவருக்கு அந்த நிறுவனத்தில் TRADING ACCOUNT இருக்க கூடாது..இதுவெல்லாம் எதற்கு தெரியுமா ?? அவர்களுக்கு ACCOUNT இருந்தால் அங்கே  அவர்கள் TRADE செய்வார்கள்..அவர்கள் கவனம் அவர்களின் POSITION மீது மட்டும் தான் இருக்கும் ..மேலும் அவர்களின் TRADING சிந்தனையை அங்கே  TRADE செய்ய போகும் CLIENT மீது திணிக்க வாய்ப்புள்ளது..இதனால் இங்கே CLIENT  பாதிக்க பட கூடாது என்பதற்காக தான் ..

பெரிய BROKING நிறுவனங்களில் எனது நண்பர்கள் சிலர் பணி செய்கின்றனர் ..(ANALYST ஆகவும் DELEAR ஆகவும் )இங்கே அவர்களது பணி செய்யும் அறைக்குள் அவர்களின் செல்போன் க்கு அனுமதி கிடையாது..ஏனென்றால் இவர்கள் வேறு எங்காவது ACCOUNT வைத்து இருந்து PHONE மூலம் ORDER போட்டு TRADE செய்தால் அவர்களது கவனம் சிந்தனை அவர்கள் அங்கு அவர்களது சொந்த அக்கௌண்டில்  வாங்கிய அவர்களது SHARE இன் மீது தான் இருக்கும் ..இங்கே CLIENT மீதான இவர்கள் கவனம் குறையும் என்பதற்காக தான்...

இப்படி  TRADE செய்து கொண்டே TIPS கொடுக்கும்  போது இவ்வளவு பிரச்னை இருக்கும் போது எப்படி நீங்கள் TIPS  கொடுக்கும் நபர் TRADE செய்ய வேண்டும் நினைக்கிறீர்கள் ???

உண்மையில் ஒருவன் TIPS கொடுக்கிறான் என்றால் அவனால் TRADE செய்ய முடியாது ..ஒருவன் TRADER ஆக இருக்கிறான் என்றால் அவனால் நல்ல விதமாக TIPS கொடுக்க முடியவே முடியாது..இது தான் உண்மை..

இதெல்லாம் விட்டு விட்டு ஒருவன் TRADE BOOK காட்டினால் அவன் நல்லவன் என்றும் ..அவன் TIPS க்கு அவனே TRADE செய்பவனெல்லாம் நல்லவன் என்று நினைக்காதீர்கள் ..

இங்கே பிரச்சனை என்னவென்றால் நல்லவன் ஒரு மடங்கு என்றால் போலிகள் 1000 மடங்கு இருகின்றனர் அது தான் பிரச்சனை ..உங்களின் குழப்பத்திற்கு காரணமும் இதுதான்... இங்கே நீங்கள் பார்ப்பது எல்லாம் போலி என்பதால் நல்லது எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போனதன் விளைவு தான் இது..

இவ்வளவு பிரச்சனைகளை சொல்லிவிட்டு இங்கே தீர்வினை சொல்லாமல் விட்டால் இந்த கட்டுரை போலி TIPS PROVIDER க்கு சாதகமாக எழுதப்பட்டது போல் ஆகிவிடும் எனவே நல்ல TIPS PROVIDER யார் என்று  என்னிடம் கேட்டால்..எனது கருத்தின் படி...(கவனிக்க : இது எனது கருத்து மட்டும் தான் )

எவன் ஒருவன் தனது TRADE BOOK அல்லது CONTRACT NOTE UPDATE செய்கிறானோ அவன் உங்களை ஏமாற்ற தயாராகிவிட்டான் என்று அர்த்தம்..

எவன் ஒருவன் NIFTY ,STOCKS,FUTURES,OPTIONS,CRUDEOIL,GOLD,SILVER (ALL MCX,CURRENCY ,CURRENCY FOREX   )என எல்லாவற்றிலும் நான்  TIPS கொடுக்கிறேன் என்று சொல்கிறானோ..அவன் சொல்லுவது முழு பொய் ....யாராலும் எல்லா MARKET இலும் சிறப்பாக செயல்பட முடியாது ..

மார்க்கெட் ஆரம்பிக்கும் முன்பே LEVEL தருகிறேன் EXCEL SHEET இல் தருகிறேன் என்றால் அவர்களிடம்  உங்கள் பணத்தை இழக்க வேண்டாம்..மார்க்கெட் நடக்கும் போது டிப்ஸ் பெறுவது தான் உங்கள் பணத்திற்கு ஓரளவு உத்திரவாதம் ..

உண்மையான TIPS PROVIDER ஐ கண்டு பிடிக்க ஒரு எளிய வழி

உங்களிடம் TIPS தருகிறேன் 2 நாள் FREE TRIAL வாங்கி பாருங்கள் என்று சொல்லுபவரிடம் நீங்கள் கேளுங்கள் ப்ரீ TRIAL கொடுங்கள் என்று..

ஆனால் நீங்கள் ஒரு 3 STOCKS பெயரை சொல்லி அவர்கள் கொடுக்கும் FREE TRIAL  இந்த 3 STOCK இல் மட்டும் கொடுக்க சொல்லுங்கள் ..இல்லை அவர்கள் ஏதாவது ஒரு 3 STOCK (அவர்கள் இதற்கும் முன் நன்கு பயிற்சி பெற்ற STOCK ஆக இருக்கலாம் ) சொல்ல சொல்லி இந்த 3 STOCK MOVEMENT பற்றி சொல்ல சொல்லுங்கள் ,,,MOVEMENT என்றால் LEVELS அல்ல ..

இந்த 3 STOCK க்கும் LIVE MARKET இல் TRADE ஆகி கொண்டு இருக்கும் போது BUYING PRICE ,SELLING PRICE ,SL இந்த மூன்றும் அனுப்ப வேண்டும் 2 நாள் FREE TRIAL இல் இந்த 3 STOCKS இல் மட்டும் ஒரு 4 TIPS அவர் கொடுத்து 3 PASS ஆகி ஓன்று FAIL ஆனால் அவர் தான் சிறந்த TIPS PROVIDER ..
இந்த நபரை நம்பி நீங்கள் TIPS வாங்கலாம் ..

இது தான் நல்ல TIPS PROVIDER பற்றி எனது கருத்து..

TIPS PROVIDERS பற்றி பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள் பற்றி  எனது  மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன் ..இவை எனது கருத்துகள் தான் இது ...இதை நீங்கள் கட்டாயம் ஏற்று கொள்ள வேண்டியது இல்லை...இந்த கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் இந்த பதிவை பகிரவும் ..

தோழமையுடன்
ZFORMULA RAVI